10 செப்., 2014

கல்குறி நாவல்,,,,,(பாகம் 1)



         
 வெயில்சர்ப்பம் தீண்டலாள் வேப்பப்மர இலைகள் மஞ்சல் பாரித்து உதிர்ந்துக்கொண்டிருக்க.அடர்த்தியானநிழல்தேடி இடம்மாறி,மாறி அமர்ந்தனர். பாண்டியின் வகையறா/.
‘’யேன் வாத்தையே மதிச்சி வேணாத வெயிலே எல்லாரும் வந்துருக்கீங்க ஒங்கலே நெனச்சா சந்தோஷமா இருக்கு. ஆனா யென் மவனே நெனச்சாத்தான் மனசு கெடந்து அறுக்குது என்றார் பாண்டி.
கோடாலிக்கொண்டை காதில் சிகப்பு கல் பதித்து கடுக்கான் அணிந் திருக்கும் முதியவர் கழுத்தாடி யவாறு ‘’அறுக்காமே என்ன செய்யும் இதெல்லாம் நம்மே கொலம் கோத்துரத்துக்கு அடுக்குமா? கறியே திண்ணா எலும்பே கழுத்துலையா போட்டுகிட்டு வருவாங்க கலி முத்திப்போச்சிப்போ’’ என்றார் முதியவர்.

அந்த வார்த்தையில் பாண்டிக்கு நா வறண்டுப்போனது. வேம்படியில் குத்தவைதிருந்த பாண்டியின் சின்னாத்தா முறை உள்ளவள் சருகை மென்று வலது கன்னத்தில் ஒதுக்கிக்கொண்டு கடவாயில் சிவந்த வானிர் வழிய ‘’அய்யா பாண்டி சொல்றேன்னு கோவீக்கபுடாது வனத்துலே மேஞ்சாலும் எனத்துக்கு வந்து சேரனும் ஏறியடிச்சி எறவாரம்தாண்டுனாதாங்குறதுக்குதாவாரம்கூடமிஞ்சாது’’என்றாள்  சின்னாத்தா.

எல்லாவற்றையும்கேட்டறிந்தபாண்டிஅண்ணன்மாரியப்பனைப்பார்த் து ‘’ஏண்ணேநீஎன்னணேசொல்ரே’’எனக்கேட்டார்பாண்டி.

‘’நா என்னத்தேப்பா சொல்றது ஓம் பாடு ஓம் மவேன் பாடு நாளப்பின்னே நல்லது கெட்டதுன்னா செமக்க போறது நீயிம் ஓம் பொம்பளையும் ஊடாலே நான்எதுக்கு’’ என்றுபிடி கொடுக்காமல் பேசினார்மாரியப்பன்.

‘’ஏம்ப்பாஆம்பள துண்டு திரிச்சு பேசுரதுக்கு அவன் என்ன காட்டான் கறையானா? அவன் ஓம் தொம்பி பிள்ளே கெடையாது’’ என்றாள் பாண்டியின் அண்ணன் மணைவி காமாட்சி அந்த வார்த் தையில் ஈரம் இருப்பதை உணர்ந்தார்கள்.

பாண்டியும் மணைவி மாரியும். காமட்சி தொடர்ந்து பேசினாள். ’’இந்தா மச்சான் நல்லதோ கெட்டதோ நம்ம பயே ஆசப்பட்டுட்டான் அந்த புள்ளையும் அவனே நம்பி வந்துருச்சி இஷ்ட்டபட்ட ரெண்டு பேத்தயும் சேத்து வைக்கிறதுதான் மொற அதெ விட்டுபுட்டு இல்லாதே நொணனட்டியம் பேசி புள்ளைகலே எழந்துட்டு வெண்ண னைலே நிக்ககூடாது’’ என்று பாண்டியின் தலையில் பக்குவமாய் பாறாங்கல்லை போட்டாள் காமாட்சி.

இதில் சுதாரிப்பான பாண்டி உடல் சிலிர்க்க தண்ணுனர்ச்சியடைந் தார்.ஆனாலும்அதற்குஅடைப்பு போட அண்ணக்கொடி என்ற பாண்டி யின் தங்கச்சி மகன் இடைபுகுந்து பேசினார். ‘’மாமா பொம்பளே நாட்டாமே பொழப்புக்கு ஆகாது ஓங்க மகேன் நம்ம புள்ளை கூட்டிக் கிட்டு வந்திருந்தா கட்டிவைச்சிட்டுவாரவனேவாடாதவிடிக்கேன்னு பாத்துக்கிறலாம் அவேன் ஊறா பூத்தையலே எப்பிட்டு வருஷிறிக் கான் அதுவும் கோந்திய பூத்தைய வெளங்குமா?

‘’அய்யா மருமனே கோந்திச்சின்னா என்ன? மாக்கச்சின்னா என்ன? அவீங்க தூக்குற அரிவாலும் வெட்டும் நம்மே தூக்குறே அரிவாலும் வெட்டும்.அதுக்கு ஒசந்தவேன் தாழ்ந்தவேன்னு தெரியாது’’ என்றார் பாண்டியின் மாமா.

‘’முடிவாஎன்னதான்சொல்லுறிங்க’’என்றார்பாண்டி.

‘’ஏணே ஊரு ஒலகமெல்லாம் பஞ்சாயாத்து தீக்குறே ஒனக்கு நாங்க யேசனே சொல்லனுமா? மறுமகே வைச்சி பொழைக்க போறது மதினி அதுட்டத்தான் நீ கேக்கனும்’’என்றாள்பாண்டியின் தங்கச்சி பாப்பா த்தி.

‘’இது வாஸ்த்தவமான பேச்சு என்ன மய்னி எங்க அக்கா சொன்னது காதுலே விழுந்துச்சா? என்றார் தங்கராசு. தரையில் குச்சியால் குத்தி க்கொண்டிருந்த பாண்டியின் மணைவியும், குமாரின் அம்மாகிய மாரி திடுக்கிட்டு கூட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு தனது கணவனின் முகமறிந்து ‘’அந்தாளு என்னே சொல்லுதோ அதான் என் முடிவும்’’ என உறவுகள் எறிந்த கல்லை கணவன் பக்கமாய் உருட்டிவிட்டாள் மாரி.

அனைவரின் வாய்பார்த்த குமாருக்குவார்த்தைகள் வகைப்படவில் லை ஆனால் சுனிதாவின் குரல் மட்டும் துள்ளியமாய் ஒலித்துக் கொண்டே இருந்தது.

‘’யாரு என்ன சொன்னாலும் நாமே மெட்ராசுக்கு போயிறனும் இல்லாட்டி நம்மலே பிரிச்சுருவாங்க அப்படி நடந்துச்சுன்னா நான் திரும்ப வீட்டுக்கு போக முடியாது அப்படியே போகனுமுன்னு நெலமே ஆச்சுன்னா பொணமாத்தான் போவேன் என்ன முடிவெ டுத்து நாமே புறப்பட்டமோ அதே செய்றதுக்கு வழியபாருங்க’’ என்று சுனிதா சொன்ன வார்த்தை கற்றையின் கூர்மை இதயத்தை குத்தி குடைந்தது அதனால் அந்த இடத்தில் ஒரு நொடிகூட நிற்க முடியாமல் பெரியப்பா வீட்டில் தங்க வைத்திருக்கும் சுனிதாவை காண்பதற்க்கு ஓடினான் குமார்.

‘’என்னப்பா நம்மே பேசிக்கிட்டு இருக்கோம் யாருக்கு வந்த விருந்தா ஓடுறான்’’என்றார்மாரியப்பன்.

‘’நீஒரு கூறுக்கெட்ட ஆளுயா அந்த புள்ளையே தனியா விட்டுட்டு இவனே மட்டும் கூட்டிக்கிட்டு வந்தா நிப்பானா’’என்றாள் மாரியப்ப னின் மணைவி காமாட்சி.

‘’அதான் ஒம் மகே முருகாத்தாவே தொனைக்கி நிப்பாட்டிட்டு த் தானே வந்தோம்’’ என மணைவிக்கு விளக்கம் சொல்லிவிட்டு பாண்டியை பார்த்து ‘’சரிப்பா தம்பி ஆசப்பட்டு கூட்டிகிட்டு வந்துட் டான் நீயும் ஒம் மகேன் போக்குக்கே விட்டுபுடிச்சு கூட்டுக் கிட்டு வந்துட்டே எல்லாருமா சேந்து பேசி முடிச்சுரலாம் ஆனா நம்மலோட அந்த புள்ள ஒன்னா மன்னா பொழங்குமா?’’ ‘’எல்லாம் தெரிஞ்சுதானே வந்துருக்கும் அந்த புள்ள’’என காமாட்சி வக்காளத்து வாங்கினாள் காமாட்சி. எல்லாவற்றையும் கவனமாக கேட்ட பாண்டிக்கு யேசனை தட்டியது. ’’சரி நான் சொல்றத எல்லாரும் கேளுங்க நம்ம பாட்டேன் முப்பாட்டேன் காலத்துலே இருந்து மனுஷனுக்கு மனுசன் முடிவேடுக்க முடியாததே குறிகேட்டு தெரிஞ்சுகிறுவோம் அதேஆண்டி மொத அரசன் வர சொல்லி அதுபடியே நடக்க வப்போம் அது மாதிரி ஊருக்கு சொன்னகுறியே நமக்கும் பயன்படுத்தினா என்னே? இதுக்கு நீங்கத்தான் மொகந்தரம் சொல்லனும்’’என்றார்பாண்டி.

‘’ கொலசாமியே நெணச்சிக்கிட்டு குறியே வைப்பா வள்ளுவன் வாக்கு தவர்னாலும் குறவன் குறி தப்பாகாதுப்போ’’என சிகப்புக்கல் கடுக்கான் அணிந்த பெரியவர் சொன்னார். அதற்கு அனைவரும் ஆமோதித்தனர். அதன்படி பாண்டி குறிக்கான ஏற்பாடின்படி அனைவரும் ஒவ்வெரு கல் பொறிக்கிவந்து தருமாறு வேண்டினார். அவரர் அமர்ந்த இடத்திலிருந்து சின்ன சின்ன கற்களை பொறிக்கி வந்து கொடுத்தனர். அவைகளை எண்ணி பார்க்காமல் இரு உள்ளங் கைகளிலும் வைத்து ஒரு கைகளிலிருந்து மற்றோரு கைகளில் மாற்றி போட்டுக்கொண்டே இருகைகளையும் விரித்துக் கொண்டு அனைவரையும் சுற்றியடித்துப்பார்த்தார்.கூட்ட மத்தியில் ஏழு வயது பெண் பிள்ளை தாயாரின் தலை முடியை வலது கையால் பற்றிக்கொண்டு இடதுகை பெருவிரலை சப்பியபடி நின்றிருந்தாள். அந்த பிள்ளையை பாண்டி பார்த்தார் அந்த பார்வையறிந்து அருகே வந்து இரு கைகளில் உள்ள கற்களை உற்றுக் கவனித்துவிட்டு வலது கையில் உள்ள கற்களில் ஒன்றும், இடது கைகளில் உள்ள கற்களில் ஒன்றுமாய் எடுத்து பாண்டியின் காலடியில் வைத்துவிட்டு அம்மாவிடம் சென்று மறுபடி விட்டதை துவங்கினாள்.

அமர்ந்திருந்த கூட்டம் எழுந்து நின்று கற்களை பார்த்தார்கள். ஒருகல் கூலாங்கல், மற்றோரு கல் சுண்ணாம்புக்கல். பாண்டியும் எழுந்து நின்று கண்களை மூடி குலத்தெய்வத்தை வேண்டினார். கிழக்கில் கெளளி உச்சுக்கொட்டியது. பாண்டி கைகூப்பி வணங்கிய படி முனுமுனுத்தார். உடல் சிலிர்த்தது. வடக்கிலிருந்து வந்தது ஒரு ஈ தெற்கிலிருந்து வந்தது மற்றோரு ஈ. இரண்டும் இருகற்களையும் வட்டமடித்தது. ஈ சுழல, இருக்கும் வேம்படிகள் அசைய சிறுகாற்று பெரும் காற்றாய் சுழன்றடிக்க வெப்ப மண்டலம் குளிர்ந்து மேற்கு வானில் வெள்ளி நிறக்கீறல் உருவாகி கரும்பாறை உடைந்து உருகியது. வெடித்து கிழிந்திருந்த மண் ரேகை அழிந்து மண்ணுக் கேற்ற நிறத்தில் உயிர் நீர் உருண்டோடியது. மழையின் தாக்கம் யாரையும் அப்புறப்படுத்தவில்லை அவரவர் கட்டுண்டவர் களாய் நின்றிருக்க மழைபாம்பின் சீற்றத்துக்கு ஈக்கள் பயமற்று சுழன்றப்படி ரீங்காரம்விட்டது மழை மிருகத்தின் உருமலையும் மிஞ்சியது. வானில் வட்டமிடும் வல்லூறுகளில் இருந்து புற்றிசல்வரை மழையின் தாக்குதலுக்கு சிறகுகள் இழந்து சிதைவதற்கு அஞ்சி மறைவிடம் தேடி பதுங்கிக்கொள்ளும். ஆனால் கற்களில் அமர வட்டமிடும் ஈக்கள் மழைக்கு அஞ்சாமல் தன்னை நம்பி காத்திரு க்கும் மக்களின் உண்மையான வேண்டுதலு க்காக சிறிய சிறகுகள் மழைதுளிகளைசிதரியடித்தபடிகற்களில்அமரஎத்தனித்துஇறங்கியது.

பாண்டி மனதுக்குள் வேண்டியது கூலாங்கற்களில் ஈ உட்கார்ந்தால் பெண் நமக்கு சுண்ணாம்பு கற்களில் அமர்ந்தால் அவள் பெற்றோர் வசம் ஒப்படைப்பது. மழைஅடர்த்தியில் எதிரே உள்ளது எதுவும் தெரியவில்லை ஆனால் கற்கள் மட்டும் தெளிவாக தென்ப்பட்டது. காற்றின் வேகம் முன்பை விட உக்கிரமானது அதற்கு ஈடுக்கொடுக் கும் வகையில் மழையும் போட்டியிட்டது.

இவைகளுக்கு முன் மக்களின் உறுதியான நம்பிக்கை கல்லின் மீது படிந்திருந்தது. வடக்கிலிருந்து வந்த ஈ சுண்ணாம்பு கல்லை சுற்றி யது. தெற்கிலிருந்து வந்த ஈ இலக்கின்றி வெறுமனே இருகற்களுக் கும் இடையில் இறங்குவதும், பின்பு மேல் நோக்கி பறப்பதுமாய் வித்தைகாட்டிக் கொண்டிருந்தது. காத்திருந்த மக்களில் ஒரு மூதாட்டி குளிரின் தாக்குதலால் நடுங்கிக்கொண்டே பாண்டியை பார்த்து.
‘’ஏப்பா பாண்டி நீ என்னா நெனச்சிருக்கியோ எனக்கு தெரியாது ஆனா குறி தப்பா சொல்லாது பேசாமே புள்ளைய பொருள் காரங் கிட்டே ஒப்படைக்கிறது நல்லதா படுது’’ என குளிரில் நடுங்கிக் கொண்டே கூறினாள். அந்த வார்த்தை மழை இரச்சலையும் மீறி அனைவரையும் சென்றடைந்தது.

கிழவியின் வார்த்தை உண்மையாகி போவதற்க்கான சூழல் ஏற்ப்படத்தான் செய்தது. கொட்டிய மழை நீரில் குறிக்கற்கள் மூழ்கிக் கொண்டிருந்தது. ஈக்கள் மலைக் குன்றுகளில் இறங்குவ தைப் போல் இறங்குவதும் இறங்க முடியாமலும் தத்தளித்தது.

ஆனால் பாண்டிக்கு நம்பிக்கை இருந்தது. நின்றிருந்தவர்களின் கெண்டை கால்களை நீர் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. வேப்ப மரமு ம், புங்கைமரமும், கொண்றைமரமும், கிலைகள் ஒடிய ஆடியது குறிக்கல் எடுத்துவைத்த சிறு குழந்தை தாயாரின் முந்தானைக்குள் புதைந்து நின்றது. நீரில் குறிகற்கள் தனது அங்கத்தின் கடைசி நுனையும் தண்ணீர்க்குள் மூழ்கிக்கொண்டுயிருந்தது. வடக்கு ஈ தன் எண்ணத்தை உறுதிபடுத்திக்கொண்டு சல்லேன்று கூலாங் கல்லில் தனது மெல்லிய கால்களை பரப்பி நின்றது.

பாண்டி நெடுசாங்கிடையாக கல்லுக்கு முன் விழுந்து வணங்கினார். சனம் ஆனந்த கூத்தாடியது.



1 கருத்து:

vimalanperali சொன்னது…

வணக்கம் தோழர்,தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டிருக்கிறது,
விபரம்.www.vimalann.blogspot.com