2 ஜூலை, 2016

வெயில் நதி,,,,,,,

                                        
ஞாயிற்றுக்கிழமையின் இறுதி துளிகள் துளித்திடும், தேவாலயத்தின் மணி யோசையில்உணர்த்தியது. அம்மன் கோயில் திடல் ஆயிரமாயிரம் தடயங் களை சுமந்தப்படி மொனமாய் உறைந்து இருந்தது.

அன்னை பராசக்தியும், வெயிலுகந்தம்மனும், அன்றேய தினத்தில் பக்தர்கள் வைத்துச் சென்ற கோரிக்கைக்களை ஆலோசனை செய்துக்கொண்டிருக்க, வாலசுப்பிரமணியனும்,சர்வேஸ்வரனும், நவீன திருவிளையாடலக்கான ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்க, தன்னொளி யற்ற நிலா பந்து, மேற்கின் வான் திடலில் உருண்டுக் கொண்டுயிருக்க பாலு தன் மண்ணிலிருந்து தூக்கி எறியப்பட்டவனாக நகர பேரூந்து நிலையத்தை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தான்.

வந்தவன் நிலைக்கொள்ள, இருந்தவன் இடம்பெயரும் அவலம். குடும்பத் தலைவனாய் இருந்தாலும், குழந்தையைப் போல் ஏங்கி, ஏங்கி அழுதப்படி கண்ணீர் மல்க நடந்தான்.

அரசு பணியில் இடம் மாறுதல் என்பது எழுதப்பட்ட சாசனம்தான். ஆனால் அது பதவி உயர்வு, விருப்ப இடம் மாற்றம் என்பதுக்கு மட்டும் பொருந்தும். ஆனால் அவனுக்கு ஏற்ப்பட்டது தண்டனை இடம் மாற்றம். அதுவும் செய்யாத ஒன்றுக்காக. அதன் தாக்கம்தான் குமாரை மன உளச்சலுக்கு ஆளாக்கி கையாலாகதவனாய் கலங்க வைத்தது.

பேரூந்து நிலையத்திற்கு வந்தான். எதிரே உள்ள அமிர்தராஜ் திரையரங்கத்தில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும், இரவுக் காட்சியின் இறுதிக்கட்டத்தின் ஒலி அரங்கத்தையும் மீறி நிசப்பத்தமான வெளிச் சூழலில் ஒலித்துக்கொண்டி யிருந்தது.

பேரூந்தின் வடக்கு வாசளில் தேனீர் கடை ஒன்று மெலிதான ஒளியில் இயக்கத்திலிருந்தது.

குமார் கணக்குப் போட்டான் அலுவலகத்தில் பணி மாறுதலுக்கான ஆணை கொடுத்தன்றே மாத சம்பளமும், கிடைத்திருந்தது.ஆனால் அது அந்த மாதத்திற்க்கான மாதாந்திர வட்டி கட்டியதிலையே கரைந்து போனது. அடுத்த மாதத்தை கடத்துவதில் என்ன செய்யலாமென்று சிந்திக்கும் வேலையில் பணி மாறுதல் ஆணை அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டியது போக மீதி இரண்டு தினங்களை கடத்துவதற்குதான் மிஞ்சும். மீந்த நாட்களை கடத்த மீண்டும் கந்து வட்டி கடவுள்களைத்தான் தரிசிக்க வேண்டும். அதே போன்று அவர்களிடம் சென்று மீண்டும் பணம் கேட்டால் அவர்கள் இரு தினம் கழித்து அலுவலகத்தில் வந்துதான் கொடுப்பார்கள். அப்போது அவன் பணியில் இருக்க வேண்டும்.

பாலு அடுத்த தினத்தில் இருக்க போறது இல்லை அதே நேரத்தில் அவர்களிடம் உண்மை சொன்னால் ‘’முதலை கட்டிவிட்டு போ’’என்று சட்டையை பிடித்து உட்கார வைத்துவிடுவார்கள்.

இந் நிலையில் ஆறு ஆண்டு காலமாய் அரசு பணத்தில் அவனிடம் முதலிடாய் விஞ்சி நிற்பது அவனை சுமந்துச் செல்லும் துருவேறிய மிதி வண்டி மட்டும்தான். அதை கடந்த மூன்று நாட்களாய் விற்பனை செய்ய முயற்சிச் செய்தான்.

மிதி வண்டி பழுதுப் பார்க்கும் கடைகளுக்குச் சென்று வாகனத்தை விற்பனை செய்திட கேட்டான்.

‘’வண்டியை நிறுத்திட்டு போ’’ எனச் சொல்வார்கள். அதன்படி மூன்று தினத்தில் ஆறு கடைகளில் நிறுத்தித்தான் பார்த்தான். போனியாகவில்லை கமிசனும் கொடுப்பதாக உறுதியளித்தும் யாரும் வாகனத்தை வாங்கி அவனின் தற்காலிக பொருளாதார பள்ளத்திலிருந்து மீட்க வில்லை. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கேட்பதற்கு வரட்டு கெளரவம் வதம் செய்தது.

பொறுத்து பார்த்தான் ஒன்றும் முடியாமல் பழைய தளவாடங்களை வாங்கி விற்கும் அங்காடியின் நியாய தராசில் மிதி வண்டியை தூக்கி வைத்தான். தேய்ந்து உதிர்ந்துப் போன எடைக் கற்கள் முப்பது கிலோ என்று காட்டியது.

கிலோ ஐந்து ரூபாய் என பேரம் பேசி, நூறு ரூபாய்க்கு, பத்து ரூபாய் தாள்களாகவும் ஐம்பது ரூபாய்க்கு சில்லரை காசுகளாகவும் அள்ளிக் கொடுத்தார் அங்காடிக்காரர். அதை மூன்று நாட்களின் ஏக்கத்தோடு பெற்றுக் கொண்டு ஒரு வாரத்திற்கு தேவையான உணவு பொருள்களை சேகரித்து வீடு கொண்டு போய் சேர்த்தான். அந் நொடியில் துவங்கியது அவன் வீட்டின் ரேசன் வாழ்க்கை.

குடும்பத்தலைவி கண்ணீர் மல்க ஐம்பது ரூபாய் கொடுத்து அந்த இரவில் வழியனுப்பி வைத்தாள். எப்படி வாழ வேண்டியவள் நம்மிடம் வந்து இப்படி கஷ்ட்ட படுகிறாளே என்ற குற்ற உணர்வோடு புறபடுகையில் இவைகள் பற்றி எவ்வித பிரக்ஞ்சையற்று நம்பிக்கையோடு மூன்று குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தன.

சின்னவன் வடக்கு சுவர் பக்கம் புரண்டுப்படுத்தான் சுவற்றிலிருந்து ரத்தக் காட்டேரியான மூட்டை பூச்சி அவசரமாய் இறங்கி அவன் டிராயரில் ஏறியது. அதை கவனித்த குமார் அவசரமாய் அதை பிடித்து சுவற்றில் வைத்து நசித்தான்.

‘’இருக்குற மூட்ட பத்தாதுனா நசுக்கிறீங்க’’ என்றாள் அவன் மனைவி. பதிலேதும் சொல்லமல் வெளியேறியது. தற்போது அவன் மனதை குத்தியது.

ஐம்பது ரூபாய்க்கு கணக்குப் போட்டான். முந்திய நாள் அலுவலக நண்பர் மதுசூதனிடம் கேட்டுவைத்ததை நினைத்துப் பார்த்தான்.

‘’நாகர்கோவிலுக்கு துருவா போன முப்பது ரூபா, திருநெல்வேலி போயி மாறினா முப்பதெட்டு வரும்’’என மது சொன்னதை நினைத்தான். முப்பத்தி யெட்டு போனாலும் மீதி பனிரெண்டு ரூபாய் இருக்கும். ‘’டீ மூனு, சிகரெட், ஒன்னு பத்து, செய்யது பீடி ஒருகட்டு, ஒத்த ரூபாய்க்கு வாங்கிக்கிட்டா நாள மறுனா வர தேறும்’’ என கணக்குப் போட்டபடி தேனீர் கடை வாசளில் நின்று பார்த்தான்.

கடையின் உரிமையாளர் கல்லாவில் அமர்ந்தப்படி கோடாங்கிக்கு ஆடுப வராய் இருந்தார். பாய்லர் முன்பு நிற்கும் தேனீர் தயாரிக்கும் சுல்தான்பாய் தூக்கத்தை விரட்ட சிப்பி பீடியை பற்களில் பற்றியப்படி புகைவிட்டுக் கொண்டிருந்தார்.

‘’ஒரு டீ’’என்றான்.

பீடியை இழக்க தயாராக இல்லத பாய் அப்படியே பற்களில் கவ்வியப்படி தேனீர் தயாரித்துக் கொடுத்தார். அருந்தியவனுக்கு இனிப்பு பற்றாக்குறை தெரிந்தது.

‘’மாமா சீனி இல்ல’’ என்றான் குமார். கிளாசை வாங்கி அரை கரண்டி சீனி போட்டு கலக்கிக்கொடுத்தார். அவன் வாங்கி திருப்தியாய் அருந்தினான். பாய் அதிருப்தியில் பீடியை இழந்தார்.

தேனீரருந்திய பாலுவுக்கு அடுத்து புகை தேவைப்பட்டது. அது வெள்ளையா? காக்கியா? என சிந்திக்கையில் வெள்ளைத்தான் பெறும்பாலும் வெற்றி பெறும்.

கோடாங்கிக்கு ஆடிக்கொண்டிருக்கும் கடை உரிமையாளரிடம் சத்தமாக கத்தினான் அவர் பதறி எழுந்தார்.

‘’ஒரு டீ, பிளேன் சிகரெட், செய்யது, ஒருகட்டு”என்றான்.அவர் அரை மயக்கத்தில் காசை கணக்குப் பார்த்து வாங்கி உலோக இழுப்பு பெட்டகத்தில் போட்டுக் கொண்டு கோல்டு பிளாக் பிளேன் சிகரெட், செய்யது பீடி கட்டு எடுத்துக் கொடுத்தார் அவன் வாங்கி பற்றவைத்து இழுத்தான். புகை உள்சென்று வெளியேறியதும் அவனுக்குள்ளிருக்கும் அனைத்து துயரங்களும் அதனோடு சேர்ந்து போனதாக உணந்தான்.

அந் நேரத்தில் பாண்டியன் பஸ் வந்தது. சிகரெட்டை காலுக்கடியில் போட்டுவிட்டான். ஆனால் அந்த பஸ் கோயில்பட்டி போவதாக போர்டில் எழுதிருந்ததை பார்த்ததும் அவரசர பட்டுவிட்டோமென்று என்றுணர்ந்து சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு மெதுவாய் குனிந்து எடுத்து மறுபடியும் வாயில் வைத்து உறிந்தான் பாயிலர் முன்பு நின்றிருக்கும் பாய் அவனை பார்த்து சின்னதாய் கர்வ புன்னகை புரிந்தார். அந்த பஸ்க்காக காத்திருந்தவர்கள் ஓடிச்சென்று ஏறினார்கள்.

பக்,பக்கென்று சிகரெட்டை உறிந்து தள்ளிவிட்டு நிலையத்துக்குள் நுழையும் அடுத்த பஸ்சை கவனித்தான். தூத்துக்குடிக்கு கே,டி,சி வந்தது. அதற்கும் இருவர் போட்டிப் போட்டு ஏறினார்கள். காத்திருந்தான்

சிறிது நேரம் எந்த பேருந்தும் வரவில்லை அதனால் சிறு நீர் கழிக்க சென்றிட முயன்றப் போது திருவள்ளுவர் அந்த இரவிலும் சீறிக்கொண்டு அரை வட்டமடித்து நின்றது.

பாலு ஓடிச்சென்று திறக்கப்படாத பேரூந்தின் முன் படிகட்டருகே நின்றான். நடத்துனர் கதவை திறந்து ‘’எங்க போனும்’’என்றார்.

பாலு பதில் சொல்லாமல் ஏறிக்கொண்டு இருக்கை தேடினான்

நடத்துனர் பின்னாடி ஓடிவந்து அவனை அமரவிடாமல் ‘’எங்க போகனும்’’என கடுப்பாய் கேட்டார்.

‘’நாகர் கோயில்’’என்றான் பதில் கேட்ட நடத்துனர் பரம திருப்த்தியில் அவர் இருக்கைக்கு போய் அமர்ந்தார்.

பாலு பேருந்துக்குள் இருக்கைகளை ஆராய்ந்தான். அனைவரும் அரை மயக்கத்தில் கிடந்தனர். ஒருவர் ஜன்னலுக்கு வெளியே கழுத்தை நீட்டி பஸ் நிலையத்தை கவனித்தப்படி இருந்தார். அவர் பார்வை நிலையத்தின் பேப்பர் மார்ட் கடை மீது படிந்திருந்தது. அவர் பார்வையில் பாலுவும் பங்குப்போட்டான். கடையின் பக்கவாட்டு சுவர்கள் முழுவதுமாயும், முன் இருக்கை மீதும் கடை உயரத்தில் தாழ்வாகவும், பொறுத்தப்பட்டிருந்த மாதம், காலாண்டு, தீவிர இலக்கிய இதழ்கள், வார இதழ்கள், அரசியல் பத்திரிக்கைகள், சினிமா இதழ்கள் வேலைவாய்ப்பு பத்திரிக்கைகள். என இருந்தவைகளில் அந்த நபரின் பார்வை ஜூலை மாத காலாண்டு இதழான காலச்சுவடு மீது படிந்திருந்தை பாலு அறிந்துக்கொண்டான். அவரை ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

பாலுவுக்கு இருக்கை ஓட்டுனர் பின் புறம் முன் வரிசையில் ஒரு சீட்டும், நடத்துனர் பின்பாக ஒரு சீட்டும் இருந்தது தெரிய அதை நோக்கி சென்று அமர்ந்தவனை நடத்துனர் கோபத்தின் கோரத்தை சரியாக பயன்படுத்தி அவனை துரத்தியடித்தார்.

அடிப்பட்ட பாம்பாக நெளிந்தப்படி பின் சென்று இருக்கை தேடினான். பின் சக்கர மேல் பகுதியில் இரு சீட் காலியாக இருந்தது.

அதில் அமர்வாதா? அல்லது வேறு இடம் காலியாக உள்ளதா என கவனித்தான் மெலிதான மஞ்சள் ஒளியில் சீட்கள் சரியாக தென்படவில்லை மேலும் சக்கர மேலுள்ள இடத்தில் அமர்ந்தால் தூக்கி, தூக்கி போடும், அதை நேரத்தில் ஜன்னலோரத்தில்சீட்உள்ளது.காற்றும்வாங்கிக்கொள்ளலாம், காட்சிகளையும் ரசிக்கலாம், அதனால் அந்த சீட்டை முடிவு செய்துக்கொண்டு ஜன்னருகே அமர்ந்துக்கொண்டான்.பேரூந்து துலுக்கப்பட்டியை தாண்டிக் கொண்டிருந்தது. ராம்கோ சிமெண்டு தொழிற்ச்சாலையின் கம்பீரமும், சரக்கு ஏற்றிக்கொள்ள காத்துக்கிடக்கும் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகளின் அணி வரிசைகள் நியான் விளக்கொலியில் தகி, தகிப்பாய் தென்பட்டது.

துலுக்கப்பட்டி கடந்ததும் தன் கடமையுணந்து நடத்துனர். அதி வேகமாய் எழுந்து யாரும் ஜன்னல் வழியாக குதித்தோடிவிட்டாக்களா என கவனித்து விட்டு பாலுவை ஒரு குற்றவாளியை கவனிப்பதுப்போன்று கவனிக் கொண்டே பயணச் சீட்டை தோழ் பையிலிருந்து எடுத்து அதன் மீது கட்டிருந்த ரப்பர் பேண்டை அவிழ்த்து ஸ்டேஜ், ஸ்டேஜாக பிரித்தார். பாலு அதை கவனித்து எச்சில் விழுங்கினான். அவசரத்தில் துரித பேரூந்தில் ஏறி விட்டோம் நம் பட்ஜெட்க்கு சரியாக வருமா? என மனதுக்குள் இஷ்ட்ட தெய்வத்தை வணங்கிக்கொண்டே பாக்கோட்டில் உள்ள பணத்தை பிதுக்கிப்பார்த்தான். நடத்துனர் பயண சீட்டை ஒவ்வோரு கட்டணமாய் கிழித்து துலையிட்டார்.

பதினோரு ரூபாய்க்கு ஒரு கட்டணத்தாள், ஒன்பது ரூபாய்க்கு ஒரு கட்டணத்தாள், நான்கு ரூபாய்க்கு ஒரு கட்டணத்தாள், எழுபது காசுக்கு ஒரு தாள், என பயண சீட்டை கிழித்துக்கொடுத்தார். பாலு வாங்கி கணக்குப் பார்த்தான். அவன் போட்ட பட்ஜெட்டுக்கும் அலுவலக நண்பர் மது சூதணன் சொன்ன கட்டணத்துக்கும் வித்தியாசம் ஏற்பட்டு குறைவாகவே இருந்தது. அதனால நிறைவாக கட்டணம் செலுத்தி பயணச் சீட்டை பெற்றுக்கொண்டான் பாலு.

பேரூந்து இருலோடு உறவாடி காற்றோடு கலந்தாடி மனித இடம் பெயரவுக்கு உறுதுணையாய் ஊர்ந்தது. பாலு சாய்வுக்கான உலோக விசையை இழுத்து விட்டான் இருக்கை பின் நோக்கி சாய்ந்தது. ஆசுவாசமாய் மல்லாந்து கண்களை மூடினான்.

பல்வேறு சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாய், வந்து தொடர்பற்று அறுந்துதது. அவன் எதையும் நிலையிருத்திப் பார்க்கும் ஒரு நிலையில் இல்லை.

மன முழுவதும் ஏக்கமும், தவிப்பும் இயலாமையும் சொல்லற்ற நிர்வாணமாய் தலை விரித்தாடியது. துரோக ரேகைகள் உடலாக மாறி உருப்புக்கணைத்தும் சொத. சொத்துத்து சீல் வழிந்து பேரூந்தை மூழ்கடித்தது.

அதிலிருந்து மீண்டெள பல்வேறு காட்சி படிமங்களை நிலை நிறுத்த எத்தனித்தான் அவைகள் ஒளிகளற்ற பிம்பங்களாய் அழிந்துக் கொண் டேயிருந்தது.

எல்லாவற்றிலுமிருந்து தப்பி கண்ணயர்ந்துவிடலாமென்று கண்களை மூடினால் வீட்டின் வாசம் நாசியை அடைத்தது.

தன் பிள்ளைகளுக்கு இப்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய சீருடை புதிய வகுப்புக்கான நேட் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்து பள்ளிக்கு அனுப்பிய நிலையில் பணி மாறுதல் தரப்பட்டு துரத்தி அடித்து விரட்டிவிட்டார்கள். இனி புதிய இடத்தில் பள்ளிக்கு அனுப்ப வேன்டும். அங்கு உள்ள பள்ளியின் சீருடை, அங்கு உள்ள பாடத் திட்டத்தின்படி கல்வி தள வாடங்கள் மாற்ற வேண்டும். பிஸ்னஸ் மேக்னட்டாக இருந்தால் நஷ்ட்டத்தைப் பற்றி கவளையற்று செயலாற்றலாம், அல்லது அரசியல்வாதியாக இருந்தால் செல்வாக்கை பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனால் அரசு ஊழியர் அதுவும் அடிப்படை பணியாளர். அரசின் நவீன அடிமைகளில் ஒருவன்.

எந்த பள்ளியில் சேர்க்க முடியும் புதியதாக பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருமாதத்தை கடந்து ஜீலை மாதத்துக்கு வந்தாகிவிட்டது. இப்போது யார் இடையில் பள்ளியில் சேர்ப்பார்கள். அப்படியே சேர்க்கவேண்டுமென்றால் இடையில் சேர்க்க காரணம் என்ன? என கேள்விக்கு சரியான பதில் சொல்லவேண்டும். இது போக ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து கல்விச் சான்று பெறுவதற்கு தவம் இருக்க வேண்டும். கட்டிய கல்விக்கட்டணத்தை திரும்ப பெற முடியாது. அப்படியே பல வித்தைகளுக்கு பின் கல்விச்சான்றை பெற்றுக்கொண்டு போகயிருக்கும் ஊரில் புதிய பள்ளியில் இடம் கிடைக்குமா? அப்படி கிடைக்க வேண்டுமென்றால் ஒன்று அந்த பள்ளியின் நிர்வாகம் சொல்லும் நிர்பந்ததுத்துக்கு கட்டுப்படவேண்டும். குறிப்பாக குமரிமாவட்டம் முழுவதும் கிறிஸ்த்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது. மாரியை வணங்கிய குடும்பம், மேரியை வணங்கிட உடனடி சாத்தியம் கிடையாது. ஆனால் இங்கு உள்ளவர்கள் அணைவரும் பூர்வீக கிறிஸ்தவர்கள் கிடையாது என்பது உலகமறிந்த ஒன்றுதான். ஆனால் உடனடி மதமாற்ரம் என்பது சிரமம்தான் அது பாலு குடும்பத்துக்கு ஏற்பத்தான் செய்தது. இதைவிட கல்வியறிவில் முன்னனியில் இருக்கும் மாவட்டமான இங்கு சாதிய பாகு பாடு முன்னனிலிருந்தது.

சரி இருக்கவே இருக்கு அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என்றால் சாதி சான்று துருத்திக்கொண்டு முன் வருகிறது.

இவைகளை கருத்தில் கொண்டுதான் அதிகாரிகள் ஒருவனை பழி வாங்க பணி மாறுதலை கையாள்கிறார்கள்.

இதிலிருந்து தப்பிக்க ஒருசில அலுவலர்கள், பணியாளர்கள், உயர் அதிகாரிகளுக்கு அடி பணிந்து ஆசை நாயக தன்மையில் பின்புலத்தைக்காட்டி அதிகாரியை கிரக்கத்தில் ஆழ்த்தி சிறு நீரை கூட தரையிலையோ, கழிவுக் கோப்பையிலையோ விடாதீர்கள் எந்து வாயில் விடுங்கள் நான் தேவாமிர்தமாக அருந்திக்கொள்கிறேன். என சில கருங்காலிகள் அரசு பணிகளில் இருந்துக்கொண்டு, காலந்தோறும் பணி மாறுதலின்றி ஒரே இடத்தில் அமர்ந்துக்கொண்டு பதவி உயர்வும் அதே அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு அரசு பணியை துணை பதவியாகவும், பிற தொழிகளை முதன்மை தொழிலாகவும் வைத்திக்கொண்டு சொந்த ஊரில் படித்து வேலை பார்த்து, மனைக்கட்டி பிள்ளைபெற்று சொத்துபத்து சேர்த்து கடைசில் எதற்கு சொத்து சேர்த்தோம் என சொறிந்துக்கொண்டே சிந்திக்கையில் சொந்த ஊரிலேயே செத்து சொந்த புதைக்கப்படும் ஒருசில அரசு பணியாளர்கள் இருக்கும் வரை பாலு போன்ற நேர்மையான அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் வருடத்திற்கு ஒரு முறை பந்தாடபடுகிறார்கள்.

பேரூந்து சாத்தூர் வைப்பாற்றின் பாலத்தில் ஊர்ந்துக்கொண்டிருந்தது. சாளாரம் வழியாக பாலு பார்த்தான். வைப்பாறு இயற்க்கையின் இரண்டாம் தாரத்தின் பிள்ளையைப்போல் சவளைத் தட்டி மெலிந்து ஒடுங்கி ஓரமாய் ஒழுகிச்சென்றது. கோடைக்காலத்தை சமன் செய்திட ஆற்றின் மையத்தில் தோண்டப்பட்டிருந்த இரண்டு கிணறுகள் வானம் பார்த்துக் காத்திருப்பது ஆனிமாத வெண்ணிலாவின் பாலொளியில் நன்றாக தென்ப்பட்டது. வைப்பாற்றின் சிமெண்டு சாலையிலிருந்து இறங்கிய பேரூந்து, கருத்த இருளை சேலையாக அணிந்திருந்த தார் சாலையின் முரட்டு மேனியில் ஊடூறுவிக் கொண்டியிருந்தது.

பேரூந்தின் உருளிகள் முன்னோக்கி உருண்டு செல்ல பாலுவின் மனச்சக்கரம் பின் நோக்கி உருளாரம்பித்தது.

                                                                  அத்தியாயம்       2

‘’டேய் பாலு, அடேய் பாலா’’ என அதிகாலையின் அமைதியை விரட்டியப்படி தகர கதவைத் தட்டினார். பாலுவின் பெரியப்பா மாரியப்பன் வாசளில் உடல் சுருட்டிக்கிடந்த செவளை சலிப்பாக தலை தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் முடங்கிக்கொண்டது.

‘’டேய் ஒன்னத்தாண்டா மாப்புள்ளே ஜோக்கு போதும்டா பொழப்பு தழப்பப்பாரு பொத்தி பொத்திப் படுத்தா பொழைக்க முடியாது.’’என மீண்டும் பலமாக கதவைத்தட்டினார் பெரியப்பா.

கூடிக்களைத்துக் கிடந்த பாலு பேயைக் கண்டு அரண்டவனாக பட, படவென எழுந்து சாரத்தை சரி செய்தப்படி கதவைத் திறந்தான். பெரியப்பா அவனை நகல் எடுத்தப்படி ‘’என்னப்பா இன்னுமா ஒனக்கு விடியலே’’என்றார். அவன் பதில் தேடியப்போது அவர் அவனை பேச அவகாசம் தராமல் அவரே மேலும் பேசினார்.

‘’என்ன வேல வெட்டிக்கி போனூம்முன்னு நெனப்புயில்லையா? பொண் டாட்டி புள்ளையெல்லாம் பொழப்புலே இருக்கு கல்யாணம் முடிச்சி பத்துனா ஆச்சி இப்படியே கெடந்தா எப்படி. ஒன்ன நம்பி வந்த புள்ளையே காப்பத்த வேணாமா? நம்ம புள்ளைகனா பரவாலே, ஊராப்பூத்த’’என பெரியப்பா அறிவுரை கூறிக்கொன்டிருக்கும்போது சுதா பாயை சுருட்டி எடுத்து மூலையில் சாத்தி வைத்துவிட்டு அடுப்படி ஓரத்தில் நின்று உடையைச் சரி செய்தாள். பெரியப்பாவின் வார்த்தை கற்றைகள் அவைளை வதைத்தது.

‘’சரி நா முன்னாடி போறேன் வரப் பாரு’’என சொல்லிவிட்டு பெரியப்பா நகர்ந்தார்.

பாலு ஆசுவாசமாய் மனைவியை பார்த்தான். அவள் கையளவு கண்ணாடியில் முகத்தை பார்த்து படிந்திருக்கும் தடயங்களை தடவியபடி இருந்தாள்.

இவன் இரும்பு வாளிருந்து போனியில் தண்ணீரை மொந்து முகம் அலம்பி வாயில் தேங்கியிருந்த மீந்த இனிய சாரை லயித்து விழுங்கிவிட்டு படிமத்தை கொப்பளித்து துப்பினான்.

‘’போயிட்டு வாறேன்’’ என்று தயக்கமாக கூறினான். அவள் அதை கண்டுக்கொள்ளாமல் கண்ணாடியில் லயித்திருந்தாள். அவன் காத்திருக்காமல் வெளியேறினான்.

துப்பரவு பணியாளர்கள் பெயர் பதிவுக்கு ஓட்டமும், நடையுமாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். ஏற்கனவே ஒரு சிலர் வந்து காத்திருந்த னர். சுகதார ஆய்வாளர் அலுவலகத்தின் உள்ளறையில் இருந்தப்படி வெளியே கவனித்துக்கொண்டிருந்தார். மேஸ்திரி அலுவலக வாசள் படிக்கட்டில் உட்கார்ந்துக்கொண்டு வருகை பதிவேட்டை திண்ணை மீது வைத்து அன்றேய வருகைக்கான பெயர்களை பதிந்து, கோடுகளை போட்டுக்கொண்டு, அவ்வப் போது அலுவலக சுவர் கடிகாரத்தையும், தன் கைக்கடிக்காரத்தையும் பார்த்துக் கொண்டும், ஓடி வருபவர்கள், மெதுவாய் வருபவர்கள், காத்திருப்பவர்கள், அணைவரையும் ஒரு சேர பார்த்துக்கொண்டார். சுவர் கடிகாரத்தில் நான்கு ஐம்பத்தெட்டு என காட்டியது, ஐந்தாக இரண்டு நிமிடம் இருக்கும்போதே மணி அடிக்க உத்தரவு பிறபித்துவிட்டார் மேஸ்திரி. அதற்க்காகவே காத்துக் கொண் டிருந்த முனியன் வட்ட வடிவிலான உலோகத்தை மற்றோரு உலோக களிக்கொன்டு டய்ங்..டய்ங்..டய்ங்.. தட்டினான். அப்போது அணைவரும் போர்க் களத்துக்கு தயாராகும் சிப்பாய்களாக வரிசையாக நின்றனர். இதன் பின் ஓடிவந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வரிசையிலிருந்து விலகி தனியாக நின்றனர்.

மேஸ்திரி பேயர் வாசிக்க ஆரம்பித்தார்.

‘’முத்தம்மா’’

‘’இருக்கேன் எசமா’’

‘’மாரியப்பா’’

‘’வந்துட்டேன் சாமி’’

‘’முனியா’’

‘’இருக்கேன் எசமா’’

மேஸ்திரி பெயர் வாசிக்க, வாசிக்க, ஆண்களும், பெண்களும் வந்திருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ள தலை குனிந்து கை கட்டி வணங்கியப்படி ஆய்வாளார் அமர்ந்திருக்கும் ஜன்னருகே சென்று வெளியேறி நின்றனர்.

பெயரெடுப்பு முடிந்தது. ஆண்கள் ஒரு பகுதியாகவும், பெண்கள் ஒரு பகுதியாகவும், எதிரெதிரே நின்றனர்.

மேஸ்திரி அணைவரின் மீதும் கர்வமாய் பார்வையை செலுத்தினார். அணைவரும் அவரவர் செய்த வேலைகள் பற்றியும் யாரும் கட்ந்த தினத்தில் புகார் கூறினார்களா? இல்லையா? என நினைவுப்படுத்திக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் முத்தையன் வரிசையின் இடையில் வந்து யாரும் கவனிக்காதவாறு புகுந்துக்கொண்டான். ஆனால் மேஸ்திரியின் கருட பார்வை அவனை கவ்னித்துவிட்டது.

‘’ஏலேய் முத்தா’’

‘’எசமா’’என வாயில் கை வைத்துக்கொண்டு குனிந்தபடி அவர் முன் நின்றான்.

‘’தள்ளிப்போடா”

அவனுக்கு என்ன செய்வதுதென்று புரியவில்லை. வரிசையிலிருந்து தள்ளி நின்றான். மேஸ்திரி அவனுக்கு புரியும் விதத்திலும், ஆய்வாளார் காதில் விழுமலவுக்கு கத்தினார்.

‘’பெரிய மொலாளி நெனப்பு மைரோ, வேட்டி கட்டிட்டு வந்துருக்கே’’என முத்தனை பார்த்து அரட்டும் தோரணையில் கத்தினார். அப்போதுதான் அவன் காக்கி டிராயர் டவுசர் போடாததை உணர்ந்தான்.

‘’எசமான் நேத்து செக்காணத்துக்கு தேவைக்கு போயிருந்தேன் அந்த கையோட வந்துட்டேன் மன்னிக்கனும் சமூகம்’’என்று எந்தளவுக்கு அவன் தண்டு வடம் வளைந்துக்கொடுக்குமோ அந்தளவுக்கு குனிந்து சொன்னான்.

‘’போன எடத்துலே பொண்ட்டாட்டியே மறப்பியா போ ஒன்னையே ரெண்டு நா நிப்பாட்டிருக்கு’’என கடுமையை முகத்தில் செயற்கையாக வரவழைத்துகொண்டுச் சொன்னார் மேஸ்திரி

அவன் அதற்கு மேல் நிற்கவில்லை. மேலும் நின்றால் ஐந்து தினம் வேலை இழப்பு ஏற்படும்.

தொழிலாளிகள் சீருடைகளை சரிப்பார்த்துக்கொண்டனர். ஆண்கள் காக்கிச் சட்டை காக்கி டிராயர், பெண்கள் சாம்பல் வண்ண சேலை, வெள்ளை கச்சை அணிந்திருக்க வேண்டும். சேலை மொட்டிக்கு மேல் கட்டிருக்க வேண்டும். தப்பி தவறி கெண்டைக்கால் தழுவியோ, தண்டியோ அணிந்திருந்தால் அவள் கதி அதோ கதிதான்.

மேஸ்திரி ஆண்களை பார்த்துவிட்டு பெண்கள் வரிசைக்கு வந்தார். பெண்கள் உடைகளை பதற்றத்தோடு சரி செய்தனர்.

அந்த கூட்டத்தின் மத்தியில் ஒரு பதினெட்டு வயதுடைய ஒருத்தி நின்றிருந்தாள். அவளை யாரும் துப்பரவு தொழிலாளி என்று சொல்லி விட முடியாது. கலையான முகம், அழகு வறுமையற்ற உடலமைப்பு, காண்போரை கவர்ந்தீருக்கும் தீட்சனையான பார்வை, இயற்கையே அறிந்திராத முக்கனியையும் மிஞ்சிடும் சுவை தேங்கிய இதழ், மெலிந்த தேகத்தில் செழித்த தேன் கனிகள். உடுக்கை இடுப்பின் பின் புற இரு தம்புராக்கள், இளம் தென்னை குருத்தோலை வனப்பில் தொடைகள், பெருத்த மீனின் துடி, துடிக்கும் வாலின் கால்கள். இவையனைத்தயும் ஒரு சேர பெற்றவளே சந்திரா. இவளுக்கு பின் மூன்று தங்கைகள் ஒரு தம்பி. இந்த வேலைக்கு வருவதற்கு என்ன காரணம்? இருக்கும்.

சந்திராவின் தந்தை முத்தையன் நல்ல தொழிலாளி. திருமங்கலம் நகராட்சியில் சிறந்த வேலக்காரன். துப்பரவு தொழிலை நுட்பமாய் கையாளுபவன். ஆனால் பெருங்குடிகாரன். இந்நொடிகள் துப்பரவு தொழிலாளிகளை தன் கோர பசியால் விழுங்கிக்கொண்டிருக்கும் மலக்குழி முத்தையனையும் விட்டுவைக்கவில்லை.

கணவனை இழந்த மனைவிக்கு அரசு கொடுக்கும் நஷ்ட ஈடு அவன் விழுந்த அதே குழியில் நீயும் விழுந்து சாக தயாராகிக்கோ என அதே துப்பரவு பணி. முத்தையன் மனைவி முத்து பேச்சி அதே நகராட்சியில் துப்பரவு பணியாளராய் சேந்து தன் கணவன் விட்டுச் சென்ற கடமைகளை தொடர்ந்தாள்.

பெண்ணாய் பிறப்பதே பாவம், அதிலும் விளிம்பு நிலை வர்க்கத்தில் பிறப்பது அதை விட பாவம், இதை விட பாவம் இளம் விதவையாக இந்த சமூகத்தில் வாழ்வது. கணவன் முத்தையன் இறக்கும் போது முத்துபேச்சிக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்கும். மூத்தவள் சந்திராவுக்கு பதிமூன்று வயது இருக்கும்.

முத்துபேச்சி வயதுக்கு வந்த மாதத்திலேயே திருமணம் நடந்தேறியது. பதிமூன்று வயதை முழுதாய் கழித்திருக்கமாட்டாள். பதினாங்கை தொடும் போது சந்திராவை பெற்றெடுத்தாள். அதன் பின் அடுத்தடுத்து பிள்ளைகள் பெற்றெடுப்பதுதான் பிரதான கடமை. முத்தையன் தன் உயிரணுக்களை ஒன்றைக் கூட வீனடடிக்கவில்லை.

முத்துபேச்சி இளம் வயதில் வேலைக்கு வந்தமையால் அவளை வளைத்துப் போட வலை விரித்தவர்கள் சொல்லி மாளாது. அவள் தன் கணவனிடம் அறுபதுவயதுவரை அனுபவிக்கும் லெளகீக வாழ்வை இருபத்தைந்து வயதிலையே பூரணத்துவமடைந்துக் கொண்டாள். அதனால் தன்னைச் சுற்றி நெருப்பு வளையத்தை உருவாக்கிக் அதனுல் வசிக்கக் கற்றுக்கொண்டாள் இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டப்போதும் அதை தாங்கிக் கொண்டு நாட்களை நகர்த்தினாள் முத்துபேச்சி.

முத்தையன் இறந்தன்றே கேதத்துக்கு வந்திருந்த சோழவந்தான் சுப்பையன் முத்து பேச்சியை மூன்றாம் தாரமாய் கேட்டான். முத்து பேச்சியின் ஆத்தாளும், அப்பனும், இசையுவு தந்து அசைத்துப் பார்த்தனர். அசைவதற்கு நாண்ணொண்னும் ஆலச்செடியல்ல, ஆலம்மரம். என்று அடிப்படையை பொடிப்படியாக்கினாள். உற்றாரும் உறவினர்களும் ஊர்க் கூடி பேசிப் பார்த்தார்கள். எதற்கும் அவள் அசையவில்லை. இவை யெல்லாம் அவள் ஆசையாய் ஈன்ற மகர் களுக்காக. ஏன்யென்றால் முத்து பேச்சி இரண்டாம் தாரமான சித்தியிடம் வளர்ந்து மாற்றான் தாயிடம் மல்லுக்கட்டி மரணத்துக்கு பதில் இளம் வயது திருமண பந்தத்தில் சுருங்கிக்கொண்டாள்.

புருஷ சுகத்திற்க்காக பந்த மாற்றம் ஏற்படுத்திக்கொண்டால் பால் மனம் மாறத பச்சிளம் குழந்தைகள் யாரிடம் சென்று யாசகம் கேட்கும். அவர்களும் நம்மைப் போன்று சீரழிய வேண்டுமா? என்றென்னத்தை தன் மனதில் உருகாத பனி திவலையாக வைத்துப் பாதுக்காத்தாள். பிள்ளைகளை படிக்க அனுப்பினாள். மூத்தவள் சந்திரா ஏழாம் வகுப்பை கடந்துக்கொண்டிருந்தாள். அந் நேரத்தில் ஊரில் அள்ளும் மொத்த குப்பைகளையும், மலத்தையும், அள்ளிச்சென்று கம்போஸ்ட்டில் தட்டுவதற்கு ஊரின் கடைசி பகுதியான தென்காசி, விருதுநகர், மதுரை தேசீய நெடுஞ்சாலை பகுதியிலிருக்கும் கம்போஸ்ட்டில் தட்டுவதற்கு ஒத்தை மாட்டு வண்டியில் செல்லும்போது வண்டியோட்டியான அன்னக்கொடிஇரவில்அடித்த மொன்னபோதையில்செங்கோட்டையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற விரைவு பேரூந்தில் மொதி அவனும் மாண்டு அந்த வண்டியிருந்த முத்து பேச்சியும் மாண்டு இவர்களை இழுத்துச்சென்ற மாடும் செத்தது.

இதனால் முத்தையன், முத்துபேச்சிக்கு அடுத்து வாரிசு வேலை சந்திராவுக்கு வழங்கப்பட்டது.

பதினெட்டு வயதில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் எழுத படிக்க தெரியாத தக்குறி வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டாள்.

வேலைக்கு சேர்ந்து இன்றோடு மூன்றாவது நாள். அவளுக்கு துப்பரவு பணியாளர்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்பதை யாரும் கற்றுத்தரவில்லை. ஏன்யெனில் அவள் படித்தவள் அவளுக்கு அனைத்தும் தெரியும் என்ற அசட்டு நம்பிக்கை. ஆனால்அவளுக்குஎதுவும்தெரியவில்லை
துப்பரவுவாளர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்திடும் தவறுகளுக்கு அதிகாரிகள் தண்டனை ஆண்களுக்கு வேலை பறிப்பு, பெண்களுக்கு கற்பு பறிப்பு..

பெண்கள் கூட்டத்தில் சந்திரா தனித்திருந்தாள். அவள் துப்பரவு பணியாளருக் கான சீருடையை சரியாக அணிந்திருக்க வில்லை. சேலையை பின் கொசுவம் வைத்து கட்டியிருக்காமல் முன் கொசுவம் வைத்தும். மொட்டி வரை அடி முந்தி விட்டு கட்டமல் பாதம் தழுவியும் கட்டிருந்தாள். அள்ளி முடிந்துக் கொள்ளும் கூந்தலை பின்னி முடித்திருந்தாள். இது போதாதா அவளை சர்வதேசகுற்றவாளியாக்க.மேலும்இளம்வயதுடைய பெண்ணுக்கு தண்டனை கொடுப்ப தென்றால் கரும்பு தின்னும் கூலியல்லவா.

‘’ஏத்தா ஒம் பேரு என்ன? எனக் கேட்டார் மேஸ்திரி. அவள் திக்குமுக்காடியபடி பட, படப்பாய் பதிலளித்தாள்.

‘’எம்..பே..ரு..ச..ந்.துரா..ங்க சார்.’’ இந்த வார்த்தை மேஸ்திரி புதியதாக தென்பட்டதால் முதல் முறையாக துப்பரவு பணியாளரை பார்த்து பதறினார்.

‘’சாரா ஏத்தம்தாண்டி ஒனக்கு என்ன வேலைக்கி வந்துருக்கீயா? இல்ல ஆட வந்துருக்கீயா?’’

..என் ..ங்க..ய்யா..’’

‘’ம் நொன்னங்ககய்யா போ அங்க’’ அங்ஙன போயி நில்லு’’ என முகத்தை இறுக்கமாக்கிக்கொண்டு சொன்னார் அது அவளுக்கு மல சிக்கலில் முக கோனாலாகும் முகமாக மேஸ்திரி தென்பட்டார்.

‘’என்ன நிக்கீறிங்க போங்க போயி வேலையே பாருங்க எதாச்சும் கொவாரு வந்துச்சி தொலைச்சிப்புடுவேன்’’ என தொழிலாளிகளை அரட்டினார் மேஸ்திரி. அனைவரும் கலைந்தனர்.

சந்திரா திக்கு தெரியாமல் நின்றிருந்தாள். அவளை கடந்து ஆண்கள் துப்பரவு கருவிகள் எடுத்துக்கொண்டு கடந்தனர். பெண்களும் அதன்படி அதில் ஒருத்தி சந்திராவைப் பார்த்து சிரித்தாள், மற்றோருத்தி பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு ‘’பாவம் கன்னி கழியாதவ’’ என்றாள். அதை கேட்டு பிரிதொருத்தி ‘’ம் எசமானௌக்கு நல்ல வேட்டத்தான்’’என்றாள்.

பாலு பெரியப்பாவை எதிர் பார்த்து நகராட்சி வாசளில் நின்றிருந்தான். பெரியப்பா ஒத்தை மாட்டு வண்டியை எடுத்துக்கிட்டு சந்திராவை பரிதாபமாக வும் கையாலாகத்தனத்தாலும் பார்த்துக்கொண்டே கடந்தார். மேஸ்திரி பெரியப்பாவை அழைத்தார்.

‘’ஏய் மாரியப்பா’’

‘’அய்யா’’என திரும்பிப்பார்த்து குனிந்து நின்றார்.

‘’இன்னக்கி நீ கூட்டறதுக்கு போ’’ என்றார் மேஸ்திரி

‘’சரிங்க எசமான்’’என சொல்லிக்கொண்டே தலை சொறிந்தார். குப்பை அள்ள போவதற்க்காக தட்டும் மம்பட்டியும் எடுத்து வந்துட்டோம். தூப்பு மாரு எடுக்கலெ திரும்பி போனோம்னா மேஸ்திரி எதாச்சும் சொல்லுவான் பரவயில்ல சமாளிப்போம்’’என மனசுக்குள் நினைத்தப்படி வெளியே வந்தார். பாலௌ நின்றிருந்தான்.

‘’டேய் வண்டிலே ஏறுடா’’ என பாலுவைப் பார்த்து சொன்னார் அவன் அந்த வண்டியில் ஏறிக்கொள்ள மறுத்தான்.

‘’இல்ல நா நடந்து வாறேன்’’என்றான்.

மாட்டு வண்டியை ஆனந்தா தியேட்டர் பக்கம் திருப்பினார் பெரியப்பா. மதுரைக்கு செல்லும் கே,டி, சி, பேரூந்து அதிகாலை வேலையிலும் விரைந்துச் சென்றது. மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சாலையோர மலர் வியாபாரிகள் பனி துளிகள் தவழும் பல் வண்ண பூக்களை வாழை நார்களில் பினைத்துக் கட்டிக்கொண்டிருந்தனர், வாழை இலையில் மொட்டு மலராத பிச்சியும் முல்லையும், கூந்தலேறிட காத்திருந்தது.

தேனீர் விடுதியில் இரண்டு வாகன ஓட்டிகள் தூக்க கலக்கத்தை தீர்க்க பாயிலரை ஏக்கத்தோடு பார்த்தப்படி நின்றிருந்தனர். தேனீர் தயாரிப்பவர் பாயிலரை பெரம்கயால் தொட்டுப் பார்த்தார் சூடு ஏறாததால் பாயிலர் அடியில் கொழுந்துவிட்டு எறியும் கங்குகளை தீ இடுக்கியால் கிளறிவிட்டார்.

மாட்டு வண்டியின் பின்னே வந்துக்கொண்டிருந்த பாலுவை வண்டியிலிருந்து திரும்பிப் பார்த்து ‘’டேய் கொட்டாயிக்கிட்ட நில்லு நா போயி தூப்புமாரு எடுத்துட்டு வாறேன்’’என்றார்.

அவன் தியேட்டர் வாசளில் போயி நின்றான். தியேட்டர் விளம்பர சுவற்றில் வால் போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் நாயகன் புல்லட்டில் பறந்தப்படியும் நாயகி ஆழந்த பன்னகையில் இருப்பது குலோசப்பில் இருந்தது. அதன் கீழ் குகன் வழங்கும் ‘’மைக்கல்ராஜ்’’ என்றும் ரகுவரன், மாருதி, மற்றும் பலர் என்றும் 4.2.87 முதல் ஊத வண்ணத்தில் எழுதி ஒட்டியிருப்பதை பாலு கவனித்தான்.

சந்திரா பதட்டத்தில் நின்றுக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அலுவலகத்து குள்ளிருந்து வெளியே வந்த மேஸ்திரி

‘’ஏத்தா ஓம் பேரு என்ன சொன்ன’’

‘’சந்துரா’’

‘’ம் சரி ஒன்னயே பத்தி அய்யாட்ட சொல்லிட்டேன் இனிமே இப்படி வராதே, போயி அய்யா ரூம்பே கூட்டி விட்டுட்டு போ’’ என கனிவாக சொன்னாஅர் மேஸ்திரி அந்த வார்த்தை தீ பட்ட புண்ணுக்கு மயிலிறகால் வருடிக் கொடுப்ப தாய் உணர்ந்தாள்.

மேஸ்திரி தனது புது பி, எஸ், ஏ, சைக்கிளில் ஏறி அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.

சந்திரா மனதில் பட்டாசு வெடிக்க அலுவலகத்துக்குள் நுழைந்தள். பழைய மின் விசிறி ஆய்வாளர் தலைக்கு மேல் சுழன்றுக்கொண்டிருந்தது. அதன் நைந்துப் போன சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆய்வாளர் வருகை பதிவேட்டில் மூழ்கிருந்தார். சந்திரா உள் சென்று கழிவறையை பார்த்தாள். அது சுத்த்ம் செய்திடுமளவுக்கு ஒன்றும் அசுத்தமாக இல்லை. அதனால் வெறுமனை பித்தாளை அடைப்பை திறந்து வாளியில் தண்ணீர் பிடித்து மலக்கோப்பையில் ஊற்றிவிட்டு ப்ரஸால் தேய்த்து கழிவிவிட்டு வெளியேறி பின் பக்கமாய் இருக்கும் ஈஞ்ச மாரை எடுத்து அலுவலகத்தை தூத்துவிட்டாள். நேரம்மாக, மாக, அவள் இதய துடிப்பு சீரானது ஏன்யெனில் அவள் பதற்றத்க்கேற்ற எவ்வித நிகழ்வும் நடந்துவிடவில்லை. ஆய்வாளர் அவர் வேலையில் கவனமாக இருந்தார் இவள் சுந்திரமாய் செயலாற்றினாள். அங்கு மின் விசிறியின் லொட, லொடா சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

சந்திரா அவர் காலடிக்கு கீழ் குனிந்து கூட்டாரம்பித்தாள். அதை உணர்ந்த ஆய்வாளர் கால்களை தூக்கி மேஜை கட்டையில் வைத்துக் கொண்டார். அதனால் இவள் மேஜைக்கடியில் தலையைக் கொடுத்து அதனடியிலிருக்கும் தூசுகளை கூட்டினாள். மின் விசிறியின் வேகத்தில் தூசி அவள் கூட்டும் திசைக்கு எதிராய் பறந்தது. அதனால் ஆய்வாளர் எழுந்து சுவிட்சை அனைத்தார். மின் விசிறி ஈனஸ்வரத்தில் மயக்க நிலையில் சுழன்று நின்றது. சந்திராவுக்கு பயமற்ற நிலை மோலோங்கியது.

ஆய்வாளார் ஜன்னல் வழியாக பார்த்தார். வெளியே யாருமில்லை அவள் மேஜைக்கடியில் தலைக் கொடுத்து கூட்டிக்கொண்டுருந்தாள். ஆய்வாளார் அலுவலக கதவை தாழிட்டுவிட்டு அவள் பின்னால் வந்து அவளின் பின் புல பிளவில் விரால் நீவினார். ஓடிக்கொண்டு இருக்கும் மாடு மிரண்டதுப் போல் அவள் துள்ளி முன் மேஜை கட்டையில் முட்டி மோதினாள். தலை மேஜைக்கடியில் அகப்பட்டுக்கொண்டது. பின் புலம் ஆய்வாளரிடம் மாட்டிக்கொண்டது. அவள் திமிறினாள். ஆய்வாளரின் ஒரு கை அவள் திமிலை நசிக்கியது. மறு கை சேலையை இடுப்புக்கு மேல் உயர்த்தியது. அவள் அணிந்திருந்த சிகப்பு நிற உள் பாவடை பாதி கிழிந்த நிலையில் அதில் வெள்ளை நிற நூலால் கைத் தையல் கொங்கானிப்போட்டு தைய்க்கப்படிருப்பது வறுமையின் தாண்டவம் உள்ளாடையில் உணர்த்தியும், ஆய்வாளரின் காம உணர்வு அவள் சதை கடித்து குதறுவதில்லையே குறியாக இருந்தது. கத்தினாள். அவர் காரியத்தில் கவனமாக இருந்தார். ஆனால் அவர் வேகத்துக்கு அவர் உறுப்பு கட்டுப் படவில்லை அது துவண்டு துவண்டு தூங்கி விழுந்தது. அதனால் அதை அவர் தயார் படுத்துவதில் கவனமானார். அதற்குள் அவள் காரியமாற்றினாள். முன்பக்கம் மேஜை காலில் ஓங்கி முட்டி பின்னோக்கி பின்னங்காலால் விட்டாள் அடப்போடு, ஐந்தடிக்கு அப்பால் சுவற்றில் மோதி விழுந்தார். சந்திராவுக்கு மேஜையில் முட்டிய மண்டை உடைந்து ரத்தம் அவள் ஜாக்கெட்டை நனைத்தது. களைந்திருந்த மாராப்பை அள்ளிப்போடக் கூட முடியாமல் கதவை அகற்றி தப்பி ஓடினாள். எதிரே பெரியப்பா வந்தார். அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில் அவள் பிரதானயில் இறங்கி ஓடினாள். பின்னாடி ஆய்வாளார் ஓடிவந்தார். அதையும் பெரியப்பா கவனித்தார். அதை பார்த்த ஆய்வாளார்.

‘’ஏய் மாரியப்பா அவளே புடி..புடி மோதிரத்தை திருடிட்டு ஓடுறா’’ எனக்கத்தினார் ஆய்வாளார். பெரியப்பாவும் அவளை விரட்டுவதுப்போல் நடித்தார். ஆனால் ஓடவில்லை. தியேட்டர் வாசளில் நின்றிருந்த பாலு திகைப்புடன் பார்த்தான். சந்திரா உசிலை சாலையில் ஒடிக்கொண்டிருந்தாள்.

                                                       அத்தியாயம்  3

கருத்த தார்ச்சாலையோரத்தில் மனித கழிவுகளான திட, திரவ, காகித கூழங்கள், தாவிர சருகள் பறவைகளின் எச்சங்கள், கால்நடை கழிவுகள், என சாலையில் ஓரப்பகுதியில் பரவிக்கிடந்தது. பாலு தூப்புமாரால் தூத்து குவியலாக்க அதை பெரியப்ப தர தகட்டால் பரசி கோதியள்ளி பருத்திமார் தட்டில் போட்டு மாட்டு வண்டி மரக் குடுவையில் போட்டார். பாலுவுக்கு கூட்டுவதின் நுட்பம் சரிவர தெரியாததால் குப்பையோடு சேர்த்து மண்ணூம், கல்லும் வந்தது. அதை அள்ளுவதில் சிரமாக இருந்தது. இதனால் தூப்பு மாரின் மூங்கில் குச்சிகள் முறிந்தது.

‘’டேய் பரசி மேட்டாப்புலே கூட்டுடா வருச கணக்கா ஒழைக்கிறே தூப்பு மார ஒரே நாள்லே ஒடச்சி புடுவ போலையே’’எனக் கடிந்தார் பெரியப்பா’’

‘’எனக்கு இப்படித்தான் கூட்டத்தெரியும் வேனுனா நீயே கூட்டு’’ என்றான் பாலு.

‘’நா கூட்டுறதா இருந்தா ஒன்னையே எதுக்கு கூட்டியாந்துருக்கேன் பெத்துனாப்புலே இப்படிக் கூட்டனும்’ மாரை வாங்கி பட்டும் படாமலும் தரைக்கு வழிக்குமோ என்ற கணக்கில் தரையை வருடிக் கொடுப்பதுப்போல் கூட்டினார். அதில் குப்பை மட்டும் தனியாக வந்தது. அதன்படி அவனும் அந்த நுட்பத்தை கையாண்டான் அவனுக்கு அது கட்டுப்படவில்லை. தூப்பு மார் முறிந்துக்கொண்டே இருந்தது. சுதாரித்துக்கொண்ட பெரியப்பா அவனுக்கு தகடு கொடுத்து குப்பையை அள்ள வைத்தார். குப்பை அள்ளுவது அதைவிட சிரமமானது. ஒவ்வோரு முறையும் குனிந்து நிமிர்ந்து அள்ளனும் அள்ளினான் அதிலையும் மண், கல் தான் வந்தது.

‘’என்னத்த ஒங்கப்பேன் வளத்தான் ஒரு தொழில ஒழுங்க கத்துத் தரமே அதுவும் குலத்தொழில கொண்டா’’ என தகட்டை வாங்கி குப்பை அள்ளிக் காண்பித்தார்.

‘’இங்க பாருடா தகட்டுல வல்லைன்னா கைட்ட பரசி அள்ளனும்’’என்று கையால் அள்ளிப்போட்டார்.

அதன்படி முதலில் இடது கையாலும் வலது கையில் தகட்டாலும் அள்ளினான் அதுவும் சரிப்பட்டு வரவில்லை. பின்பு ஒருகையாலும். ஒருகாலலும் ஒதுக்கி அள்ளினான். வந்தபாடாக இல்லை அவன் பாட்டைப்பார்த்து பெரியப்பவுக்கு கோபம் வந்தது. ஆனால் அடக்கிக்கொண்டார். அதையுணர்ந்த பாலு தகட்டை கீழேப் போட்டுவிட்டு கையால் அள்ளினான் அதைப்பார்த்த பெரியப்பா மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

‘’மீன் குஞ்சுக்கு நீந்த கத்து தரனுமா’’என பழமையை நம்பினார்.

அவன் கைகளில் வந்தது குப்பை மட்டுமா நாய் விட்டை, பூனை விட்டை மனித சளி, காய்ந்தவைகள் பற்றி கவளையில்லை காயதவைகள்..? ‘’சீ..தோன்னு’’ காரி துப்பிக்கொண்டே அள்ளினான். அவன் பாடை கண்ட பெரியப்ப சிரித்துக்கொண்டே அவனுக்கு அறிவுறுத்தினார்.

‘’டேய் மலச்சா வேல்லைக்கு ஆகாது கூசாம அள்ளிப்போடு துப்புனா அதையும் நீதான் அள்ளனும்’’ என்றதும் அவனுக்கு கோபம் கோபுரமாய் உயர்ந்தது.

‘’இந்த வேலை செய்துதான் உயிர் வாழனுமா? இதெல்லாம் எதனால்? கல்யாணம் முடிச்சதுனாலயா? அப்படி முடிச்ச இப்படித்தான் நடக்குமா? என்ன எழவோ ம் தலையெழுத்து’’ என புலம்பிக்கொண்டே வேலையில் மூழ்கினான்.

ஆனந்தா தியேட்டரிலிருந்து பஸ்ஸாண்டு வரை கூட்டி பெருக்கி, அள்ளி முடித்து மாட்டு வண்டியின் மரக்குடுவையில் போட்டான் குடுவை நிறைந்ததும் பெரியப்பா வண்டியை கிளப்பி கம்போஸ்ட்டில் குப்பையை தட்டிவிட்டு பஸ்ஸாண்டு சைவ உணவு விடுதிக்கு வந்தார். பாலு போகும் வரும் பேரூந்துக்களையும், அதனுல் பயணிக்கும் பயணிகளையும், அவன் வயதொத்தவர்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அண்ணா பேரூந்து நிலையம் செல்லும் பேரூந்தில் இவனோடு படித்த கந்தசாமி ஜன்னல் வழியாக பாலுவைப் பார்த்துவிட்டான். இவன் ஓடி மறைய முற் பட்டான் ஆனால் அதற்குள் அவன் இவனை கண்டுபிடித்து அழைக்காரம் பித்தான்.

‘’டேய் பாலு..டேய் பால சுப்பிரமணி ..ஒன்னத்தாண்டா’’என்று அவனருகில் வந்து பிடித்துக்கொண்டான். இவன் செய்வதறியமல் தத்தளித்தான்.

‘’என்னப்பா காதல்மன்னா என்ன மெட்ராஸ்ல சினிமாலே சேந்துட்டேன் சொன்னாங்ககடசிலெபஸ்டாண்டுலநிக்கிறே’’என்றுஎகத்தாளமாய் பார்த்தான் கந்தசாமி.பதிலுக்கு திண்டாடினான் அந்நொடி அவனை கலங்கடித்தது.  பதில் தேடினான் அவ்னுக்குள் என்னயென்னவோ வந்து, வந்து, போனது. இறுதியில் அவன் தப்பியோடினான் அதைப் பார்த்த கந்தசாமி விழுந்து,விழுந்து சிரித்தான். பின்பு பாலுவை அவமான படுத்திய திருப்த்தியில் அவனுக்கான பேரூந்தில் ஏறிக்கொண்டான். அவன் சென்றுவிட்டதை உறுதிசெய்துக்கொண்டு மீண்டும் அந்த உணவு விடுதிக்கு வந்து நின்றான். அப்போது அவன் பெரியப்பா கம்போஸ்ட்க்கு சென்று வந்துவிட்டார்.

நண்பகலின் உச்சத்துக்கு வந்துவிட்டதால் பசி வயிற்றைக் கிள்ளியது பாலுவுக்கு. உணவு விடுதியிலிருந்து பதார்த்த வாசனை மேலும் பசியை தூண்டியது. மாட்டு வண்டியை விடுதியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு வந்த பெரியப்பா ‘’என்னப்பா என்ன பசிக்கீதா’’ அவன் தலையாட்டினான்.

‘’செத்தப்பொறு எலய அள்ளிப்போட்டுட்டு கேட்டா எதாச்சும் தருவாங்க’’என சொல்லிக்கிட்டே விடுதிக்குள் நுழைந்தார். இவனும் ஆவலோடு பின் தொடர்ந்தான்.

கல்லாவில் உரிமையாளர் உணவு உட்க்கொள்பவர்களையும், பரிமாறுபவர்க ளையும் மாறி, மாறி கவனித்துக் கொண்டிருந்தார். பெரியப்பா தலைப் பாகையை அவிழ்த்து மணிக்கட்டில் போட்டபடி தலை குனிந்து வணங்கிக் கொண்டே உள்ளேச் சென்றார். பாலு தானும் செய்ய வேண்டுமோ என தர்ம சங்கடத்தில் இருந்தான் ஆனால் அதற்க்கான சூழல் ஏற்படவில்லை. உணவு விடுதியின் உள்ளரையில் உள்ள சமையலறைக்குச் சென்று பின் வாசள் மூலையில் சாத்திவைக்கப்பட்டிருந்த குச்சி மாரை இரண்டை எடுத்து ஒன்றை அவனிடம் கொடுத்து வேலைப் பற்றி விளக்கிவிட்டு விடுதியின் மேல் உள்ள தொழிலாளிகள் தங்கும் அறைக்குச் சென்று கூட்டினார். இவன் சமையலறை யில் சிதறிக்கிடக்கும் உணவு பதர்த்தங்களை கூட்டி அள்ளினான். நீள் வடிவ உலோக கல்லில் புளித்த நெடியுடன் பேப்பர் ரோஸ்ட் வார்ந்துக் கொண்டி ருந்தது.

அதனைச் சுற்றி ஊத்தாப்பம் பொருமிக்கொண்டிருந்தது. தலைமை சமையளர் மாவு மேனியை புரட்டி, புரட்டி எடுத்தார். பரிமாரர் ‘’ ர்ண்டு ரவா என ராகமாய் சுருதி பிசகாமல் பாடினார். அவர் குரல் கேட்டவுடன் கல்லில் விளக்குமார் விளையாடியது.அடுப்புக்கொள்ளையில்தகி,தகித்துக்கொண்டுயிருக்கும்ரோஜா வர்ண தீஉருளைகள் உலோக தட்டோடு இடைவிடாமல் உறவுக் கொண்டி ருந்தது. சமையலறையை கூட்டி ஒரு ஓரமாய் குவித்துவிட்டு சரக்கறைக்குள் நுழைந்தான் அங்கே மதிய உணவுக்கான தலைவாழை இலைகளை நறுக்கிக் கொண்டிருந்தான் ஒருவன்.

‘’என்னப்பா புதுசா’’எனக்கேட்டான்.

‘’இல்ல எங்க பெரியப்பாக் கூடா வந்துருக்கேன்.’’என்று பதிலுரைத்தான்

சரி சரி வேரசாஅள்ளிட்டுப்போ வேல கெடக்கு’’என்றான் இலை நறுக்குபவன். கூட்டினான் இலையின் அடர்த்தியால் இலைகள் நகர மறுத்தது. மூன்று நாட்களின் கழிவு இலைகள் சிறிய தாவிர குன்றைப் போலிருந்த்து. பன்னைப்பெட்டியில் அள்ளி நிரப்பி பின் வாசள் வழியாக சென்று அங்கே நிறுத்தப்பட்டுருந்த மாட்டு வண்டியில் போட்டான். நிலையத்தின் வாசளில் பெரியார் பேரூந்து வெளியேறிக்கொண்டிருந்தது. அதை பார்த்ததும் பாலு வேகு, வேகுன்னு வந்து சமையல் அறைக்குள் நுழைந்துக்கொண்டான். அங்கு பெரியப்பா கழிவறையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தவர் இவனை கண்டதும். ‘’என்னப்பா அள்ளியாச்சா?’’எனக்கேட்டார்.

‘’இன்னும் கெடக்கு”என்றான்.

‘’சரி வா நா அள்ளித் தாறேன்’’ என்றார்.

‘’இல்ல நான் அள்ளி தாறேன் நீ போயி தட்டு”என்றான்.

‘’ஏம்பா’’

‘’ம் மாடு வெறிக்குது’’ என மலுப்பினான்

‘’சரி’’

அவன் அள்ளிவிட்டான் பெரியப்பா சுமந்துச்சென்று மரக்குடுவையில் தட்டினார். அதன்படி இணைந்து செயலாற்றினர். மரக்குடுவை நிறைந்துவிட்டது.

‘’டேய் நா தட்டிட்டு வந்துறேன் நீ தொட்டிய அள்ளிபோட்டுட்டு அலசிவிட்டுறு நா வந்துறேன்’’ எனச்சொல்லி விட்டு வண்டியை கிளப்பினார்.

‘’பெரியப்பா பசிக்குகுது’’எனக் கேட்டான்.

‘’பர்க்கால இருசூடா பனிக்கல தூலுசிட்டு கெலுசுவோம்.’’என சொல்லிவிட்டு மாட்டின் பின் புலத்தை வலது கால் பெரு விரலால் நிமிட்டிவிட்டு கழித்து கயிற்றை சுண்டுவிட்டார் அதன்படி மாடு முன்னோக்கி பாய்ந்துச்சென்றது. அவனுக்கு அடுப்படியில் தயாரித்துக்கொண்டிருக்கும் பதார்த்தங்களின் நெடி வாஞ்சையோடு வாரியணைப்பதாய் இருந்தது. விட்டால் சுட்டுவிடுமளவுக்கு தைரியம் கூடியது. ஆனால் சுயம் வேலி அடைத்தது.

எச்சில் விழும் தொட்டிக்கு சென்றுப்பார்த்தான். ஐந்தடி தொட்டி நிரம்பி பிதுங்கிக் கிடந்தது. கடந்த இரவு, காலை இலை எனக் கிடந்தது. இப்ப அல்ளவில்லையெனில் மதிய இலையும் சேர்ந்து கடையை நாறடித்துவிடும். தொட்டிக்குள் இறங்கி அள்ளவேண்டுமென்றால் அதற்கு முன் தொட்டியில் இலை போடுவதை நிறுத்தவேண்டும். அதை யார் சொல்வது. கைலியை தூக்கி தொடைக்கு மேல் கட்டிக்கொண்டு தொட்டிக்குள் இறங்கினான். வெந்து நமந்துக் கிடக்கும் இலையின் வெப்பம் உள்ளங்காலில் ஏறி கண்களை எறியவைத்தது. உடல் முழுவதும். எறியாரம்பித்தது.

உணவுயுண்ட இலைதான் ஆனால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வில்லையென்றால் அக்குனியாக கொதித்து வெம்பிவிடும் அதை அள்ளும்போது தீ சுடரை அள்ளுவதைப்போன்று வெம்மை தாக்கும்.

மேலே கிடந்த இலைகள் சற்று முன் போட்ட இலைகள் என்பதால் சூடாக இல்லை ஆனால் அடியில் கிளறி அல்லும்போது ஆவி மேவி உடலெங்கும் பரவி சட்டை கைலியை நனைத்து நெற்றியில் வெப்பப் பூக்கள் அரும்பியது நாசி நுனைகளில் குமுலிட்ட வியர்வை திவளைகள் பாதரச உருளைகளாக உருண்டுச் சென்று தரையில் வரைபடமானது.

எச்சில் இலைகளில் டிபன் இலைகள் என்பதால் சட்டினி, கருவேப்பிலைகள் தான் அதிகம் இருந்தது. ஒரு சில இலைகளில் அதுவும் இல்லை. இருப்பினும் அந்த இலைகளை வாசனைக்காக பன்றிகள் நன்றாக தின்னும். ஆனால் தண்ணீரல் அலசிப் போடும் ஊரல் தண்ணீருக்கு ஆகாது. மதிய இலைகளாக இருந்தால் அதில் உண்டு மீந்த காய்கறிகள் இருக்கும் அதை தண்ணீரில் அலசிப்போட்டால் ஊறல் தண்ணீரில் காய்கறிகள் மிதக்கும் அதை பன்றிகள் நன்றாக குடிக்கும்.

பாலு வீட்டில் உள்ள பன்றிகள் திருமண வீடுகளிலிருந்து அள்ளி வரப்படும் எச்சில் இலைகளியிருந்து வரும் பதார்த்தங்களை தின்று வளர்ந்தவைகள். அதை அலசிப் பழக்கப் பட்டவன் பாலு. ஆனால் இன்று ஹோட்டல்களைப் பார்க்கும் அவனுக்கு மனது நிறைந்தவையாக இல்லை. காசு கொடுத்து சாப்பிடுகிறவர்கள் கீழே போடுகிறவர்களாவா இருப்பார்கள்? அதையும் மீறி அந்த இலையில் மீதி பதார்த்தம் இருக்கிறதென்றால், ஒன்று பஸ்க்காக நெடுநேரம் காத்திருந்து அது வருவதற்கு நேரமாகும் அதனால் பசியமத்தி விடுவோமென ஹோட்டலுக்குள் நுழைந்து உண்டவனுக்கு பஸ் வந்த தையறிந்து அப்படியே போட்டு விட்டு ஓடியவனாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஓசியில் யாரவது வாங்கிப் போட்டதை கிடைக்கிறதே என கணக்கு வழக்கின்றி தின்று முடியாத பட்சத்தில் அரை குரையாக தூக்கிப் போட்ட இலைகளில் மீந்துயிருக்கும். ஆனால் அப்படி எதும் நிகழாதனால் இலைகள் கழிவிப் போட்ட பாத்திரமாய் இருந்தது. முடிந்தால் மறு சுழற்சிக்கு கூட விடலாம்.

கனமான இலைகளை பிரித்து எச்சில் தொட்டிக்கு கீழே உள்ள டிரம்மில் போட்டான். ஒன்றுமற்ற லேசான இலைகளை எச்சில் தொட்டிக்குள்ளவே ஒதுக்கிக்கொண்டான். சரக்கு இருக்கிறதா இல்லையாவென்று இலையே திறந்துப் பார்க்காமலேயே அதன் கனத்திலையே தெரிந்துக்கொண்டான்

டிரம் நிறைந்தவுடன் மற்ற இலைகளை பண்ணப்பெட்டியில் போட்டு நிரப்பினான் அது நிறைந்தவுடன் பெரியப்பா வந்து தூக்கிச் சென்று மாட்டு வண்டியிலுள்ள மரக் குடுவையில் தட்டினார். அவர் வருவதற்க்குள் அடுத்த நடையை அள்ளி வைத்தான். பத்து நடையில் எச்சில் தொட்டி காலியாகி விட்டது. அதற்கு முன் அவன் தலையிலும் கழுத்திலிலும், முதுகி லும் பத்து, பதினைந்து எச்சில் இலைகள் விழ்ந்துவிட்டது. பாவம் சாப்பிட்டு விட்டு இலையை எடுத்து போடுபவர்களுக்கு இலை தொட்டியை சுத்தம் செய்வது தெரியவா போகிறது. அவன் அதை அப்படியே ஏற்றுக்கொண்டான். கோடாலி தூக்குபவன் குன்னை வெளியே தெரிந்தால் என்ன உள்ளே தெரிந்தால் என்ன.

எச்சில் தொட்டிலில் இலைகளை அள்ளி முடித்தவுடன் தொட்டிக்குள் தண்ணீர் ஊற்றி பக்க சுவற்றில் படிந்திருக்கும் பதார்த்த படிமங்களை குச்சி மாரால் நன்றாக நர, நரவென தேய்த்துக் கழிவிட்டு, பெரியப்பா பருகி வைத்திருந்த வாளித் தண்ணீரை தொட்டிக்குள் பளிச்சென்று ஊற்றி மீண்டும் நன்றாக தேய்த்து கழிவினான்.

தொட்டி கட்டப்பட்டதும் எப்படி மகிழ்திருந்ததோ அதன்படி இருந்தது. அதைக் கண்ட அவனுக்கும் சந்தோஷம். தாய் தன் பிள்ளைக்கு ஒப்பனை செய்துவிட்டு மகிழ்வதைப் போன்று அவன் நெகிழ்ந்தான்.

தொட்டியின் உள் கூட்டில் தேங்கிருந்த நீரை கையால் கோதி அள்ளிக் கொண்டிருந்தான் அப்போது ஓரு எச்சில் இலையை அவன் தலையில் விழுந்து அதனுள்ளிருந்து சட்டினி முகத்தில் வழிந்தது. சட்டென்று எழுந்தான். அதற்குள் அவன் தலையில் காரி உமிழ்ந்த பச்சை நிற சளி விழுந்தது. அதை தொடர்ந்து கொப்பளித்த தண்ணீர் முகத்தில் தெரித்து சிதறியது. துப்பியவன் அதை பொறுப்படுத்தமல் செல்ல இவன் அடுத்த தாக்குதலிருந்து தப்பிக்க தொட்டிலிருந்து தாவி ஏறிவிட்டான். இவைகளை கவனித்த பெரியப்பா பலத்த சத்தத்தை எழுப்பினார். ம் ஹீம் ஏலையின் சத்தம் சபையேறது என்பது அவருக்கு புதியது அல்ல.

பாலு அதை பற்றி கவளைக்கொள்ளமல் அவன் சிந்தனை வேறோரு திசைலிருந்தது. ‘’நம்ம படத்திலே இப்படி ஷாட் வச்சா எப்படி இருக்கும்’’என்று சிந்தித்தான்.

                                                        அத்தியாயம்  4

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அமைந்திருக்கும் கம்பவுண்டு வீடு. அங்குதான் பாலு சுதா புது மண தம்பதிகளாய் வாசம். மாதம் நூற்றமைபது ரூபாய் வாடகை ஐந்து வீட்டில் நடு மையத்தில் கிழக்குப் பார்த்த வீடு. காம்பவுண்டின் வடக்கு மூலையில் இருக்கும் வட்ட கிணற்றில் கடவாய்ப் போட்டாள் சுதா. சலனமின்றிருந்த நீரின் மேல் பரப்பில், வெள்ளி நிற மேகங்கள் ததும்பி விரிந்து பக்கவாட்டு சுவர் மோதி வட்டமடித்தது. இரைத்த நீரை பிளாஸ்டிக் குடங்களில் ஊற்றி நிரப்பினாள்.

வாசலில் அள்ளிப் போட்டிருந்த அடுக்களை பாத்திரங்கள் கழுவதற்க்காக ஒழுங்கற்றுச் சிதறிக் கிடந்தது. நீலமும், வெள்ளி நிறமும் கலந்த வானம் வெய்யிலை கொண்டுவந்து சேர்த்தது.

காம்பவுண்டில்பெரும்பாலும்அணைவரும் கூலி வேலைக்கு சென்றிருந்தனர்.  சுதா மட்டும் வீட்டிலிருந்தாள்.

முற்றத்தின் எதிரே உள்ள ஒலை குடிசையின் அடி வாரத்தில் நின்றிருந்த வேப்ப மரக் கிலையில் அணில்கள் கூச்சலிட்டபடி அங்குமிங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தது. வளைந்த கிலையில் இரண்டு காகங்களில் ஒன்று மற்றோரு காகத்தின் அருகே தத்திக்கொண்டே ஏதோ கரைந்தது. பதிலுக்கு மற்றோரு கிலையில் ஒற்றைக் காலில் தவம் இருப்பதுப்போல் நின்றிருந்த காகம் அதை ஆமோதிப்பதுப்போல் பதிலுக்கு கரைந்தது.

ஓலை குடிசயில் சென்னம்மா இரவு பின்னிய பஞ்சாரக் கூடைக்கு அடைப்புக் கொடுத்து பின்னிக்கொண்டிருந்தாள்.

பிளாஸ்டிக் குடத்திலிருந்து தண்ணீரை அலுமினிய வட்டாவில் ஊற்றிவிட்டு தலப்பலையில் அமர்ந்து காலை குத்த வைத்தாள். சேலை மொட்டிக்கு உயர்ந்ததாள் அதை அடிகடி இழுத்துவிட்டபடி பத்திரத்தை எரு சாம்பல் பூசி விலக்கினாள். அவள் சேலையை இழுத்துவிடுவதா பாத்திரத்தை விலக்குவதா என்பதில் சிரமபட்டாள். அவள் வீட்டில் இப்படி வேலை பார்த்ததும் கிடையாது. சேலை உடுத்தி இப்படி அமர்ந்ததும் கிடையாது. அதனால் சேலை மொட்டிக்கு மேல் உயந்துக்கொண்டே இருந்தமையால் அவள் கால்களில் உள்ள பழுத்த இலையின் செம்பழுப்பு நிறம் வான் ஒளியில் மிளிர்ந்தது. அதை யாரும் கவனிக்கிறார்களா? இல்லையா?, என எதிரே பார்த்தாள். யாரும் இல்லை ஆனால் கிணற்றுக்கப்பால் உயர்திருந்த விருச மரக் கிலையில் ஒரு மைனா தன் சிறகை உலர்த்தியப்படி மஞ்சல் கண்களை கூர்மையாக்கி அவளை கவனித்தது. சுதாவுக்கு அது என்னவோ போலிருந்தமையால் கிழே கல் தேடினாள்.

அதற்குள் அந்த மைனா தன் துணையோடு அடுத்த மரத்திற்கு தாவிவிட்டது.

கழுவிய பாத்திரங்களை அள்ளிச்சென்று அடுக்களையில் அடுக்கினாள். என்றால் தனியாக கிடையாது. பத்துக்கு பத்து அறையில் தரையில் பதித்த மண் அடுப்பு, அதன் மேலே நீண்ட பலகை அதன் மீது பாத்திரங்கள், அரசளவு சாமங்கள் அடுக்கிக் கொள்ள வேண்டும். ஒன்றை எடுக்கின்றப்போது மற்றோன்று சரிந்து விழுவது சகஜம். அடுப்பை தடுத்து இடுப்பளவுக்கு ஒரு குறுக்கு தளம். அதைக் கடந்து சிமெண்டு தளம் அதில் அமரலாம், தூங்கலாம் ஓடு வேய்ந்த வீடு வெயிலையும், மழையையும் அவ்வப்போது அனுபவிக் கலாம் அதைப் பற்றி வீட்டின் உரிமையாளருக்கு கவலைக் கிடையாது.

இந்த வீட்டில்தான் பாலுவையும், சுதாவையும் குடிவைத்து பாதுக்காப்புக்கு பெரியப்பாவையும், சின்னம்மாவையும் இவர்கள் சின்ன மகள் முருகாயவும் உடன் வைத்தனர். இவர்கள் மூன்று பேரும் கண்ணூம் கருத்துமாக கவனிப் போம் என்ற பேரில் கைதியைப்போல் நடத்தினார்கள்.

இந்த கவனிப்பு எரிச்சலை உண்டாக்கினாலும் அடைக்கலத்திற்க்காக அனைத் தையும் ஏற்றுக்கொண்டனர். அடுக்கலை மூலையில் கிடந்த வயர் கூடையை தேடி எடுத்துக்கொண்டு காய்கறிகள் வாங்க கடைக்கு சென்றாள்.

கடையின் முன்பாக நீண்ட பலகையில் மூங்கில் தட்டுக்களில் காய்ந்த காய்கறிகள் ஈ மொய்த்துக்கொண்டிருந்தது. கடையின் உள்ளே மற்றோரு இரும்பு தட்டில் புதியதாய் வாங்கி வந்த காய்கள் பச்சையும், சிகப்புமாய் மின்னியது. அவர்கள் வியாபார உக்திப்படி வெளியில் ஈ மொய்த்திருக்கும் காய்களி முதலில் விற்றுத் தீர்ப்பது. பின்பு புதிய காய்களை அள்ளி வெளியே வைப்பது.

இரண்டோரு பெண்கள் வெளித்தட்டிலுள்ள காய்களை பொறுக்கி அதை நசிக்கி தரம் பார்த்து மற்றோரு சிறிய பிளாஸ்டிக் தட்டில் போட்டு கடைக்காரியிடம் கொடுக்க அவள் எடையற்ற தேய்ந்துப்போன படிக் கற்களால் அளந்து அதை துண்டு பேப்பரில் கணக்கிட்டு பணம் பெற்று எண்ணெணய் சீழ் படிந்த மரப் இழுவை டிராவில் போட்டுவிட்டு மீதியை தந்துவிட்டு அடுத்தவளை கவனித்தாள்.

சுதா காய்கறிகளைப் பார்த்தாள் அணைத்தும் குப்பையில் போட வேண்டிய தாக இருந்தது. அதனால் உள்ளே இருக்கும் காய்கறித் தட்டை கவனித்தாள். அணைத்தும் அவளை வசிகரமாய் அழைத்தது. உடனே கடையின் விதியை மீறி கடைக்குள்ளிருக்கும் தட்டில் கைவைத்து காய்களை பொறிக்கினாள். வெண்டையின் முனையை முறித்தெரிந்தாள். தக்காளியை பிதுக்கினாள். அதை கவனித்த கடைக்காரிக்கு தீ பற்றியது அங்கு இருந்த மற்ற பெண்களில் ஒருத்தி இன்னோருத்தின் கையை சுரண்டினாள். அவள் கிளுகென்று சிரித்தாள். கடைக்காரிக்கி வந்ததே கோபம்.

‘’ஏய் ஒனக்கு என்ன வேணுமோ என்ட்ட கேளு அதெ விட்டுட்டு கண்டதுலெ கை வக்கிறே அதுவும் உள்ளே இருக்குறேதுலெ மத்தவங்களுக்கு நா எப்படி விக்கிறது’’என கண ஜோராக் கத்தினாள். அதை கேட்ட கடைக்காரர் கிழே உட்கார்ந்து தக்காளியை ரகம் பிரித்தவர் பாம்பை பார்த்தவன் கம்பெடுக்க ஓடியவன் போன்று ஓடி வந்து சுதா கையில் வைத்திருந்த காயைப் பறித்து ரோட்டில் வீசினான். இதை கவனித்த மற்ற பெண்கள் சிரித்தனர். சுதா தன்மான சிறகுகள் உயிரோடு பறிக்கப்பட்டதாய் உணர்ந்தாள்.

அதற்கு விளக்கமளிப்பதாக கடைக்காரன் கடும் கோபத்தோடு கத்தி பேசினான்.

‘’ஒங்காளுக கடப்பக்கமே வர மாட்டாங்க நீ வந்ததுமில்லாமே கண்டத கை வைக்கிறே போ நீ’’ என விரட்டினான். கடைக்காரன். சுதாவுக்கு ஓவென்று கத்தி அழத் தோன்றியது ஆனால் அடக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அப்போது பாலுவின் பெரியப்பா மகள் முருகாயி எதிரே வந்தவள். சுதாவின் வாடிய முகத்தைப் பார்த்து விசாரித்தாள். அவள் சொல்ல தயங்கினாள். முருகாயி சிறியவளாக இருந்தாலும் முகக்குறியறிந்து வற்புற்த்தினாள். சுதா நடந்தவைகளை கூறியதும். முருகாயி விடு, விடுவென்று கடைக்கி சென்று ‘’என் மதினியே என்ன சொன்னிங்க’’என கேட்டாள். அதற்கு பதில்லில்லை மீண்டும் கத்திக்கேட்டாள். கடைக்காரிக்கு கோபம் வந்தவளாக..

‘’யேய் என்ன பெரிய இவளோ ரவிடி மாதிரி கத்துரே ஒம் மதினியே எதையும் தொடக் கூடாதுன்னு சொன்னேன் அதுக்கென்னடி இப்ப’’என்றாள் கடைக்காரி.

‘’தொட்டு வாங்கத் தானே விரிச்சி வச்சுருக்கே’’

‘’அது மனுஷங்களுக்கு ஒங்களுக்கில்ல’’

‘’ நாங்க பீய்ளே தொவட்டிக் குடுத்தாலும் காசுனா வாய பொழந்துக்கிட்டு வாங்குறே’’

‘’ஏண்டி ஈனச்சாதி நாயே யாருட்ட பேசுரே இழுத்து வச்சு அறுத்துப் புடுவேன்’’ என தேங்காய் சீல் எடுக்கும் இரும்பி கொரண்டியைக் காட்டி மிரட்டினாள் கடைக்காரி.

‘’ இது மட்டும் எங்கண்ணனுக்கு தெரிஞ்சது நடக்குறது வேர’’

‘’யேய் என்ன ஓங்கண்ணே பெரிய வெண்ணையோ போடி இல்ல மண்டையே பொழந்துப் புடுவேன்’’என கிழே கிடந்த விறகு கட்டையை எடுத்துக் கொண்டு ஓடு வந்தான் கடைக்காரன் அதை பார்த்த சுதா பதறினாள். ஆனால் முருகாயி சாதுரியமாய் கையாண்டாள் வேகமாய் பாய்ந்தவனை விழகிக்கொண்டு குண்டி புரத்தில் ஒரு எத்துவிட்டாள் முருகாயி. காய்கறிகள் அடுக்கி வைத்திருக்கும் மூங்கில் தட்டில் போய் விழுந்தான் கடைக்காரன். அணைத்தும் சிதறி விழுந்தது. கடைக்காரி பாய்ந்து அவளை பிடிப்பதற்குள் முருகாயி அடுத்த அடிக்கு தயரானால் விழுந்துக் கிடந்த கடைக்காரன் கையிலிருந்த விறகுக்கட்டையை பறித்து அவன் மனைவியின் தலையில் போட முற்பட்டாள். அதை சுதா தடுத்து அவளை இழுத்துச் சென்று விட்டாள்.

கடையில் கூட்டம் கூடிவிட்டது. வந்த சனம், போன சனம் ஆளுக்கொரு ஆலோசனை தந்தது.

‘’அவளே புடிச்சி உள்ளே வைக்கனும்’’

‘’அவே கால் கையே ஒடைக்கனும்’’

‘’கும்பியே அறுத்து கூதக்காயனும்’’

‘’இல்ல நம்ம பயல்கலே வச்சி இழுக்க வைக்கனும்’’

‘’அவ பாவடையே உருவி அம்மணமா ஓட விடனும்’’

தடித்த வார்த்தைகள் வெடித்துக் கிளம்பியதில், அடி வாங்கியவனுக்கு ஒரு பக்கம் அவமானமாய் இருந்தாலும் மறு பக்கம் அனுசரனையான வார்த்தை அவனுக்கு மருந்திடுவதாக இருந்தது. இருப்பினும் வியபாரம் நேரம் என்பதால் மேலும் அதை பற்றி சிந்திக்காமல் எப்படியோ நாம் அடிப்பட்டாலும் அவளை தொடவிடாமல் சாதி தர்மத்தை காப்பாற்றிவிட்டோம் என்ற பெருமையாக கடைக்காரன் நினைத்தாலும் அவனுக்குள் அடிப்பட்ட ரணம் பாம்பாக நெளிந்தது. விஷம் உடல் மேவி வழிந்தது. அதை ஒன்று திரட்டி ஒரு ஓரமாய் ஒதுக்கிக்கொண்டு வேலையில் மும்முரமானன்.

ஆனால் அவன் மனைவி அம்மணமாய் உருவப்பட்டவளாய் உணர்ந்தாள் கணவனின் இயளாமையே எண்ணி வருந்தினாள்.

‘’என்ன ஆம்பள நீ பொட்டக் கூதி தள்ளிவிட்டு அடிக்கிறா வாங்கிட்டு நீ பாட்டுக்கு நிக்கிறே நம்மாள்களுக்கு சொல்லிவிட்டு அவளே என்ன பண்றேன் பாருங்க’’ என ஆவேசமாய் கத்தினாள். கடை அடக்கமாய் பதிலுரைத்தான்.

‘’ இங்க பாருடி ஈன சனத்துட்ட வம்பிளுத்தா பீய் சொமக்கனும் முடியுமா போ போயி வேலையே பாரு’’என எரிந்த கொல்லியில் தண்ணீர் ஊற்றினான்.

‘’அப்ப நாளப் பின்னே கொறப்பயக யென் கையப் புடிச்சி இழுப்பாய்ங்க விட்டுட்டு நில்லுய்யா’’

‘’அதான் நடந்து போச்சிலே அவே யாரு வந்த நம்மா சாதிக்காரிக்காரிதானே அவளே கொறப்பயே கூட்டிகிட்டுவந்து குடும்பம் நடத்துறே திமுறுதான் அவளே ஆட வச்சிருக்கு’’

‘’ஆமா வந்தவ நம்ம சாதிக் காரி என்னக்கி ஒரு நாடாத்தியா இருந்து கொறப்பயக் கூட ஓடி வந்தளோ அப்பவே அவளும் கொறத்திதான்.’’என பேச்சு சுட, சுட வடை சட்டியில் எண்ணெய் யின்றி வெந்துக்கொண்டி ருந்தது.

வீட்டுக்கு இழுத்துச் சென்றவள் முருகேஸ்க்கு அறிவுரை கூறினாள் அவள் மதினி பேச்சுக்கு மறுப்பேதுமில்லாமல் அவள் சொல் கேட்டாள்.

‘’யேய் என்ன முருகேஸ் இப்படி பன்னிட்ட’’

‘’அப்புறம் என்ன நீங்க யாரு ஒங்களப் போயி தொடக்கூடதுன்னு சொன்னா எங்களுக்கு பழகிப் போச்சி அது ஒங்களுக்குமா’’

‘’யாரா இருந்தா என்ன எல்லாரும் மனுஷ்ங்கதானே ஆமா எப்பவுமே இப்படித்தான் நடப்பாங்களா’’

‘’ஆமா மதினி’’

‘’அப்பறம் எதுக்கு அந்த கடையிலே வாங்குறிங்க வேறக் கடைக்கு போக வேண்டியதுதானே’’

‘’எங்க போனலும் எங்களுக்கு இப்படித்தான்’’

‘’அவுங்க டேசனுல கம்பிளின்டு குடுத்தா என்னாகும்’’

‘’குடுக்கட்டும் பாப்போம் அதெல்லாம் அந்த காலம் அப்புறம் திருப்பி வந்து அடிப்பேன்’’

‘’யெய் வளர வேண்டியவ இப்படியெல்லாம் பன்னாதே’’

‘’இல்ல மதினி நீங்க அடுத்தாளுனா பரவாயில்ல அவுங்க ஆளுகதானே’’

‘’அது அவுங்களுக்கு தெரியுமா?’’

‘’ஒங்க கல்யாணம் இந்த ஊருக்கே தெரியும். தெரிஞ்சிருந்தும் வம்புழுத்தா என்ன அர்த்தம். இது மட்டும் எங்கம்மாவுக்கு தெரிஞ்சது சிங்கிலியாட்டம் ஆடிப்புடும்’’

‘’இதெ விடு யாருட்டையும் சொல்லதே’’ என கண்களில் நீர் தேங்க கூறினாள். அதை அவள் கவனித்தாள் தேவையின்றி பிரச்சனையை இழுத்துவிட்டோமோ என குற்றவாளியாக எரிந்தாள் முருகாயி. விழிகளிலிருந்து நீர் குண்டுகள் தரையில் இறங்கி உருண்டோடியது. அப்போது. வாசளில் போஸ்ட்டுமேன் பாலுவின் பெயரைச் சொல்லி அழைத்தார்.

‘’பாலு யாரு’’

‘’ம் சொல்லுங்க சார்’’

‘’லெட்டர் வந்துருக்கு’’என சொல்லிக்கொண்டே கடிதக்கட்டுகளிருந்து ஒரு இன்லெண்டு லெட்டரை கொடுத்தார். அவள் முகவரியைப்பார்த்தாள்.

                                                                  அத்தியாயம்  5

வேட்டைக் காரனிடமிருந்து தப்பி வந்த சந்திரா அடிப்பட்ட சாரைப்பாம்பாக காற்றுக் குடித்தபடி தன் குடிசைக்குள் கிடந்தாள். கூரை இடுக்கு வழியாக வெயில் வழிந்துக்கொண்டிருந்தது. அவளின் உடல் அவமான கொடியால் பின்னிக்கிடந்தது. மனது காளவாசலாக நமந்தபடியிருந்தது. வலது கண்ணீலிருந்து வெம்மையாய் பெண்ணின் இயலாமை நீராய் வழிந்தது.

‘’இனி என்ன செய்யப்போறோம், அந்த கிழட்டு காமனோடு கூடிக் கழிக்கப்போறோமா? அல்லது எதிர்த்து நிற்க போறோமா? இரண்டில் எதை தீர்மானித்தாலும் வாழ்வு சூன்யமாமவது நிச்சயம். ஏன் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள். நம்மை கண்டாலே தீட்டு என்று காலந்தோறும் சாசனம் தீட்டி வைத்திருக்கும் இந்த சமுகம். உடல் இச்சையை தீர்பதற்கு மட்டும் மனுவின் கொள்கையை மாற்றிக் கொள்ளுமா? அப்போது மட்டும் மனு தர்மம் அழிந்து போகதா?

கடவுளே எங்களைப் போன்ற அனாதைகளுக்கு வடிகால் கிடையாதா? பசிக்காக உழைக்கிறோம் ஆனால் அந்த் வேலைக்காக உடலை பனயம் வைத்துதான் பசியை தீர்க்கவேண்டும் மானம் காக்க மானத்தை இழந்துதான் ஆக வேண்டுமா? இனி அந்த வேலைக்கு போக வேண்டாம் பட்டினி கிடந்தாவது சாகலாம் பசி நமக்கு புதியதல்ல.

வேலைக்கு போகவில்லையென்றால் உஅடன் பிறந்தவர்களை எப்படி காப்பற்ற போகிறோம். கல் உடைப்போம், மண் சுமப்போம், இந்த பூமியில் கழிவு வேலைகளை தாண்டி ஆயிரமாயிரம் வேலைக் காத்துக்கிடக்கிறது. அய்யோ கடவுளே ஏழையாக பிறந்தது தப்பா அதுவும் பெண்ணாய் பிறந்தது தப்பு. அதைவிட தாழந்த குலத்தில் பிறந்தது அதை விட தப்பு.’’ இப்படி அவள் புலம்பிக்கொண்டிருக்கும்போது குடிசையின் வாசளில் இரண்டு சைக்கிள் ஸ்டாண்டு போடும் சப்த்ம் அவளை நிலை குலைய வைத்தது. எழுந்துச் சென்று அரை வடிவில் சாத்திருந்த தகர கதவை முழுமையாக தள்ளி திறந்துவிட்டாள். வந்திருந்த கான்ஸ்டபில் பெயர் கேட்டார்.

‘’நீ தான் சந்திராவா/?’’

‘’ஆ..ஆமங்க..’’

‘’வா ஒன்னய அய்யா வரச்சொன்னாரு’’

‘’எதுக்கு’’

‘’ஒனக்கு விளக்கம் மயிரு சொல்லனுமோ’’

‘’யோய் சூத்துலே போடுய்யா அவளே’’என ஏட்டையா கத்தினார்.

‘’சார் மரியாதையா பேசுங்க’’ என்றாள் சந்திரா

‘’அடி களவானி கண்டாரோலி’’ என்று அவள் பிறப்புறுப்பை குறி வைத்து சரியாக எத்தினார் ஏட்டையா.

‘’அய்யோ அம்மா’’என கத்தியவாறு அவள் குடிசைக் கதவை தள்ளிக்கொண்டு விழுந்தாள். போலிஸ் உள்ளே புகுந்து அவளை கதற, கதற கொளுத்தியது. அவள் அடி வாங்க பிறந்தவளாக தன் உடலை திருப்பி, திருப்பிக் கொடுத்தாள். அவளின் உயிர் வேதனையின் குரல் குடிசையின் கூரை மீறி வெளியில் தெரித்து விழுந்தது. தெருவாசிகள் பார்த்தார்கள், பதறினார்கள், ஆனால் பயனேதுமில்லை.

போலிஸின் கொடுர தாக்குதலில் அவள் பழைய சேலை தார்மாராய் கிழிந்துவிட்டதால் உள்ளாடைகள் அவளை மறைத்துப் பார்த்தது. மாறி, மாறி விழுந்தடியில் உள்ளாடைகளும் சல்லடைகளாக மாறியது. அவள் அடியை தாங்குவதா, உடையை மறைப்பதா என போராடினாள். இறுதியில் அவளுக்கு உடலே தற்காப்பாய் அமைந்தது. ஆம் தன்னிலையிழந்தாள்.

வெளியில் இழுத்துப்போட்டது போலிஸ் தெருவில் அடிப்பட்ட நாய்ப் போல் கிடந்தாள். போவோர், வருவோர் பார்த்தார்கள். பழகிப் போனவர்களாய் விழகிப்போனார்கள். வரவழைக்கப்பட்ட ரிக்ஷாவில் அவளை தூக்கி தொட்டியில் போட்டுக்கொண்டு சீட்டில் இரு போலிஸும் அமர்ந்துக்கொண்டு மூன்றாம் உலக போரிலிருந்து இந்திய தேசத்தை மீட்டெடுத்த களப் போராலிகள் போன்ற வெற்றிக் களிப்பில் இரு போலிஸும் சென்றது. அப்போது பள்ளிக்கு சென்று திரும்பிய சந்திராவின் தம்பி ஒருவன் அக்கா ரிக்ஷாவின் தொட்டியில் தொங்கிக் கிடப்பதைப் பார்த்து பின்னால் ஓடினான். ராஜாஜி தெருவின் கடைகள், வீடுகள் மக்கள் கூட்டம் அனைத்தும் கடந்து உசிலை ரோட்டின் வழியாக சென்று டவுன் போலிஸ் டேசனுக்குள் ரிக்ஷா நுழைந்தது. சந்திரா அரை பிணமாய் கிடந்தாள்.


                                                           அத்தியாயம்  6

பாலுவின் நண்பன் கணேசன் எழுதிய கடித்த்தை சுதா பிரித்துப் படித்தாள்.

அன்புள்ள நண்பன் பாலுவிற்கு உன் உயிர் நண்பன் கணேசனின் அன்பு மடல் நான் இங்கு நலம் நீ அங்கு எப்படி இருக்கிறாய் என்பது பற்றி உன் கடித்த்தின் மூலம் அறிந்தேன்.

மகிழ்ச்சி என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை ஏன்யென்றால் நான் உன் நண்பன் உன் மீது எனக்கு அக்கறை உள்ளது. காதல் இனிப்பானதுதான், அது வியரைவில் திகட்டிவிடும். காதலித்தவளை கை பிடிப்பது எத்தனை பேருக்கு வாய்க்கும். அது உனக்கு கை கூடியிருப்பதில் மகிழ்ச்சிதான் அதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது ஆனால் நாம் ஏற்படுத்திக்கொண்ட கொள்கையை நிறைவேற்றிவிட்டு அதன் பின் கல்யாணம் என்ற கதவை திறந்திருக்கலாம். ஆனால் நீ சாதனையை மறந்துவிட்டு சவள புத்தியில் வீழ்ந்துவிட்டாய். இனி எப்போது, எப்படி சாதிக்க போகிறாய்? இனி முடியுமா? காதல் மனம் இருக்கும் வரையில்தான் எதையும் சாதிக்க வைக்கும். கல்யாணம் வாழ்க்கைக்கான போராட்டாத்தில் மூழ்கடித்துவிடும். உணர்வுகளை மழுகடித்துவிடும். நான் சி,ஆர், பி,எப்பில், சேருவதற்கு புறப்படும் போது என்னுடன் உன்னை மெட்ராஸ் அழைத்துச் சென்றேன். அங்கு நீ சினிமா சான்ஸ்க்காக என் சித்தி வீட்டில் தங்க வைத்தேன். செலவுக்கு பணமும் அவ்வப்போது அனுப்பித் தந்தேன் ஆனால் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு சுதா நினைவில் ஊருக்கு சென்று விட்டாய். இறுதியாய் அவளை மணம் முடித்துக்கொண்டு மெட்ராஸ் வந்து சினிமா சான்ஸ் தேடி அலைகிறேன் என எழுதிருந்தாய் தனியாக ஓடி தூரத்தை கடக்கமுடியாதவன் எப்படி சுமையோடு ஓடி கடந்துவிடுவாய்.

எங்கள் முகாமில் அதிகாலை விரைவில் எழுந்திருக்கவில்லை யென்றால் என்ன தண்டனை தெரியுமா?

மணல் மூட்டையை முதுகில் கட்டிக்கொண்டு ஆயிரத்தி ஐநூறு மீட்டர் தூரத்தை மூன்று நிமிடங்களில் கடந்து ஓடவேண்டும். தடுமாறி விழுந்தாள், மேலும் தண்டனை அதிகரிக்கும். அது போன்றுதான் உன் நிலைமை.

உன்னை வரச் சொன்ன இயக்குனரை போய் பார்த்து அவர் படத்திற்கு உதவி இயக்குனராய் சேர்ந்துவிடலாமுன்னு அவர் வீட்டிற்கு சென்று ஒருவாரமாய் அழைந்திருக்கிறாய் அவரை பார்க்க முடியவில்லை. அதுவும் ஹேட்டலில் சுதவை தங்க வைத்துக்கொண்டு யாரோ சொன்ன வார்த்தையில் மயங்கி அவன் பின்னால் சென்று பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை சந்திக்க முயற்சித்துயிருக்கிறாய். கையில் இருந்த பணத்தையும் சுதாவின் நகைகளை கழட்டி விற்று பணம் திரட்டி அந்த ஏஜென்டிடம் கொடுத்து ஏமாந்து அங்குமிங்கும் தேடியலைந்துவிட்டு சுதவிடம் பொய் சொல்லி பத்து தினங்களை கடத்திருக்கிறாய் அவளும் விடுதியறையில் அடைந்துக்கொண்டு பல வித கனவுகளில் நாட்களை நகர்த்தியுள்ளாள். நாட்கள் கடக்க, கடக்க அவள் உன் மீது சந்தேகப்பட்டு கேள்விக் கேட்க. நீ இயலாளமையில் அவளிடம் சண்டைப் போட அவள் கடந்து வந்த பாதையும், கடக்க இருக்கும் பாதை தென்படாமல், இறுதி யாத்திரைக்கு தன் சேலை முந்தானையால் மின் விசிறியில் அடைக்கலம் புகுந்திட, நீ திண்டாடிட ஹோட்டல் நிர்வாகத்தார் உங்களை விரட்டியடிக்க வீதிக்கு வந்து நீங்கள் சிந்திக்க அப்போதுதான் தெரிகிறது. கையில் பரம்பைசா இல்லாமல் மாநகர பெரும் வாயுக்குள் அகப்பட்டு நிற்பது. அதன் பின் நீ அவளுக்கும் அவள் உனக்கும் ஆதரவாய் பேசியுணர்ந்து அடுத்த கட்டத்திற்கு முடிவெடுத்து. சினிமா என்ற மாய உலகைவிட்டு விழகி எதார்த்திற்கு வந்து பெரியவர்களிடம் சரணடைந்திருப்பது நல்லதுதான்.

நீ ஏற்கனவே அந்த இயக்குனரிடம் உதவியாளனாய் இரண்டு படத்திற்கு வேலை பார்த்தாக சொன்னாய் பின்பு ஏன் அவரை சந்திக்க முடியவில்லை.

மேலும் மெட்ராஸில் இருந்தே எப்படியாவது சாதித்து இருக்கலாம். ஏன் திரும்பி வந்தாய் என்பது எனக்கு புரியவில்லை.

பராவயில்லை லட்சிய வாதிகள் என்றும் தோற்பதில்லை. நீ நிச்சயம் ஒரு நாள் லட்சித்தை அடைவாய் அன்று இந்த உலகம் உன்னை கொண்டாடும் அந்த நாளுக்காக் பாடுபடு உயிர் வாழ உடல் உழைப்பை செலுத்திடு, உணர்வு வாழ மனதை திடப் படுத்திடு.

மணந்தோம், பெற்றோம், சேர்த்தோம், மடிந்தோம், என்ற சராசரி மனிதனாய் வாழ்வைக் கடந்து விடாதே. நம் வாழ்வின் சுவடுகள் காலந்தோறும் கவனிக்கப்பட வேண்டும்.

உன்னிடம் மட்டும் பேசினால் போதாது சுதாவுக்கும் படிக்க குடு அப்போதுதான் நம் உலகம் பற்றி தெரிந்துக்கொள்ளும்.

அன்பு சகோதரி சுதாவுக்கு உன் சகோதரன் கணேசனின் அன்பு மடல். எப்படி இருக்கிறாய் என்று நண்பன் எழுதிருந்தான். பாவம் நீ வீடு ஊர், உறவை இழந்து காதலலித்தவனை கை பிடிக்க வேண்டும் என்ற கொள்கையில் அவனோடு இணைந்துவிட்டாய். காவியங்களிலும், இதிகாசங்களிலும் மட்டும் காதலனை கை பிடிக்க சாதனை செய்வார்கள். ஆனால் நீ நிஜ வாழ்வில் சாதித்துள்ளாய். அவன் ஒரு தாழ்த்தபட்டவன் என்று தெரிந்தும். மனசுக்கு பிடித்தவன் கோபுரத்தில் இருந்தாலென்ன குடிசையில் இருந்தாலென்ன அவன் தான் நம் துணைவன். அவன் இறைவன். என்ற உயரிய சிந்தனையில் அவனோடு வந்து அவன் முன்னேற்றத்திற்கு உன் பணம், நகைகளை இழந்தும் இன்னும் உயிர்ப்பாய் இருந்துதிருக்கிறாய்.

உனக்கு உன் வீட்டார் வசதியான இடத்தில் மாப்பிள்ளைப் பார்த்து அதற்க்கான ஏற்பாடுகளில் இருந்த்தை நான் அருகில் இருந்து அறிந்தவன். ஆனால் நீ காதலுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவனோடு வந்திருப்பது சினிமாக்கு மட்டும் சாத்தியம் ஆனால் சினிமாவே உன்னிலிருந்துதான் துவங்குகிறது.

சுதா நீ எப்படி அவனுக்காக அவன் லட்சியத்திற்க்காக உறுதுனையாக இருந்தாயோ அதைப்போன்று அவனும் எந்த சூழலிலும் உன்னை இழக்காமல் கடைசிவரை காப்பான். அவன் உன்னை உன் பணத்திற்க்காகவோ, அல்லது, உயர் சாதியை சேர்ந்தவள் என்ற காரணத்திற்க்காகவே உன்னை கை பிடிக வில்லை. காதல். காதல் உன் மீது தீராத காதல் ஒன்று தெரியுமா உனக்கு திருமணம் ஏற்பாடு நடக்கிறது என்றுதான் அவனுக்கு சான்ஸ் கிடைக்க இருந்த நேரத்தில் மெட்ராஸிலிருந்து ஓடி வந்து விட்டான். உன் பணம் நகை எல்லாம் இழந்தப்பின் நிற்கதியாய் நிற்கும்போது உன்னை கொண்டு வந்து ஊரில் விட்டுவிட்டு அவன் சென்று இருக்கலாம் போலிஸில் உன்னிடம் வாக்குமூலம் வாங்கிவிட்டு உன் வீட்டார்களோடு அனுப்பிவைக்க நினைக்கும் போது அவன் போராடி மீட்டான்.

மெட்ராஸ் சென்று சினிமா சான்ஸ்க்காக விடுதியில் தங்கிருக்கும்போது உன்னை அவன் தொட்டதை கிடையாது. என்பது உன் மனசுக்கு தெரியும். முறையாக திருமணம் செய்துக்கொள்ளுவரை கட்டுப்பாட்டோடு இருந்துள்ளான். இவை எல்லாம் உன் மீது இருந்த உண்மையான காதல்.

இப்படிபட்ட கன்னியமான புனிதமான, உங்கள் உறவில் எக்காலத்திலும் விரிசல் விழுந்துவிடக்கூடாது. இவைகளை ஏன் எழுதுகிறேன் என்றால் இப்படிபட்டவன் அவன் லட்சியத்தில் தோற்றுவிட்டான் என்பதற்க்காக அவனை சபிக்காதே என்றாவது ஒரு நாள் நிச்சமாக ஜெயிப்பான். அதுவரை காத்திரு. காலம் பதில் தரும்.

மற்றவைகள் நான் நம்ம ஊர் பங்குனி பொங்கலுக்கு வரும் போது நேரில் பேசுவோம்.

நன்றி                                                                                                                      
                                                                                                                                அன்பு நண்பன்                            
 
                                                                                                                         கணேசபாண்டியன்

                                                                                                                         காஷ்மீர்

                                                                                                                          04.2.87

                                                                 அத்தியாயம் 7

காவல் நிலைய லாக்கப் அடர் இருளில் சந்திரா மூழ்கிக்கிடந்தாள். காவல் துறையின் கன்னியமான கடமையால் அவள் உடை சிதைந்திருந்தது. வாயில் விழுந்த குத்தால் பற்களில் ரத்தம் கசிந்து உப்பு கரித்தமையால் உமிழை காரி துப்பினாள். அது மூட்டை பூச்சிகளை நசிக்கி, நசிக்கி கரும் ரத்தம் படிந்த பழுப்பேறிய சுவற்றில் பட்டு தெரித்தது. இடை வரை தழுவிக் கிடக்கும் கூந்தல் பற்றி இழுத்து அடித்தால் அலங்கோலமாய் விசிறிக் கிடந்தது.

பூட்ஸ் காலால் வாங்கிய உதைகள் உடலெங்கும் ரத்தம் கன்றியிருந்தது. அவள் கடந்தவைகளை எண்ணி அழுதாள். அந்த சப்த்தம் லாக்கப்க்கு மட்டும் கேட்டது. இது போன்ற அழுகைகள் எத்தனை பார்த்திருக்கும் அந்த லாக்கப். அதனால் சுவர்கள். சலனமற்று இருந்தது.

எஸ்,ஐ, தண்டாயுதபாணி நாற்காலியிலமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு எதிரே நாளை கோர்ட்டுக்கு கொண்டு செல்ல வேண்டியவைகளை சரி பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டோரு போலீஸ் வாசளில் நின்று ஏதோ பேசிக்கொண்டுருந்தனர். எஸ்,ஐ முன்பிருந்த டெலிபோன் சினுங்கியது. அதை எடுத்து காதில் வைத்து

‘’வணக்கம் டவுண் போலீஸ் டேசன்’’ என்றார்.

‘’வணக்கம் சார் நா பெரிய கருப்பன் பேசுறேன் தண்டாயுதபாணியா

‘’ஆமா நாந்தான் பேசுறேன்”

‘’சின்ன உதவி’’

‘’சொல்லுங்க என்ன உதவி’’

‘’சார் ஒங்க ஸ்டேசனுல எதாச்சும் சந்தேக கேச் வந்துருக்கா’’

‘’ம் ஆமா’’

‘’கண்பார்ம் ஆயிருச்சா’’

‘’இல்ல’’

‘’ஓ கே, சார் அதெ என்கிட்ட ஒப்படைக்க முடியுமா’’

‘’யோவ் அது பொம்பளையா’’

‘’பொம்பளைத்தான் வேணும் சார்’’

‘’என்ன கேஸ்’’

‘’டிப்த் அண்டு மர்டர் கேஸ்’’என்றார் பெரிய கருப்பன்

‘’பாவம்ய்யா அவெ சீப்பர் பொம்பள அதுவும் பொய் கேஸ் படுக்க வரலைன்னு களவு கேஸ் குடுத்துட்டான் ஒரு பாவி.’’

‘’சார் அவெத்தான் என் கேஸ்க்கு ஒத்து வருவா ஆறு மாசமா நாயா அழைஞ்சுருக்கோம் சார் மனசு வைங்க, க்ரைம் பிராஞ்சு டி, எஸ், பி என்ன வறுத்தெடுக்கிறாரு. அதான் இந்த கேஸ முடிவுக்கு கொண்டு வரனும், ஒங்க கிட்ட இருக்கிறவளுக்கும் நாங்க தேடுர அக்கீஸ்ட்டுக்கும் பொறுத்தமா இருக்கும் சார். ப்ளிஸ் சார் மனசு வைங்க சார்.’’ என்று மென்மையாக பேசினார் பெரிய கருப்பன்.

‘’இந்த் கேஸ புடுச்சா ஒனக்கு புரோமோசன், எனக்கு என்ன?’’

‘’சார் நாப்பது பவுண் நகை முடிஞ்சா பிப்டி பிரசண்டு’’

‘’எப்படியா”

‘’பார்ட்டியும் பொருளும் சிக்கியாச்சி’’

‘’அப்புறயென்ன தூக்கி உள்ளே போட்டு தண்டனை வாங்கிக் குடுக்க வேண்டியதுதானே’’

‘’சார் பெரிய இடத்துக்கு வேண்டிய ஆளு ஆனா நகையே கை பத்தியாச்சி. அதுக்கு ஆள் தேவை, கேஸா போட்டு கோர்ட்டுலே நிப்பாட்டியாச்சின்னா வேலை முடிஞ்சது. அப்புறம் எதாச்சும் ரெண்டு நகைக் கடக்காரன மிரட்டி நகைகளே வாங்கிக்கிட்டு சிக்கின நகையே பங்கு போட்டுகிறலாம்.

‘’யோவ் கில்லாடிய்யா நீ சரி எங்க இருக்கே’’

‘’கள்ளிக்குடியே தாண்டிட்டேன் இன்னும் பத்து நிமிஷம் வந்துருவேன்’’

‘’குய்க்கா வாயா இன்ஸ்பெக்ட்டர் வந்திருவாறு’’

என பேசிவிட்டு போனை வைத்துவிட்டு உடலை வளைத்து தோய்வான எழும்பை முறுக்கேத்தினார்.

பெரிய கருப்பன் எஸ்,ஐ. மற்றும் இரண்டு போலிஸ் உள்பட மூன்று பேர் காவல் நிலைய வாசளில் ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கினார்கள். அந்த ஜீப் காவல் துறை என்ற அடையாளமின்றியிருந்தது.

பெரிய கருப்பன் ஆறடி உயரம் இரண்டு சிக்கன் சாப்ஸை போன்ற முகத்தில் வைத்தியிருக்கும் மீசை வைத்திருக்கவில்லை, காவல் துறையின் சீருடையும் அணிந்திருக்கவில்லை மாறாக திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் பேரம் பேச வந்த இடையரைப் போலிருந்தார். அவரைப் போன்று மற்ற இரண்டு காவலர்களும் மந்தையை மேய்த்துச் செல்ல வந்தவர்களைப் போன்று இருந்தனர்.

காவல் நிலையத்தில் இவர்கள் வருகைக்காக காத்திருந்த தண்டாயுதபாணி பெரியகருப்பனை கண்டதும் முகம் மலர வர வேற்றார். ‘

‘’வணக்கம் சார் ‘’என்றார் பெரியகருப்பன்

‘’வண்க்கம் கரெக்ட்டா மோப்பம் புடிச்சி வந்திருக்கீங்க’’என கேட்டார் தண்டாயுதபாணி.

‘’பின்னே போலிஸ்ன்னா சும்மாவா’’

‘’அப்ப நாங்கலாம் செக்ரிட்டியா?’’

‘’சே, சே, அப்படி சொல்வேனா’’

‘’சரி கூட்டிக்கிட்டு போங்க ஆனா பேசினப்படி நடந்துங்க”

‘’சீ..சீ இந்த் பெரிய கருப்பன் கொடுத்து வாக்க காப்பாத்துவான்’’

என சொல்லிக்கொண்டே தன் வேட்டியை தூக்கி உள்ளே அணிந்திருக்கும் கட்டம் போட்ட அண்டிராயரின் பக்க பையில் கையை விட்டு நூறு ரூபாய் கட்டை எடுத்து மேஜை மீது வைத்து எடுத்துக்கொள்ள சொன்னார் பெரியகருப்பன். தண்டாயுதபாணி எச்சில் விழுங்கியப்படி எடுத்தார் அதை எதிரே அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த ரைட்டர் பார்த்து வெல.வெலத்தார். அதற்கு காணிக்கையாக இரண்டு நூறு ரூபாய் தாள் கை மாறியது. அதை தொடந்து உத்தரவு பறந்தது. அனைவரும் ஜெட் வேகத்தில் செயலாற்றினார் கள்.

லாக்கப்பிலிருந்த சந்திராவை எழுப்பி அவளை சிறு நீர் கழிக்க அனுமதித்தனர். அதன்பின் அவள் உடலை சுத்தம் செய்திட மிகவும் வாஞ்சையோடு அனுமதித்தனர். அவைகளை கவனிக்கும்போது அவளுல் தான் ஒரு நிரபராதி என்றும் இன்னும் சிறுது நேரத்தில் விடுதலை ஆகப்போகிறோமென சந்தோ ஷத்தில் திலைத்தாள்.

இரவில் தன் தம்பி தங்கைகளுக்கு இரவு உணவு தயாரித்து கொடுக்கலாம் காலையில் பள்ளிக்கு செல்ல உதவி செய்திடலாம், அந்த இன்ஸ்பெக்ட்டரை காட்டிக்கொடுத்து தண்டைனை பெற்று கொடுக்கலாம். என அவளுக்குள் கனவு சிறகடித்தது.

1 கருத்து:

super deal சொன்னது…

அனைவருக்கும் வணக்கம்

புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

நன்றி

நமது தளத்தை பார்க்க Superdealcoupon