22 மே, 2015

மேடை,,,,,,,,( பாகம் 2)

பஸ்சாத்தூரின்நகரத்தைகடந்துவைப்பாற்றின்பாலத்தில்ஊர்ந்துகொண்டிருந்தது.

சாளரம் வழியாக பாலு பார்த்தான் வைப்பாறு இயற்கையின் இரண்டாம் தாரத் தின் பிள்ளையைப் போல் சவளைத்தட்டி மெலிந்துப்போய் ஓரமாய் ஒழுகிச் சென்றுக்கொண்டிருந்தது. 
கோடைக்காலத்தைசமன்செய்திடஆற்றுக்குள்தோண்டியிருந்தஇரண்டுகிணறு கள் வானம்ப்பார்த்து காத்திருப்பது அந்தநடுஇரவிலும்நன்றாகத் தென்பட்டது.

வைப்பாற்றுப் பாலத்தின் சிமெண்டு சாலையிலிருந்து பேருந்து கருத்த தார்ச் சாலையிலிறங்கி வேகமெடுத்தது, பின் சக்கர மேல் தட்டில் அமர்ந்தி ருக்கும் பாலுவுக்கு உணர்த்தியது. பேருந்தின் உருளிப் பட்டை முன்னோ க்கி உருள, அவனின் மனச்சக்கரம் பின் நோக்கி உருளாரம்பித்தது.

‘’டேய் பாலா அடேய் ஒன்னத்தாண்டா’’ தட்,தட்டென பாலுவின் பெரியப்பா தகர கதவைத் தட்டினார். அவனிடமிருந்து எவ்வித பதிலுமில்லை.

‘’ஓய் கூப்புடுறது காதுல விழல மாப்புளே ஜோக்கு பேதும்டா பொழப்பப் பாரு’’என மீண்டும் கத்தினார். மனைவியோடு படுத்திருந்தவன் பேய் கண்டு அரண்டவன்ப் போல் பட, படவென எழுந்து அவிழுந்திருந்த லுங்கியை சரி செய்துக் கொண்டே அவரசரமாய் கதவைத் திறந்தான்.

‘’என்னப்பா இன்னும் விடிலையா? என்றார் அவன் பதில் தேடுவதற்குள், அவர் துவங்கி விட்டார்.

‘’வேல வெட்டிக்கி போனும் நெனப்புயில்லையா?’’ பொண்டாட்டி சொகமெல் லாம் பொழப்புலயிருக்கு முந்தனைக்குள்ள மொடங்கிக் கிடந்தா கஞ்சிக்கி கையேந்தனும், கல்யாணம் முடிச்சி பத்துனாளாச்சி ஒங்கப்பேன் மயிரு போச் சின்னு ஒப்படச்சிட்டுப் போய்ட்டான், ஒன்ன நம்பி பின்னால வந்த புள்ளயே காப்பாத்த வேணாமா?’’என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் பாயிலிருந்து படக்கென்று எழுந்து அடுப்படிக்குள் சென்று நின்று கொண்டாள். அவரின் அறிவுரை திருடர்களை கண்டிப்பதைப்போல் உணர்ந்தாள்.

‘’சரி நா முன்னேப் போறேன் வெரசா வரப்பாரு’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். பாலு வீட்டுக்குள் வந்து மனைவியைத் தேடினான். அவள் களைந்தி ருந்த சேலையை சரி செய்துக் கொண்டிருந்தாள். இவன் இரும்பு வாளியி லுள்ள தண்ணீரை தகர போனியில் கோரி முகம் அலம்பி கொப்பளித்து லுங்கி அடிமுனையில் முகம் துடைத்துவிட்டு, மண் சுவற்றின் மதில் மேலிருந்த கையளவுள்ள கண்ணாடியில் அவசரமாய் தலைக் கோதி, முகம் பார்த்தான். வலது கண்ணத்தில் கடிவாய் சிவந்தி ருந்தது. தடவி பார்த்து விட்டு தன் ஆண் மையின்அராஜகத்தின் அவலத்தை எண்ணி வருத்தமாய் அவளைப் பார்த்தான். அவள்அர்த்த சாமத்தின் அடையாளங்களை களைந்த ஆடையில் கரைத்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளிடம்எதிர்வினையில் லை.

‘’போயிட்டு வாறேன்’’ என்றான். அவள் அதற்கு பதிலேதும் சொல்லவில் லைஅவனும்அதற்க்காககாத்திருக்கவில்லை.ஏனெனில்அவள்நினைத்தது ஒன்று இப்போது நடந்துக்கொண்டிருப்பது வேறு.

பெரியப்பா பெயர் பதிவு செய்திடும் நகராட்சி அலுவலகத்திற்குள், ஓட்டமும், நடையுமாக வந்துச் சேர்ந்தார்.

அங்கே ஆணும், பெண்களுமாய் குழுமிருந்தனர். சிலர் அப்போதுதான் ஓடோ டியும்,வேகமானநடையுமாக வந்துக்கொண்டிருந்தனர். சுகாதார ஆய்வா ளர் அலுவலகத்தில்மரநாற்காலியில்அமர்ந்தப்படிசாளரம்வழியாக கவனித்துக் கொண்டிருந்தார்.

மேஸ்திரிபெயர் பதிவேட்டை மடியில் வைத்தப்படி அலுவலக வாசளில் அமர்ந்து வந்தவர்களையும் வந்துக்கொண்டியிருப்போரையும், நேட்டம் விட்டவாறு, அலுவலக சுவரில் பொருத்திருந்த அஜான்டா வட்டவடிவ கடிக்காரத்தில் நொடிகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார். பெரிய முள், நான்கு ஐம்பத்தெட்டிலும், சின்ன முள், நான்கிலும், நின்று நொடிகளை கரைத்தப்படி இருந்தது. ஐந்தாக இரண்டு நிமிடங்கள் இருக்கவே அலுவலக மணியை அடிக்க உத்தரவுப் பிறப்பித்தார் மேஸ்திரி.

‘’டேய்முனியாஅடிடா’’என்றார்.இதற்க்காகவேகாத்திருந்த முனியன் இருப்புப் பாதையின் தண்டவாளத்தின் அரையடி அளவிலுள்ள இரும்பு துண்டை உருளை வடிவிளான தடியால் உடல் அதிர அடித்தான். அதுதான் துப்பரவு பணியாளர்களுக்கான மனித கழிவுகளை மனிதனை அகற்ற வேண்டிய அவள மணி. அடித்தான் டங்..டங்.. டங்.. .. டய்ங்.. டய்ங்.. அந்த பெல் அடிப்பதில் அவனுக்கொரு மகிழ்ச்சி அவனடிக்கும் பெல்லில்தான் மொத்த பணிகளும் நடைபெறுகிறது. ஒவ்வொரு துப்பரவு பணியாளர்க ளின் தினசரி பணி அவன் கைகளில்தான் இருப்பதாக உணர்ந்தான். ஓடிவந்த இரண்டு ஆண்க,ஒரு பெண் வரிசையை விட்டு தனியாக நின்றனர். மேஸ்திரி பெயர்களை வாசித்தார்.

‘’முத்தம்மா’’

‘’இருக்கேன் எசமா’’

‘’மாரியப்பா’’

‘’வந்தேன் சாமி’’

‘’முனியா’’

‘’வந்தேன் எசமான்’’

மேஸ்திரி பெயர் வாசிக்க, வாசிக்க தொழிலாளிகள் தலை கவிழ்ந்தப்படி முன் சென்று ஆய்வாளரை வணங்கியப்படி திரும்பாமல் பின்னாடி சென் றனர்.அவர்,அவர்களைஒருமுறைபார்த்துவிட்டுபதிவேட்டில் டிக் செய்தார்.

பெயரடுப்பு முடிந்து தொழிலாளிகள் எதிர்ரெதிரே வரிசையாக நின்றனர். மேஸ்திரி அனைவரையும் ஆராய்ந்து விட்டு இடையில் நின்றிருந்த முத்தனை கவனித்துவிட்டார்.

‘’ஏலேய் முத்தா’’

‘’எசமான்’’என்று நாடியில் கைவைத்து குனிந்து நின்றான்.

‘’தள்ளிப்போடா’’என்றார் மேஸ்திரி அவனுக்கு என்னவென்று புரியாமல் வரிசையிலிருந்து விழகி நின்றான். அவனுக்கு விளங்கும் விதமாகவும், ஆய்வாளார் காதில் பதியுமளவுக்கும் கத்தினார்.

‘’பெரிய மொளாலி நெனப்பு மைரோ வேட்டிக் கட்டிட்டு வந்திருக்க’’ என அரட்டினார் மேஸ்திரி. அப்போதுதான் காக்கி டிராயர் அணியாமலிருப்ப தை உணர்ந்தான்.

‘’எசமான் நேத்து ராத்திரி செக்கானத்துக்கு தேவைக்கு போன கையோடு மறதியா வந்துட்டேன் மண்ணிக்கனும் எசமா சமூகம் மண்ணிக்கனும்.’’

‘’பொஞ்சாதிய மறப்பியாடா போ, போ ரெண்டு நாளைக்கு நிப்பாட்டிருக்கு’’ என முகத்தை கடுமையாக்கிக் கொண்டு சொன்னார். அவன் அதற்க்கு மேல் நிற்க வில்லை, மேலும் நின்றால் இரண்டு நாள் ஐந்து நாட்களை தாண்டிவிடும்.

தொழிலாளிகள்எச்சரிக்கை உணர்வோடு சீருடைகளை சரி பார்த்துக் கொண்ட னர். ஆண்கள் காக்கிச்சட்டை, டிராயர், பெண்கள் சாம்பல் வண்ண சேலை நீல வர்ண கச்சையணிந்திருக்கவேண்டும். சேலை மொட்டிக் காலுக்கு மேல் அணிந்திருக்க வேண்டும், தப்பி தவறி கெண்டைக்கால் தழுவ அணிந்தி ருந்தால் அந்த பெண்ணின் கதி அதோ கதிதான்.

ஆண்கள் வரிசையை சரி பார்த்துவிட்டு பெண்கள் வரிசைக்கு வந்தார் மேஸ்திரி. பெண்கள் மொட்டிக்கு மேல் சேலையை இழுத்து சொருகினா ர்கள். அந்த சாக்கில் மேஸ்திரி மேலயும் தூக்க வைக்க ரூல்ஸ் போடனும் என்று ஓவ்வொரு நாழும் நினைத்துக் கொள்வார்.

வரிசையின் நடுவில் பதினெட்டு வயதுடைய பெண், மெலிந்த தேகம், குதிரை முகம்,அகன்றதோல், அளவுக்கு மீறிய செழித்த மார்பு, அதன் கனத் தை தாங்க முடியாமல் ஒடியும் நிலையில் இடை, அதை தாங்கி நிற்கும் மடல் வாழை தொடை, கவிழ்ந்திருக்கும் நாதாஸ்வரத்தின் முனையில் காய்த்திருக்கும் வெள்ளரிப் பிஞ்சுகள். இவைகளை மூடி மறைத்திருக்கும் பொருத்தமற்ற கண்டாங்கி கரு நீல சேலை, உடலின் வனப்பும், செழிப்பும், அவளை உயர் குலப்பெண்ணாககாட்டியது.அம்மாவின்நிறத்தையும்,அப்பாவின்தேகத்தையும் தன்னுடலில் பொருத்திக்கொண்டாள். அதி காலை சாம்பல் பொழுதிலும், அவள் நிறத்தால் ஜொலி, ஜொலித்தாள் சந்தி ரா.

இவளுக்குப் பின் நான்கு பெண் பிள்ளைகள். ஒரு ஆண் பையன். அப்பன் முத்தையன்நல்லதொழிலாளிதிருமங்கலம்நகராட்சியில்சிறந்தவேலைக்காரன். துப்பரவு தொழிலை நுட்பமாய் கையாள்பவன், ஆனால் பெருங்க் குடிகாரன், துப்பரவு பணி செய்பவர்கள் எவ்வளவு சூட்சுமமாய் பணியா ற்றினாலும் மலக் கிணற்றின் ராட்ஸனிடமிருந்து தப்பியவர்கள். ஒரு சிலர் மட்டுமே அதற்கு முத்தையனும் ஒரு நாள் பலியானான்.

எப்படி நடந்தது, ஏன் நடந்தது, என விசாரணை என்பது கிடையாது அப்படி விசாரிக்க இவன் என்ன அரசியல் வாதியா,அல்லது நடிகரா, சாமனிய மனித குலத்தால் கூட அங்கிக் கரிக்கயியளாத சமூக பிராணி, சாலையில் அடி பட்டுக்கிடக்கும் நாய்க்கும், பூனைக்கும் என்ன நேர்மோ அதுதான் துப்பர வாளனுக்கும் நேர்ந்திடும் கொடூரம். மின்சார வயரில் நின்று கரைந்திடும் காகம் மின் தாக்கி உயிர் பிரிந்து கீழே விழுந்துக் கிடக்கும் தருவாயில் காக்கையினங்கள் அதனதன் மொழியில் கரைந்து தன் எதிர்ப்பைக் காட்டும். ஆனால் பாலய்ப் போன மனிதக் கூட்டம் இறந்தவனால் எதாவது நடக்க வேண்டியிருந்தால் மட்டுமே கூட்டம் கூடும், அல்லது தனக்கு கூட்டம் வேண்டும் என்ற சுய நலத்தோடு கூடிடும். ஆனால் சமூகத்தால் அங்கி காரமிழந்து மனித இனத்துக்குள் சேர்க்கப்படத ஒரு பிரிவு துப்பரவு பணியா ளர்கள். அப்படிப்பட்டவர்களின் இறப்பும், பிறப்பும் விளங்குகளின் வாழ்வியல் போன்றது.

முத்தையன் இறப்பு வழக்கம் போல் குடித்து விட்டு மலக் கிணற்றில் விழுந்து மரணமடைந்துவிட்டான். என்று அதிகாரிகள் கையூட்டு வாங்கிக் கொண்டு முடித்துவிட்டார்கள்.

அரசு இறந்தவனுக்கு கொடுக்கும் சலுகை அதே உயிர் குடிக்கும் மலக் குழியில் நீயும் விழுந்து சாகு, என துப்பரவு பணி அவன் மனைவிக்கும் கொடுக்கப் பட்டது.

அவளும் தன் கணவனின் தலையாயக் கடமையை தொடர்ந்தாள், முத்துப் பேச்சி. பெண்ணாய் பிறப்பதே பாவம் அதிலும் விழிம்பு நிலை வர்க்கத்தில் பிறப்பது அதை விட பாவம், இதையும் தாண்டி இளம் விதவையாய் வாழ்வது எல்லாவற்றிலும் கொடுமையோ, கொடுமை. கணவன் முத்தையன் இறக்கும் போது முத்துப்பேச்சிக்கு இருதைந்து வயதுதான் இருக்கும். முத்தவள் சந்திராவுக்கு பதி மூன்று வயது. மீதி பிள்ளைகள் அடுத்தடுத்து, முத்துப் பேச்சிக்கு பனிரெண்டு வயதில் திருமணம். அவள் பருவமடைந்த முப்பதாவது நாளில் திருமணம். பதிமூன்று வயதில் சந்திராவை பெற்றெடுத்தாள் அதன் பைன் அடுத்தடுத்து பிள்ளை கள். முத்தையன் தனது ஆஸ்த்தி அந்தஸ்த்தைக் கட்டி காப்பாற்ற ஆண் வாரிசு வேண்டி ஒரு சொட்டு இந்திரியத்தைக்கூட வீணாக்காமல் விதைத் தான். தொடர்ந்து பெண் பிள்ளைகள். ஆறு பெண் பிள்ளைகளுக்கு பிறகு அசந்த நேரத்தில் எக்ஸ், ஒய், ஒருங்கிணைந்து முத்தை யனுக்கு கருணை க் காட்டியது. ஆண் வாரிசு வந்ததை எண்ணி சேரி முழுவதையும் கள்ளச்சாரயத்தால் மிதக்கவிட்டான்.பத்துதினங்கள் இரவும் பகலும்ஆண்களும்,பெண்களும்,இணைந்துகஸாக்களின்கிராமதிருவிழாவைப் போல் கொண்டாடினார்.

முத்துப்பேச்சியைஉறவுக்காரன்முதல்ஊர்க்காரன்வரைஉறவு வைக்க ஆசைப் பட்டார்கள். தன் கணவன் அறுபது வயதுவரை தந்திடும், லெளகீக வாழ்க்கை யை இருபத்தைந்து வயதிலையே கொடுத்துச் சென்றமையால் அவனோடு படுத்துபகிர்ந்துக்கொண்டபாயைஇன்னும் மடக்காமல் பாதுகாத் தாள். ஆண்டா ண்டுக் காலத்துக்கும் அவளுக்கு அதுவே உக்கிரத்தை தனித்தது.

முத்தையனின் இறந்த வீட்டிலையே சோழவந்தான் சுப்பையன், முத்துப் பேச்சியை மூன்றாம் தாரமாக கேட்டுப் பார்த்தான். அவளின் ஆத்தாவும், அப்ப னு ம் கள்ளச்சாரத்துக்கு கட்டுப்பட்டு அவளை அசைத்துப் பார்த்தார் கள். அவள் அசைவதற்கு ஆலம் செடியல்ல, ஆலம் மரமென்றாள். உற்றாரும், உறவுக ளும் ஊர்க் கூடி பேசினார்கள். உறவைக்காட்டி இழுத்தார்கள். ‘’புடிச்சவனுக் கெல்லாம் பொண்டாட்டி ஆக முடியாது பொசக்கட்ட பயல்களா’’ என்று வந்த வர் களை விரட்டியடித்துவிட்டு வேறு குடிசைக்கு குடி போனாள். ஏனென்றால் முதலாம் குடியில் பிறந்து இரண்டாம் குடியில் வளர்ந்து மாற்றான் தாயிடம் மல்லுக்கட்டி இறுதியில் இளம் வயதையடை யாத நிலையில் இளமையை இளந்தவள்.

உடல் சுகத்துக்கு வேறேருவனிடம் சென்று விட்டால் தான் பெற்ற பிள்ளைகள் யாரிடம் சென்று யாசகம் கேட்கும். என்றயெண்ணத்தால் உருகாத பனிப் பாறையாய் உறைந்திருந்தாள்.

பிள்ளைகளை மற்ற சமூகத்தினர்கள் போன்று பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத் தாள். அதற்குன்டான உடை, உணவு தந்து துப்பரவு குடும்பத்தின் அடிப்படைப் படிமங்களை அடியோடு அகற்றினாள். மூத்தவள் ஒன்பதாம் வகுப்பை கடந்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஊரில் அள்ளும் மொத்த குப்பைகளையும் மலத்தையும் கொண்டுச் சென்று தட்டுவதற்காக ஊரின் கடைசிப் பகுதியான செங்கோட்டை தேசீய நெடுஞ்சாலையில் உள்ள உரக்கிடங்குக்கு மாட்டு வாண்டியில் ஏறிச் சென்றாள். மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற அன்னக்கொடி மொன்ன போதையில் எதிரே வந்தகே.டி.ஸி பேருந்தில் விட்டுஅவனும் மாண்டு, பாவம்புள்ளக்குட்டிக் காரியும் சாவதற்கு காரணாமாகிப் போனான்.

இதற்கு அரசு சலுகையாக அடுத்த வாரிசு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சந்திரா வுக்கு துப்பரவு பணியை தந்தது. துப்பரவு பணி என்னவென்றே தெரியாமல் அவள் அம்மா வளர்த்திருந்தாலும், சந்திரா எழுதப்படிக்க தெரிந்திருந்தாலும் சமூகமும் அதை தயாரிக்கும் அரசாங்கமும் துப்பரவு குடும்பத்தில் பிறந்த வர்கள், கலெக்ட்டருக்கே படித்திருந்தாலும் கக்கூஸ் கழுவத்தான் அனுப்பும். அதன் படி சந்திராவுக்கும் துப்பரவு பணிகொடுக்கப்பட்டது.முதலில்மறுத்தாள். பின்பு தாய் தகப்பன் வாங்கிய கடன்களை அடைப்பதற்கும். கலங்கி நிற்கும் ஐந்து பெண் பிள்ளைகள், முத்தை யனின் சமஸ்த்தானத்தை காப்பாற்ற பிறந்த ஆண் வாரிசையும் காப்பாற்றி அடுத்தடுத்து நகரத் சுத்தி தொழிலாளியாக்க சந்திராவும் முடிவுக்கு வந்தாள்.

பணியில்சேர்ந்தசந்திராவுக்குநகரச்சுத்தி தொழிலாளியின் அடிப்படை கூறுகள் பற்றி தெரிந்திருக்கவில்லை, படித்தவளுக்கு எல்லாம் தெரியுமெ ன்ற அசாத ரணமான நம்பிக்கையால் யாரும் அவளுக்கு சொல்லிக் கொடுக்க வில்லை.

பெண்களில் தனிதிருந்த சந்திராவை மேஸ்திரி அளந்தான். அவள் துப்பரவு பணிக்கான சீருடை அணிந்திருந்தாளும் அதை விதிப்படி பின் கொசுவம் வைத் து மொட்டித் தெரிய அணிந்திருக்கவில்லை. அதற்குப் பதிலாக முன் கொசுவம் வைத்து குதிங்கால் தழுவி தரை படர அணிந்திருந்தாள். அள்ளி முடிந்து சொருக வேண்டிய கூந்தலை பின் முகங்களில் தழுவிட வைத்திருந்தாள். இது போததா அலுவலர் அவளுக்கு தண்டனை கொடுப்பதற்கு. அதுவும் பதினெ ட்டு வயதுடைய பெண்ணுக்கு. கரும்பு திண்ண கூலி அல்லவா.

‘’ஏத்தா ஒம் பேரு என்ன?’’

‘’சா..சந்திரா.. ங்க..சார்’’

‘’சாரா? ஏத்தம் தாண்டி ஒனக்கு கக்கூஸ் கழுவ வந்திருக்கீயா? இல்ல கரக்காட் டம் ஆட வந்தியா?’’

‘’என்னங்கய்யா’’

‘’ம் நொன்னங்கய்யா போ அங்க போயி நில்லு” என்றான் மேஸ்திரி அவள் பணியாளர் கூட்டதிலிருந்து விலகி நின்றாள். மற்றவர்களைப் பார்த்து கடுமை யாக முகத்தை வைத்துக்கொண்டு சத்தமாக கத்தினான் மேஸ்திரி.

‘’இப்ப லயனுக்கு வருவேன் யாரச்சும் வேள தளத்துலெ இல்லமே கொவாரு வந்திச்சி, தொலச்சுப்புடுவேன்’’என்றான்.

அனைவரும் வெளியேறி நகராட்சி அலுவலகம் பின் பகுதியில் துப்பரவு கருவிகளை எடுத்தனர். ஆண்கள் கால்வாய் அள்ளும், அகப்பை, தூப்புமார்கள். பெண்கள் மலம் அள்ளும், கேள்வி குறியைப்போல் வளைந்திருக்கும் தகரக் கரண்டிகள், குப்பைகள் அள்ளிச் செல்ல இரும்பு தட்டுக்கள், கூட்டி அள்ளுவ தற்க்கான பருத்தி மார் தட்டுக்கள். எடுத்தனர். ஆண்களில்ஒரு சிலர் மெத்த கழிவுகளையும் கொள்முதல் செய்து அள்ளிச் செல்வதற்கு ஒற்றை மாடு பூட்டிய கட்டை வண்டிகளை இழுத்துச் சென்றனர். துப்பரவு தளவடாங் களை எடுத்துச் சென்றுக்கொண்டே ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் ‘’பாவம் வேலக்கி வந்தணைக்கே மாட்டிக் கிட்டா என்ன பாடு படப் போறாளோ’’ என காதோரமாய் கிசு, கிசுத்தாள்.

‘’சாமி தான் காப்பாத்தனும்’’ என்றாள் மற்றொருத்தி. சந்திரா, புயலின் காத்திர த்தால் முறியப் போகும் கிளையில் சிறகு சிலிர்க்க மாட்டிக் கொண்டிருக்கும் சிறியப் பறவைப் போன்று துடி துடித்து நின்றிருந்தாள்.

பாலு பெரியப்பாவை எதிர் நோக்கி நகராட்சியின் வாசலில் காத்திருந்தான். அவர்ஒற்றை மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு உள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். அப்போது சந்திரா அவரை பார்த்தாள். அவர் அவளுக்கு என்ன செய்து விட முடியும் என்ற கையாளாகத தனத்தை தன் முகத்தில் படர விட்டுச் சென்றார். பெரியப்பாவை கவனித்த மேஸ்திரி.

‘’மாரியப்பா’’

‘’அய்யா’’

‘’நீ இன்னக்கி கூட்ட போ அள்ள ஆளு இல்ல ரெண்டயும் சேத்துப் பாத்துக்கோ’’

‘’ஆட்டுங்கஎசமான்’’எனசொல்லியப்படிமாட்டின்மூக்கணாங்கயிற்றைபிடித்தி ழுத்தப்படி நகன்றார். வெளியேறியவருக்கு நினைத்தட்டி கூட்ட வேண்டுமென் றால் துப்புமாறு எடுக்க வேண்டும். திரும்ப சென்று எடுக்கப் போனால் மேஸ் திரி காட்டு கத்துவான் ‘’சரி சமாளிப்போம்’’ என நினைத்துக் கொண்டே வெளியே வந்தார். பாலு நின்றிருந்தான்.

‘’ஏறுடா’’ என்றார். அவன் வண்டியில் ஏறுவதற்கு கூச்சப் பட்டுக்கொண்டு ஏற மறுத்து விட்டான். வண்டி ஆனந்தா தியேட்டர் பக்கமாய் ஓட்டிச் சென்று நிறுத்தினார். மதுரைக்கு செல்லும் பி,ஆர்,சி பேருந்து கடந்து கொண்டிருந் தது.அதிகாலைஎன்பதால்மனிதநடமாட்டம்குறைந்திருந்தது.

சாலை ஓர பூ வியாபாரிகள் புத்தம் புதிதாய் வெண் பனியில் நனைந்த மலர்க ளை ஒன்றினைத்து மாலை தொடுத்துக்கொண்டிருந்தனர். மாட்டு வண்டியில மந்திருந்த பெரியப்பா பாலுவைப்பார்த்து ‘’டேய் கொட்டாய்ட்ட இரு நா போயி தூப்பு மாறு எப்பீட்டு வர்சுறேன்’’என சொல்லியவாறு வண்டியிலிருந்து குதித்து தியேட்டருக்கு பின் உள்ள ரயிலடி சந்துக்குள் நுழைந்தார். அவன் தியேட்டர் வாசலில் போய் நின்றான். மாடு கால்களை மாற்றி, மாற்றி உலுக் கியது, வலது கண்ணீல் ஏறிக்கொண்டிருந்த ஈயை இமையால் விரட்டியது. தியேட்டர் விளம்பர பலகையில் ‘’மைக்கேல்ராஜ்’’ என்ற வால் போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் மீது நாயகன் ரகுவரன் மோட்டார் வாகனத்தில் பயணிப்பதுப் போன்ற காட்சியும், நடிகை ரஞ்சனி முகம் வியர்க்க பயந்த சுவாத்தில் பாவனை செய்தப்படி இருந்தது. வால் போஸ்ட்டரின் கீழ் பகுதியில் நடிகர், நடிகையின் பெயரும், படம் போட்ட நாளை ஊதா வண்ணத்தில் 24.2.87. என குறிப்பிட்டு எழுதி ஒட்டிருந்தது.

சந்திரா பட, படப்போடு நின்றிருக்கையில் மேஸ்திரி அலுவலகத்துக்குள்ளியி ருந்து வெளியே வந்து அவளை ஏற, இறங்க பார்த்து விட்டு ‘’ஏத்தா ஒம் பேரு என்ன சொன்ன’’ முன்பு போல் இல்லாமல் குலைந்தப்படி கேட்டான். அவன் கேட்ட தோரனை அவளுக்கு சந்தேகத்தை கிளப்பி னாலும் பயம் குறைந்ததாக தோன்றியது. அதனால் இயல்பாக பதிலளித் தாள்.

‘’சரி,சரி அப்பவெ சொன்னைலே நா மறந்துட்டேன் அய்யாட்டே சொல்லிட்டே ன் புதுசா வந்துருக்கேன்னு நாளப்பின்ன ஒழுங்கா வரப் பாரு இன்னைக்கி அய்யா ரூம்ப கூட்டி விட்டுட்டு தண்ணி எடுத்து வைச்சிட்டு போ’’ என சொல்லி விட்டு அவனின் பி,எஸ்,ஸி சைக்கிளில் ஏறி சென்று விட்டான்.

அவள் அலுவலகத்துக்குள் தயங்கியபடி சென்று ஒரு கனம் நின்றுப் பார்த்தாள் ஆய்வாளர்பெயர்பதிவேட்டில்துணைகையொப்பம்இடுகைசெய்துக் கொண்டி ருந்தார். இவள் தலை குனிந்து வார்த்தை வந்தும் சொல்ல முடியாமல் மனதுக் குள் முனங்கிக் கொண்டே வணக்கம் வைத்தாள். அவர் கவனிக்கவில்லை அவள்அதற்கு மேல் நிற்காமல் தன் கடமையை செய்திட அலுவலக கழிவறை க்குள் நுழைந்து குச்சி மாரை எடுத்து கழிவறையை அவசர, அவசரமாக அலசி அகற்றிவிட்டு, மூலை யிலிருந்த ஈஞ்ச மாரை எடுத்து அறையை பெருக்கினாள்.

நேரம்கடந்ததுஅவள் பயந்தப் படி எதுவும்அங்கு நடந்துவிடவில்லை அதனால் பலகிய மாட்டைப் போல் இயங்கினாள்.

ஆய்வாளர் அமர்ந்திருக்கும் மேஜைக்கடியில் கூட்ட வேண்டும் தயங்கி நின்றாள் அவள் நிலையறிந்த ஆய்வாளர் எழுந்து கூட்டுவதற்கு வழி தந்தார் அவள் மேஜைக்கடியில் தலையைக் கொடுத்து கூட்டிக் கொண்டிருந்தாள்.

ஆய்வாளர் பின் நகன்று முன் கதவை தாழிட்டார் அது அவளுக்கு கேட்க வில்லையென்றாலும் அறையில் படர்ந்திருந்த வெளிச்ச கீற்றுகளின்றி இருள் படர்ந்தமையால் தன்னிலையடைந்து மேஜைக்குள்ளியிருந்து தலையை வெளியே எடுக்க முற்பட்டாள் ஆனால் அவளுக்குள் மின்னல் கீறியது என்ன வென்று அலுவலரை சந்தேகித்து தலை தூக்கி பார்க்க கூடாது ஒரு நேரத் துக்குஅவர்கதவை சாத்தி விட்டு வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்துக் கொண்டு வேளையில் மும்பரமானாள்.

ஆய்வாளர் அவள் பின் புறம் வந்து நான்காம் முக பிளவை வருடினார். அவள் சர்ப்ப தீண்டலுக்கு ஆட்ப் பட்டவளாய் துடி, துடித்து முன் பகுதி மேஜை காலில் முட்டி மோதினாள். அவள் மேஜைக்கடியில் மாட்டிக் கொண்டாள். அவளின் பின்புலம்ஆய்வளரிடம்மாட்டிக்கொண்டது.திமுறினாள். திண்டாடினாள், கத்தி னாள்.அவள்சத்தம் அறையில் மோதி சாளரமும், கதவுகளும், மரக் நாற்காலிக ளும், மேஜையும்,பேரடுகளும் சிரித்தது. ‘’புதுசா கத்துர நாங்க இது மாதிரி எத்தனபார்த்திருப்போம்என்ன புதுசு அதான் கத்துர கத்தாதே கத்துக்கோ அப்பத் தான் ஒம் முன்னோர்கள் போன்று நீயும் வாழ முடியும்’’ என்று ஆலோசனை கள் வழங்கியது உயிரற்ற சடங்கள். அவள் திமிறிக்கொண்டு மேஜைக்கடியில் போராடினாள். அவர் கைகளில் இரண்டாம் முகங்கள் நசிங்கிக் கொண்டே யிருந்தது. முட்டி மோதியவளின்மூக்குமேஜைக்காலில்முட்டிரத்தம் கசிந்தது.

ஆய்வாளர் அவளை அவர் காலுக்கடியில் மடக்கிக்கொண்டு பாதம் தழுவி யிருக்கும்சேலையைதூக்கிபின்முதுகில்லாபகமாய்போட்டார்.அவள்அணிந்தி ருந்தசிகப்புநிறஉள்பாவாடைபாதிகிழிந்து,அதில்வெள்ளைநூலால்கொங்கானி ப் போட்டு தைத்திருந்த வறுமையின் கோரத் தாண்டவம் உள்ளாடையில் உணர்த்தியும், கேட்க நாதியற்ற ஏழைப் பெண்ணின் வாழ்வை சீரளிக்கப் போகிறமே என்ற குற்ற உணர்வு ஆய்வாளரை ஒரு நொடி உணர்த்தினாலும். விரட்டிச் சென்ற விலங்குக்கு கால் முறிந்து விட்டால் கருணைக் காட்டி விட்டு விடுவானா வேட்டைக் காரன் அவனுக்கு மேலும் ஓட முடியாமல் திணறி நிற்பது எப்படி வசதியாக இருக்குமோ அது போன்று தான் சந்திராவின் நிலையும்.

அவள்நீண்டபோராட்டத்துக்குப்பின்துவண்டாள்அதைபயன் படுத்திக் கொண்டு அவர் நிதனமாய் அவர் துவண்ட குறியை எடுத்து அழுத்தாரம் பித்தார். ஆனால் அவர் வேகத்துக்கு அது கட்டுப்பட வில்லை அதனால் அதைதயார் செய்திட அவர்மனசுக்கும்உறுப்புக்கும்முடித்துப்போட்டுலயித்திருந்தார்.அவள் விழிக்க ஆரம்பித்தாள். அவள் முன் மேஜைக் காலின் பிடியை அழுத்திப் பற்றிய படி பின் வலது காலால் விட்டால் ஒரு எத்து அவர் குறியில் அவர் அப்படியே உட்க்கார இவள் அந்த கணத்தில் எழுந்து மறு படி ஆய்வா ளருக்கு அடப்போடு மீண்டும் ஒரு எத்து விழுந்தார் சுவரோடு. கூண்டிலிருந்து பறவை சிறகடித்து பறந்தது.

சற்றுநேரத்துக்குமுன்பு சந்திராவைப் பார்த்து சிரித்த உயிரற்ற சடங்கள் முதன் முறையாக ஆய்வாளரைப் பார்த்து கொக்கரித்தது. அதனால் ஆத்தரம டைந்த ஆய்வாளர் எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருக்கும் சந்திரவை கவனித்தார் அவள் அவிழ்ந்த சேலையை அரை குறையாய் தூக்கிப் போட்டுக்கொண்டு அலுவலக வளாகத்தை கடக்க எதிரில் பெரியப்பாவும், பாலுவும் அலுவலகத் தில் தூப்பு மார் எடுக்க வந்தவர்கள். அவளை கவனித்தனர். அடிப்பட்ட பாம் பான ஆய்வாளர் அவளை தொடர்ந்து விரட்டி வர பெரியப்பா நிலை குலைந்து சாட்சியாக நின்றார். ஆய்வாளர் கத்தினார்.

‘’யேய் மாரியப்பா அவளே புடி’’

‘’என்ன எசமான்’’ என அவசரமாய் கேட்பதுப் போல் பாவித்தார் பெரியப்பா.

‘’மோதுரத்த தூக்கிட்டு ஓடுறா’’ எனச் சொன்னார். அவள் அவர்களை கடந்து ஓடிவிட்டாள்.

கருத்துகள் இல்லை: