8 அக்., 2014

குலவிருத்தி,,,, (சிறுகதை)

                         
சேவல் இறகில் படிந்திருந்த இரவை சிறகடித்து உதறி கிழக்கு அடி வானை கொத்தியது.கொத்துப்பட்டயிடத்திலிருந்துகுறுதிபெருக்கெடுத்துஅடி வானில் பரவியது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை நீர் வெள்ளப் பெருக்கெ டுத்து கிழக்குக்நோக்கிசென்றுகுண்டாற்றில்கலந்துஓடியது.

ஆற்றின் கரையில் உள்ள நாணல் தட்டைகள், மேட்டு பகுதியில் உள்ள மூங்கில் குத்துக்குள் ஓங்கியுயர்ந்து வளந்திருக்கும் உன்னிமார் குச்சி, சீத்தாக் குச்சி, சங்ககுச்சி, நொச்சி குச்சி, அழிஞ்சிக்குச்சி. போன்ற குச்சி களை வெட்டி பஞ்சாரக்கூடை முடைவதற்க்காக நான்கு ஆண்கள் மூங்கில் குத்துக்குள் நுழைந்தனர்.

முதல் நபர் கொண்டு வந்திருக்கும் பண்னை அரிவாளலை கிழே வைத்தார்., இரண்டாம் நபர் வலது கக்கத்தில் இடுக்கிறுந்த சிகப்பு மஞ்சல்வர்ணசேவலை தரையில் இறக்கிக்விட்டார்.அது கழுத்தை வெட்டி,வெட்டிமூங்கில்குத்துக்குள் பாய்ந்துச்செல்ல எத்தனித்தது. மூன்றாம் நபர் தலையில் சுடுமாடுக் கட்டி தூக்கி வந்திருந்த கள்ளுப்பானையை கீழ் மேல் சிந்தாமல் இறக்கிவைத்தார். அது பானையின் வண்டுக்கட்டை மீறி நுறை ததும்பியது. கள் வடிந்துப் போய் விடும் என்றாமையால் தரையில் பானையின் அடிபாகத் திற்க்கேற்ப குழிப் பரித்துஅதன்மீதுவைக்கவும் சரியாகநின்றுக் கொண்டது.நான்காம்நபர் ஆனச் சட்டியில் கொண்டு வந்திருந்த குதிரைவளிச் சோற்றை விருச மரத்தண்டில் கட்டித்தொங்கவிட்டார்.

முதல் நபர் அரிவாளை எடுத்து நிற்க, இரண்டாம் நபர் சேவலை தூக்கி நீட்ட முதல் நபர் மூதாதையர்களை மனதுக்குள் நினைத்துக்கொண்டு சேவல் கழுத்தில் ஓரே வெட்டு மண்ணில் குருதி படிந்தோடியது. வெட்டுண்டு வீழ்ந்த சேவல் ஓரடிக்கு மேல் எம்பி, எம்பி, துடி துடித்தது. சேவலின் உயிரடங்கியதும். முதல் நபர் அதை தூக்கி இரண்டாம் நபரிடம் கொடுக்கவும் அவர் சேவலை கிழக்கு பக்கமாய் தூக்கி எறிந்தார். மூன்றாம் நபர் கள்ளுப்பானையை தூக்கி கள் வடித்து நான்கு திசைகளிலும் சிதறி யடித்தார். நான்காம் நபர் ஆனச் சட்டியிலிருந்து குதிரைவளிச்சோற்றை ஒரு கவளம் அள்ளி அதை நபர்களும் நெடுசாங்க்கிடையாக ஆளுக்கொரு திசைகளில் விழுந்து வணங்கினார்கள்.

நான்கு நபர்களும் தன் முன்னோர்களை வணங்கி வேண்டிக்கொண்டப்பின் முதல்நபர்மற்றமூன்றுநபர்களுக்கும்கண்களைமூடி தியாணித்தப்படி பண்னை அரிவாளை எடுத்துக்கொடுத்தார். மூன்று பேரும் பய பக்தியாக பெற்றுக் கொண்டு மூங்கில் குத்துக்குள் புகுந்து வெட்ட துவங்கினார்கள். முதல் நபர் உயிரின்றிக்கிடக்கும் சேவலை தூக்கி இறகுகளை பறித்து அகற்றி விட்டு கல் தேடினார். சற்றுதள்ளி முருகு மரத்தடியில் ஏற்கனவே பயன் படுத்திய சிக்கி முக்கிக்கல் கிடந்தது.

மரத்தின் வேரடியில் தீ மூட்டி ஏதோ விலங்கை சூட்டான் கொடுத்த படிமம் படிந்து கிடந்தது.அதுவெருகுவின்தீய்ந்துப்போனரோமக்கற்றையாகஇருந்தது. அதை கவனித்த அவர் தன்னு டைய இனத்தார் ஏற்கனவே வேட்டைக்கு வந்துசென்றதற்க்கானஅடையாளம் என யூகித்துக் கொண்டார். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ஆல்,வேல், சுள்ளிக் களை சேகரித்து எறிப்பதற்க் கேற்ப குவியல்ப்படுத்திக்கொண்டு சிக்கிமுக்கி கற்களை இருஉள்ளங்கைகளி ல் வைத்து அழுத்தமாக உரசினார் தீப்பொறி உதிர்ந்து. சுள்ளிகளில் மேவியது.

சேவலின் கால்களைப்பற்றி தீக்குள் காட்டினார். சேவளின் உடல் உருகி நெய் வழிந்தது. பக்குமாய் வாட்டி சுட்டயுடன் அதை தூக்கி நுகர்ந்து பார்த்தார். கறி வெந்த சூடான மனம் இரைப்பை சென்று திரும்பியது. பக்குவமான செவல் கறியை துண்டுகளாக்கிக்கொண்டு வடக்குப்பக்கமாய் தல வாழை இலை விரித்து அதில் தண்ணிர் தெளித்து கழுவி சூட்டான் கறியை வைத்தார், பின்பு குதிரைவளிச்சோறு, ஒரு சிரட்டை நிரம்ப கள் ஊற்றி படையல் வைத்து விட்டு மூங்கில்குத்துக்குள் எட்டிப்பார்த்தார் முதல் நபர் மூன்று நபர்களும் உன்னிமார் குச்சி, சீத்தாக்குச்சி,சங்கம்குச்சி, நொச்சிக்குச்சி,அழிஞ்சா குச்சிக்க ளை வெட்டி சாய்த்து அதை ஒன்றினைத்து கட்டிக்கொண்டிருந்தனர். ‘’அப்போ குளிக்க போ வேண்டியதுதான்’’ என மனதில் நினைத்துக்கொண்டு முதல் நபர் குன்டாற் றை நோக்கி நடந்தார்.

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிக்கொண்டிருந்தது. முதல் நபர் ஆற்றுக் குள் இறங்கினார். அப்போது..? ‘’அய்யோ அம்மா அப்பா கண்ணக் கட்டுதே மயக்கமா வருதே பசிக்கிதே யாராச்சும் காப்பாத்துங்கலேன் ஆ..ஆங்.. ஆ..ஆ.. என்று முதலில் ஆண் குரலும், அதனை தொடந்து பெண் குரலும் கேட்டது. குரல் வந்த திசை நோக்கி முதல் நபர் சென்றார். ஆற்றங்கரையின் ஆலமரயடி வாரத்தில் ஒரு இளைஞனும் யுவதியும் பசியின் கிறக்கத்தில் கிடந்தனர்.

முதல் நபர் அவர்களைஉற்றுக்கவனித்தார்ஆண்இராஜவம்சமாய் இருந்தான் பெண்தன்இனத்தில்உள்ளவள்போன்றுஇருந்தாள்.

‘’யாரு நீங்க இங்க என்ன செய்றீங்க.?’’ என்றார் முதல் நபர். அதற்கு பதில் தெரிவிக்காமல் நா வறச்சியை காட்டி ஆண் ‘’தண்ணீ, தண்ணீ...’’ என்றான் உடனே முதல் நபர் ஓடிச்சென்று ஆற்று நீரை இரு கைகளில் அள்ளினார் தண்ணீர் விரலிடுக்குளில் வழிந்துவிட்டது. உடனே மூங்கில் குத்துக்குள் குச்சி வெட் டிக்கொண்டிருக்கும் மற்ற நபர்களை சத்தமாக அழைத்தார்.

‘’ஏய்... தம்பிகளா.. இங்க யாரோ விழுந்து கெடக்காங்கப்போ... வெறசா வாங்கப் போ..’’

‘’யாராப்போ..’’என மூங்கில் குத்துக்குள் இருந்து பதில் பறந்து வந்தது.


‘’ஊராப் பூத்தைகப்போ’’என்றார் முதல் நபர் உடனே மூன்று நபர்களும் ஒடி வந்து நின்றனர். முதல் நபர் தண்ணீர் கொண்டுவர சொன்னார். இரண்டாம் நபர் தண்ணீரை கைகளில் அள்ளினார் ஒழுகியது உடனே நினைவு வந்து மூங்கில் குத்துக்குள் ஒடிச்சென்று அடிக்கனுவோடு மூங்கில் ஒரு முழ மலவுக்கு வெட்டி அதை மேலும் கீழும் பார்த்தார் அடி இல்லை உடனே நொச்சிக்கனுவை வெட்டி மூங்கில் குடுவைக்குள் போட்டார் அடியில் தட்டி அடைத்துக் கொண்டது.

அதை கொண்டு வந்து ஆற்றில் நீர் அள்ளினார். குடுவை நிரம்பி வழிய கொண்டுவந்து முதல் நபரிடம் நீட்டினார். இரண்டாம் நபர். அதை வாங்கி அந்த இருவருக்கும் தண்ணீர் வார்த்தார். இருவரும் தாகம் தணித்து விட்டு அனைவ ரையும் ஒருமுறைப்பார்த்தனர். தாகம் தீர்ந்தது தெரிந்தமையால் முதல் நபர் கேள்வி எழுப்பினார்.

‘’யாரு நீங்க எங்க இருந்து வாறீங்க..?’’

‘’என் பெயர் முருகன் இவள் என்மனைவி வள்ளி நாங்க வடக்கில் இருந்து வருகிறோம் என் தந்தை இமய மலையின் இராஜா இவள் தந்தை கொள்ளி மலையின் தலைவன் நான் இவளை மணம் முடித்துக்கொண்டதால் எங்களை நாட்டைவிட்டுத்தொறத்திவிட்டார்கள். நாங்கள் காடு மலை நாடு என பல நாட்களாய் அலைந்து திருந்தோம் இவளுக்கு தாகம் எடுக்குதே என்று ஆற்றில் நீர் பருக வந்தோம் ஆனால் பசியால் உடல் இயங்க மறுத்தமையால் இங்கு வந்து கிடக்கிறேம்.’’ இதை கேட்ட அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

முதல்நபர்அவர்கள்இருவரையும்பார்த்‘’சாமி தப்பா நெனைக்கிலனா ஒன்னு சொல்லட்டுமா சாமி’’என்றார். முருகன் கேள்வியாய்பார்த்தார்.

‘’நாங்க எங்களுக்கு பசியமத்த கஞ்சியும் கடுச்சுகிரையும் வைச்சிருக்கோம் சாமி எங்க இத சாப்பிடுவீங்களா நாங்க மலை சாதிக்காரங்க நீங்க இராஜா வம்சம்’’ என மிகவும் சாதுவாக தலைவணங்கி வேண்டினார் முதல் நபர்.

‘’பசிக்கு சாதி இல்லப்பா’’ என்றார் முருகன்.

‘’அப்ப வாங்க சாமி’’ என்றார் இரண்டாம் நபர் முருகனும் வள்ளியும் எழுந் திருக்க முயன்றனர். முடியவில்லை தடுமாறி கிழே சரிந்தனர் மூன்றாம் நபர் விழுந்தவர்களை தாங்கி பிடித்தார். பின்பு பதற்றமடைந்து படக்கென்று விடுவித்துக்கொண்டு தள்ளி நின்றப்படி ‘’சாமிதெரியாம தொட்டுப்புட்டேன் மண்ணிக்கனும்’’என்றார் அதற்கு முருகன் அனைவரையும் சுற்றிப் பார்த்துக் கொண்டு ‘’தொடுவதற்க்கே பயப்பட்டாய் என்றால் பின்பு எப்படி எங்களுக்கு உணவு கொடுப்பாய்’’ என கேட்டார்.

‘’அப்படி இல்ல சாமி நாங்க் எங்க இனத்த தவிர யாரயும் தொட கூடாது சாமி’’ என்றார் மூன்றாம் நபர்.

‘’அப்படியா இவள் உங்க இனம் தான் இவள் என் மணைவி என்றாள் நானும் உங்கள் இனம் தானே அதனால் நீங்கள் தாரளமாக எங்களை தொடலாம் இவள் உங்க வீட்டு பிள்ளை அவளை மணந்துக்கொண்ட நான் உங்களுக்கு மாமன் மைத்துனர் முறையுள்ளவன் உங்க இனத்தில் எப்படி முறையுள்ள வர்களை கொண்டாடுவீர்கலோ அதைப்போல்என்னைகொண்டாடலாம்’என்றுமுருகன் உத்தரவு கொடுத்தயுடன் உற்சாகமாய் நான்கு நபர்களும் வெட்டி போட்டிருந்த அழிஞ்சா குச்சியால் பல்லாக்கு செய்து அதன் மீது வள்ளியும் முருகனையும் அமரவைத்து மூங்கில் குத்துக்குள் தூக்கிச்சென்று அரச மரத் தடியில் பச்சை இலை பரப்பி அமர வைத்தனர்.

பின்பு நான்கு நபர்களும் கூடி பேசி அவர்கள் அணிந்திருக்கும் வேட்டிகளைக் களைந்துஇலைதலைகளைஅணிந்துகொண்டு அந்த வேட்டிகளை ஒன்றினை த்து சதுரவடிவில் மறைவிடம் கட்டி அதனுள் வள்ளியை அமர வைத்து கொண் டுவந்திருந்தகுதிரைவளிச்சொற்றைஒரு இலையில்தட்டி பரப்பிப்விட்டு அந்த  மண்பானையை தூக்கிச்சென்று ஆற்றில் நீரெடுத்து வந்து வள்ளி அருகே வைத்துக்கொண்டு‘’அம்மாதாயேஒன்னையேகுளிப்பாட்டிஅழகுபடுத்தே எங்க கிட்ட பொம்பள இல்ல அதனால கோவிச்சி கிறாமே நீயே குளிம்மா’’என்றார் முதல் நபர்.

அதை கேட்ட வள்ளி பலமாக சிரித்துக்கொண்டே ‘’பெற்றவளையும் குழந்தை யும் குளிப்பாட்ட ஆண் பெண் பேதம் இல்லை அதனால் நீங்கள் நான்கு நபர்க ளும் என்னை நீராட்டுங்கள்’’என்றாள் வள்ளி. அதன்படி வள்ளி உடைகளைந்து நிர்வாணமானாள். நான்கு நபர்களும் கண்களை மூடிக்கொண்டனர்.

‘’இப்படி கண்களை மூடிக்கொண்டால் எப்படி என்னைகுளிப்பாட்டுவீர்கள்" ‘’அது இல்ல தாயி நான் என்னா சொல்ரதுன்னு தெரியலே தாயி’’ என்றார் முதல் நபர். வள்ளி சிரித்தாள்.

‘’கோயிலில் சாமியை பூசாரி எப்படி குளிப்பாட்டுவான் அத மாதிரி என்னை யும் குளிப்பாட்டுங்க’’என்றாள் வள்ளி.

இதை கேட்டதும் அனைவருக்கும் உடல் சிலித்தது. வள்ளி தலை விரி கோல மாய் வீற்றிருக்க முதல் நபர் மேலிருந்து தண்ணீர் ஊற்றினார் பானைதண்ணீர் விழுந்துக்கொண்டே இருந்தது. வெரும் தண்ணீர் பாலாக வும்,தேனாகவும், மஞ்சலாகவும், மலராகவும், பன்னீராகவும், குங்குமாகவும், விபூதியாகவும், சந்தனமாகவும் சவ்வாதாகவும் புனுகுவாகவும், இன்னும் பிற அபிஷோகங்க ளாய் உருமாறி வள்ளியை நீராட்டியது இதை கவனித்த நபர்களுக்கு வந்திருப் பது யாரேன்று புலப்பட்டது.

வள்ளியை குளிப்பாட்டி முடித்தயுடன் இரண்டாம் நபர் காட்டுப்பூக்களால் தொடுத்த மாலையை அவள் கழுத்தில் சாத்தினார். மூன்றாம் நபர் விலங்கு விரட்ட கொண்டு வந்திருக்கும் உலேக தட்டால் சுல்லியை வைத்து தட்டி மணியடித்தார். நான்காம் நபர் அந்த ஒலிக்கேற்ப காவடியாட்டம் ஆடினார். வள்ளியின் பங்கு முடிந்தவுடன் முருகனையும் அதே போன்று குளிப்பாட்டி அழங்காரம் செய்து காவடியாட்டம் ஆடி இருவரையும் சேர்த்து அமர வைத்து தலை வாழை இலை போட்டு அதில் குதிரைவளி சோற்றையும் சேவல் சூட்டா னையும், பறிமாறினார்கள். இருவரும் ஆவலாக உண்டு கழித்தனர். உணவருந் தி முடித்தவுடன் நான்கு நபர்களையும் பார்த்து ‘’நீங்க சாப்பிடவில்லையா?’’ என்றார் முருகன்.

’’நாங்க அப்பறமா சாப்பிட்டுக்கிறுவோம்’’ என்றார் முதல் நபர்.

‘’ஏன்..?

‘’காலியாப் போச்சுல’’என்றார் இராண்டாம் நபர்.

‘’யார் சொன்னது அங்க பாருங்க’’ என்று காண்பித்தார். நான்கு இலைகளில் போதுமான உணவும் கறியும் இருந்தது. அதை அனைவரும் உண்டு முடித்துவிட்டு ‘’சாமி விடை கொடுங்க நாங்க் வந்த வேலைய பாக்க போறேம் நீங்க் போகனும்னா போங்க’’என்றார் முதல் நபர்.

‘’நாங்க போறதுக்கா இங்க வந்தோம்’’ என்றாள் வள்ளி.

‘’பின்ன எதுக்கு சாமி’’என்றார் மூன்றாம் நபர்.

‘’ஒங்கலோட தங்க போறோம்’’என்றார் முருகன்.

‘’அதெப்படி சாமி எங்கலோட நீங்க நாங்கலே ஒரு எடத்துலே தங்க முடியா மே நாடோடியா அலஞ்சுக்கிட்டு இருக்கோம் நீங்களும் எங்க கூட வந்து சீரழிய னு மா சாமி’’ என்றார் நான்காம் நபர்.

‘’கவளைப்பட வேண்டாம் இனி ஒங்களுக்கென்று ஒரு நிலையான இடம் ஒங்களுக்கு பசியார தானியம் நிரந்தரமாய் கிடைக்கும் உங்க கூட்டத்துக்கு நீங்கதான் தலைமையா இருந்து வழி நடத்த போறிங்க’’என கட்டளையிடுவ தைப்போன்று கூறினார் முருகன்.

‘’நீங்க சொல்றது வெளங்கல சாமி’’ என்றார் முதல் நபர்.

‘’வெளங்கலே, ?’’

‘’சொல்றேன் சொல்றேன்’’ என சொல்லிவிட்டு மறைந்து விட்டனர்.

நான்கு பேரும் ‘’ சாமி, சாமி, சாமி’’ என்று கத்தினார்கள். முருகனும் வள்ளியும் சிலையாக நின்றனர். நான்கு நபர்களும் திகைத்துப்போய் கையறு நிலயில் நின்றிருந்தனர். மூங்கில் குத்தை புரட்டிப்போடுமளவுக்கு பெரும் காற்று சுழன்றடித்தது. இலை தலைகள் வனமெங்கும் பரவி திரிய வானில் நீர் குன்றுகள் ஒன்றின் மேல் ஒன்றாக மோதி சிதறி நிலப்பரப்பில் நீர்குருதியை உமிழ்ந்திட நீர்வனம் ,ஊர்வனம் வனயினம் ருத்திரதாண்ட வம் ஆட நீர்குருதி சிலைகளில் படிந்து உயிர் பூக்கள் அரும்பி இரு சிலைக ளின் விழிகள் மலர்ந்து ஆண் சிலை மொளன குடம் உடைந்து உரை நீர் பொழிந்தது.


‘’ எங்களை மேலிருந்து நீராட்டுயவன் ‘’மேலூத்தான்’’ என்ற குலம் விளங்க, பூமாலை சாத்தி வணங்கியவன் ‘’சாத்துப்பாடி’’ என்ற குலம் விலங்க, காவடி எடுத்து ஆடியவன் ‘’ காவடியன்’’ என்ற குலம் விலங்க மணியாட்டி ஒலி எழுப்பியவன் ‘’ மானிப்பாடியான்’’ என்ற குலம் விலங்க நான்கு பேர் தலைமை யில் குலம் விருத்தியடைந்து நாடோடி வாழ்க்கை ஒரு இடத்தில் நிலை கொள்ளும் என்று வாக்கு தருகிறேன். என்றது ஆண்சிலை.

பெண்சிலை என்னை அண்ணையாக ஏற்றுக்கொண்டால் இருபத்தோரு பந்தி அறுபத்தோரு தெய்வமாய் அவதரித்து கால்மாடு,தலைமாடுகாப்பேன் எங்களு க்கு ஆறுகால பூஜை ஏழுக்கால பூஜை தேவையில்லை. கடுகளவு சாம்பராணி யும் ஒலக்கரிசி பொங்களும் ஒருதலுகை சூட்டானும் படைலிட்டு வாம்மா என்றால் முன்ன நிப்பேன் நீங்க் எந்த முகம் போனாலும் தங்க முகமா மாத்துவேன் இது முக்காலும் சத்தியம்’’.என்று பெண்சிலை வாக்கு கூறியது. வாக்குப்பெற்ற நான்கு நபர்களும் சிலைகளுக்கு பூஜை செய்ய துவங்கினார் கள். இருசிலைகளுக்கும் முதல் நபரான மேலுத்தான் மேலிரு ந்து நீர்வார்க்க இரண்டாம்நபர் சாத்தப்பாடி காட்டுப்பூக்களை தொடுத்து மாலையாக்கி சிலைக ளுக்கு சாத்த மூன்றாம் நபர் காவடியன் மூங்கில் குத்துக்குள் வெட்டிப் போட்டி ருந்தபல்வேறுகுச்சிகளில்காவடிக்கட்டிஆட நான்காம் நபர் மாணிப்பாடி குன்ற ற்றம் கரையில் மண் எடுத்து அதை தீயில் சுட்டு மணிசெய்து மணியடித்தான்.

அப்போது நான்கு பேர்களுக்கும் அருள் வந்து ஆடினார்கள். இவர்கலோடு மண்ணாட மரம்மாட வனமாட எட்டித்திக்கும் வீற்றிருக்கும்திடதிரவம்மாட பரப்பன ஊர்வன சேர்ந்தாட ஆட்டத்தின் உச்சமடைந்தமுடன் மூங்கில் குத்தா ள் தேர்க்கட்டி அதில் சிலைகளை வைத்து சுத்துவட்டார கிராமங்க ளுக்கு நான்கு பேரும் ஊர்வலமாய் எடுத்துச்சென்று இது எங்கள் சாமி எங்களுக்கும் சாமி உண்டு எங்களுக்கும் காணி உண்டு என கிழக்கில் உள்ள செங்கப் படைவழியாகசிவரக்கோட்டை,மேலக்கோட்டை,நடுக்கோட்டை,கீழ்க்கோட்டை  குராயூர், தூம்பக்குண்டு என்றும் மேற்காக கட்ராம்பட்டி ஆலம்பட்டி, தெற்கில் குன்னத்தூர், சுப்புலாபுரம் கல்லுப்பட்டி வடக்கில் திருமங்கலம் கப்பலுர் என்று நான்கு திசைகலிலும் சுற்றிவிட்டு மீண்டும் குன்றாற்றின் கரையில் உள்ள கட்ராம் பட்டிக்கு வந்து சேர்ந்தனர். அப்போது விவரம் பாண்டியமன்னனின் அரசபைக்கு தெரிந்து கட்ராம்பட்டியுடன் சேர்ந்து சில கிரமங்களை ஆண்டு கொண்டிருக்கும் சிற்றரசர் நரசிம்ம ராஜனுக்கு ஒற்றர்கள் மூலம் ஓலை அனுப்பி விசாரிக்க சொல்லவும் சிற்றரசரின் காவல ர்கள் நான்கு பேரையும் சிலையவும் கைபற்றி விலகிட்டு இழுத்துச் சென்றனர். அரசபை தர்பார் கூடியது ஒற்றனின் குற்றப் குறிப்பானைப்படி நான்கு பேரையும் சிற்றரசர் நரசிம்மராஜன் விசாரனையை துவங்கினார்.

‘’யாருடாநீங்க..?’’ ‘’சாமிநாங்கமேற்கஇருந்துவாரேம்ங்க’’

‘’மேற்கேன்னா..?’’

‘’மலதேசம்ங்ககல்வராயன்சேர்வரயன்கொள்ளிமலைங்க/

‘’இங்கஎதற்குவந்தீங்க?’’ ‘’பஞ்சாரம் பஞ்சாரமுடையபொல்லம் பெட்டிக்கட்ட குச்சி வெட்ட வந்தோம்ங்க’’ என்றார் சாத்த பாடி.

‘’யாரக்கேட்டுடாவெட்டுனீங்க’’

யாரகேக்கனும்சாமிஎன்றார்மாணிப்பாடி.

‘’என்ன கேக்கனும் நான்ந்தான் பாண்டிய மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட கிராம  எல்லைகளை ராஜ்ஜியம் செய்யும் இன்றேயசிற்றரசன் நாளைய பேரரசன் என்னைகேட்காமல்காற்றுக்கூடவரக்கூடாதுபுரிகிறதா’’

‘’அரசே நாங்கள் நாடோடிகள் மலைகளில் அலைந்து திரிந்து வேட்டையாடி வாழ்ந்தவர்கள் எங்களுக்கு நிலப்பகுதியின் வாழ்வுமுறை தெரியாது தவறு க்கு மண்ணித்து அருள் புரிய வேண்டும்’’என்று தலைவணங்கி கூறினார் காவடியன்.

‘’என்ன மண்ணிப்பதா அனுமதியின்றி ஊருக்குள் நுழைந்து வனத்தை அழித்து இருக்கீறிங்க யாரிடமும் கேட்காமல் பல கிராமங்களுக்குள் நுழைந்து மக்களு க்கு இடையூராய் ஆட்டம் போட்டு ஊர்வலம் சென்று இருக்கீர்கள் ஆமா இந்த சிலை யாருடையது. உங்களிடம் எப்படி வந்தது’’. அதற்கு அவர்கள் பதில் சொல்ல முழித்தனர்.

அப்போது மூன்று வீரர்கள் இடையில் புகுந்து மன்னருக்கு மரியாதை செலுத்தி விட்டு வந்த விவரத்தை கூறினார்கள். மன்னருக்கு தலைவணங்கி எங்கள் பிராதை தங்கள் முன்னனியில் சமர்ப்பிக்கிறோம் மன்னா இடையில் புகுந்து இடைமறித்தமைக்கு முதலில்எங்களை மண்ணித்தருளவேண்டும்.’’ என்றனர் நிலக்கோட்டை வீரர்கள்.

‘’ஆகட்டும்நீங்கள்வந்தவிவரத்தைகூறுங்கள்’’என்றார்மன்னர்.

‘’நாங்க நிலக்கோட்ட அரண்மனையிலிருந்து வருகிறோம் எங்கள் மன்னர் குலம் தெய்வமாய் வணங்கும் முருக பெருமான் சிலை அரண்மனை கோயிலி ருந்து காணமல் போனது எங்கள் அரசர் நான்கு திசைகளுக்கு வீரர்க ளை அனுப்பி தேட கட்டளையிட்டார் அதன் படி தேடி வருகையில் எங்கள் ஒற்றர் களின் துப்புப்படிஉங்கள் எல்லையில் திருடியசிலைகளை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுவதாகதகவல்அறிந்துவந்து இருக்கிறோம் மன்னர் தலையிட்டு எங்கள் சிலைகளை இந்த திருட்டு கும்பலிடமிருந்து மீட்டு தர தலைவணங்கி வேண்டுகிறேம்’’ என்றனர். நிலக்கோட்டை வீரர்கள்.

இதைகேட்டறிந்தஅரசர்கடும்சினத்தோடுகர்ஜித்தார்.

‘டேய்இவர்கள்சொல்வதுஉண்மையா?’’ ‘

’அய்யாதிருட்டுஎன்பதுஎங்க பரம்பரைக்கே கிடையாது இந்த சிலைகள் ஆத்தம் கரை ஒரமா மனுஷ்ச ரூபத்துலே பட்டினியா மயக்கமா கிடந்தாங்க நாங்க காப்பாத்தி பசியமத்தினோம் அப்ப சிலை வடிவம் எடுத்து எங்களுக்கு அருள் வாக்கு சொல்லுச்சி அதுக்கு அப்புரம்தாங்க ஊர், ஊரா ஊர்வலம் போனம் வேற எந்த தப்பும் செய்யல அரசே’’ என்றார் மேலுத்தான்.

‘’குறப்பாசாங்கு போடுகிறான் அரசே சிலைகளை திருடியதும் இல்லாமல் மாமிசத்தை படையலாக்கி கொடுத்து இருக்கிறார்கள் அரசே’’ என்றான் நிலக் கோட்டைவீரன்.

‘’உண்மையா?’’

‘’வாஸ்த்தவம் தாங்க எங்க கைலாண்டததான் கொடுக்க முடியும்’’ என்றார் சாத்தப்பாடி.

அரசேஅவர்களேஉண்மையைஒத்துக்கொண்டார்கள்இதற்குமேலுமாவிசார ணைதேவை’’என்றான்நிலக்கோட்டைவீரன்யார்அங்கே’’என்றதும்அந்த குரலு க்கு தண்டனைக்கான குரல் என தெரிந்து இரண்டு தண்டனை நிறைவேற்றும் வீரர்கள்முன்வந்துதலைவணங்கிநின்றனர். ‘’இவர்கள் ஊருக்கு ள் அத்து மீறி நுழைந்து வனத்தில் மரங்களையும் சிலைகளையும் திருடியதுக்கும் சாகும் வரை சவுக்கால் அடிப்பது, சிலைகளுக்குமாமிசத்தைபடைத்துசைவ,வைணவ மதத்தின் புனிதத்தை கெடுத்தமைக்கு மலம் திண்ணவைத்து தண்டனையை ஏககாலத்தில் நிறைவேற்ற வேண்டும்.’’என அரசர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி நான்கு நபர்களையும் இழுத்துச்சென்று ஊரின் மத்தியில் உள்ள சாவடி முன் தண்டனைஅரங்கேறியது. சிலைகளை நிலக்கோட்டை வீரர்கள் அரசரிடம் பெற்றுக்கொண்டு கட்ராம்பட்டி கடந்து ஆலம்பட்டி குறுக்கே ஒடும் குன்டாற்றில் இறங்கி நீராடிவிட்டு மீண்டும் குதிரையில் ஏறி புறப்படுகையில் சிலைகளில் ஒன்றை காணவில்லை பெண் சிலை மாயமாகி விட்டது. உடனே வந்த வழியில் சென்று தேடலாம் என நினைத்து குதிரையை திருப்புகையில் ஆண் சிலை குதிரையிலிருந்துதவறிவிழுந்தது அதை எடுக்க முனைகையில் அது உருண்டு ஆற்றுக்குள் விழுந்தது.

வீரர்கள் ஆற்றில் குதித்தார்கள் ஆண்சிலை அக்கரைக்கு சென்றது வீரர்கள் ஆற்றோடு சென்றார்கள்.

பெண்சிலை நான்கு பேர் முன்னிலையில் தோன்றி அவர்கள் கட்டை அவிழ்த்துவிடுவித்துவிட்டு தண்டனை வளங்கியமன்னனுக்கும் தண்டனை யை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கும் வாய்கட்டு,உடல்கட்டு போட்டது பெண்சிலை.

அதிலிருந்து மீள சில நாட்கள் கழிந்தது. அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற நடந்தது என்ன? அதற்கு பரிகாரம் என்ன என்பதை அறிய அழகர் மலை சென்று குறவர்களிடம்குறிகேட்கமன்னனின்மதியுகமந்திரியும் மக்கள் பிரதி நிதிகளும் அழகர்மலை அடிவாரம் வந்தனர். கோடாளி கொண்டை, வாய் நிரம்பி சிவந்து வழியும் தாம்பூலம் சுவைத்தபடி பாம்படம் குழுங்க குறமகள் வேணீர் குறிசொன்னாள்.

‘’வந்தது காளி அதுக்கொரு கோயில் எழுப்பி அந்த கோயில் பூசாரியா குறவர் இனத்தில் ஒருத்தருக்கு உரிமை கொடுத்து ஆடிகடேசிலே அழகருக்கு மேல இருக்காலே தீர்த்த கர ராக்கு அவ காலடியிலே ஓடுர தீர்த்தாலே அபிஷேகம் செய்து எல்லோருமா சேர்ந்து கைஎடுத்தா கட்ட அவிழ்த்து விடுவா வனகாளி’’ என வேணீர் குறி கூறினாள் மன்னரும் மக்களும்அதை ஏற்றுக்கொள்ளும் முகமாக நான்கு நபர்களுக்கும் சிற்றரசனின் எல்கைக்கு உட்பட்ட பகுதிகள் எல்லாவற்றையும் காணியாக்கியும் கோயிலில் முதன்மைபடுத்தியும் தந்தார் சிற்றரசர் நரசிம்மராஜன். அதன்படி நான்கு நபர்களின் தலைமுறை தலைத் தோங்கியது.

2 கருத்துகள்:

vimalanperali சொன்னது…

நல்ல சிறுகதை.பேண்டஸியாய் வந்துள்ளது,வாழ்த்துக்கள் தோழர்/

Unknown சொன்னது…

உண்மை