27 மே, 2013

வெக்கை,,,,,,,,,



வழக்கமாய் தேனீரருந்தும் விடுதியிலிருந்து தேனீர் வாங்கி வந்து மூடியிருந்த கடை வாயிலமர்ந்து அருந்தினேன்.

நாற்பத்தைந்தை கடந்திருக்கும் மாடசாமி என்னருகே அமர்ந்து தேனீ ரை ஒரே இழுப்பில் காலிசெய்துக் கொண்டிருந்தான்.

பகலெல்லாம்வெக்கையைஉண்டுசெறிக்கமுடியாமல்சிறிதுசிறிதா ய்  உமிழ்ந்து கொண்டு இருந்ததது. காலை பொழுது,

என்னருகே இருந்தும், என்னைஅவனுக்குதெரியவில்லயா? அல்லது தேவையற்று போனேனா? 
வெக்கையின் தகதகிப்பில் கூட சூடான திரவத்தை எப்படி ஒரே இழுப் பில்காலிசெய்தான்என்பதுதெரியவில்லை.கூடவே செய்யது பீடியை யும் பற்றவைத்து மேலும் புடமேற்றிக் கொண்டான்.

விரல் நடுங்க புகைந்துக் கொண்டிருந்தது. பீடி, அலுமினியம் பூசிய தலைமயிர்கற்றைகள் முன் பற்களற்ற பொக்குவாய், கை கால்கள் சூம்பியநிலையில்முகம்இன்பமேகண்டிராத அல்லது அனுபவிதிராத முகமாய் மாறி போயிருந்தது.

இருபது வருடங்களுக்கு முன் மூன்று புண்ணாக்கு மூடைகளை ஒரே ஆளாய் சுமந்து சென்று அட்டில் போடுபவன், நான்கு பேர் இயக்ககூடிய எண்ணெய் வித்து இயந்திரத்தை தனியாளாக நின்று இயக்கி முதலாளிக்கு லாபம் ஈட்டி தந்தவன், இன்று எழுபது வயது கடந்து இளமையில் முதுமையடைந்தவனாய் இருந்தான்.

படிக்கும் காலத்தில் தெருவில் நடக்கு கோயில் திருவிழாவில், நாடகம் போட நண்பர்களாய் சேரும்போது, தனது வேலைபார்க்கும் ஆயில் மில்லில் உள்ள களத்தில் ஒத்திகை பார்க்க இடமளித்து, அன்றைய திட,திரவ வாயு செலவுகளை தானே ஏற்று செய்பவன் அந்த செலவை ஈடுகட்ட அட்டில் போடும் மூடைகளில் ஒன்றோ இரண்டையோ ஆட்டையை போட்டு, அடிமாட்டு விலைக்கு விற்று, நாடகத்துக்கு செலவளித்தவன்தான் இந்த மாடசாமி.


அப்படிப்பட்ட மாடசாமி என்னருகே இருந்தும் பேசவில்யோ என்ற ஏக்கம் என்னுள் பிரவாகமெடுத்து ஓடியது. அவன் பேசவில்லை யென்றால்யென்ன நாம் பேசுவோமே என நினைத்தாலும் நம் சமூகத் தால் நம் மூளையில்சலவை செய்யப்பட்ட பொதுபுத்தி தடுத்து சரா சரியாய் என்னையாக்கியது.

அவன் செய்தது என்ன என்பது அருகிலிருந்து நான் பார்க்கவில்லை வெறும் செவிவழிச் செய்திகள்தான்.

அவன்ஏஜெண்டாக வேலைபார்த்த மில்லில், மதிய உணவு கொண்டு வந்த தனது மனைவியும் அவன் பெண்பிள்ளையும், உணவுக் காக அமரும் போதும் மில்லின் முதலாளி அறுபதோ! அதை கடந்த வயதுடையவரோ வந்து மாடசாமியை வேறு வேலை சொல்லி வெளியே அனுப்பிவிட்டு அவன் மனைவியை புணருவதற்கு முயற் சித்தார். அதை ஜன்னல் வழியாக பார்த்தவன்பாணிபேரளை திறக்கும்  ராடைக் கொண்டு எறிந்து அவரை கொன்று விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

மற்றொரு தரப்பு அவர் கொலையானதும் அவர் அவளோடு இருந்த தைப் பார்த்ததும் உண்மைதான்.ஆனால் அவருக்கும் மாடசாமி மனைவி இருபது வயதுடையவளுக்கும் தொடர்பு உண்டா என்பது தெரியாது என்றது.

பிரிதொரு தரப்பு. கொலை நடந்தது உண்மை ஆனால் அவன் பார்த்த காட்சி என்னமோ உண்மை அதனால் அவன் முன் கோபம் பட்டுவிட்டான். 
நடந்தது என்ன என்பது மாடசாமியின் மனைவி கூறியது.

என் கணவர் வெளியே போன பின் முதலாளி,,,,,,ஆம் அவர் எனக்கு தந்தை போன்றவர் என்னிடமும் என் மகளிடம் பேசிக்கொண்டே புண்ணாக்கு மூடையை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது என் மகள் அட்டில் போட்ட மூடைகள் மீது ஏறி வினையாட துவங்கினாள். நானும் சத்தம்போட்டு அரற்றினேன். ஆனால் ஒரு மூடை அவள் மீது சரிய அதை நான் போய் தாங்க என் மீது அடுத்தடுத்த மூடைகள் விழுந்து என்னை அமுக்க நான் கால்களை உதறி உயிருக்கு போராடினேன்அப்போதுமுதலாளி எனக்கு மேலாக அவர் கால்களை  அகற்றி நின்று மூட்டைகளை தூக்கி அப்புறப்படுத்தினார். மூடைகள் அகற்றி விட்டு அவர் விலகுவதற்குகுள் என் கணவர் வந்துவிட்டார். அப்போது அங்கு உள்ள சூழ்நிலை அவரை சந்தேகப்பட வைத்து கொலையாளி ஆக்கியது.

மாடசாமியின் வாக்குமூலம் ஆமாங்க நான் பாக்கும் போது அந்த ஆளு என் பொஞ்சாதி மீது கால்களை அகற்றி நின்னாரு அனேகமா அது ஒன்றோ இரண்டோ முறைக்கு அப்புறம் அவரு எந்திரிக்க முயற்சிக்கும் போதும் நான் பாத்துட்டேன். என் புள்ள பக்கத்துல நின்னு அழுதுகிட்டு இருக்கு, அவெ பாவாட தொடைக்கு மேலறி கிடக்கு முகமெல்லாம் வேர்த்து ஒழுகியபடி இருந்துச்சி அந்த ஆளுக் கும் வேர்த்து இருந்தது. அதாங்க நா அவரக் கொல்ல வேண்டியதா போச்சி.

கொலையுண்டவளின் மகன் வாக்குமூலமாக: ”வணக்கம் நாங்க கௌரவமான குடும்பத்த சேர்ந்தவங்க, எங்க தாத்தா, பெரியப்ப, சித்தப்பா எல்லாம் கூட்டா சேர்ந்து பிஸ்னஸ் பண்ணுரவங்க. எங்களுக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு.எங்கப்பா அந்தபுள்ளைய காப்பாற்ற போயி அநியாயமா கொலையாகிப்போயிட்டாரு, அவர் செத்ததுகூட கவலையா தெரியலே ஆனா அவர் மேல எழுந்திரு க்கும் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரு ரொம்ப கன்னியமானவரு. வேணும்ன்னா மற்ற வேலைக் காரங்க கிட்டே கேட்டுப் பாருங்க.அவென் ஏற்கனவே எங்க மில்லு லே  நெறைய திருடி இருக்கான் நாங்க கண்டித்தாலும் எங்கப்பா அவன ஒன்னும் சொல்லமாட்டாரு.அப்படிபட்டவர கொல்ல எப்படித் தான் மனசு வந்துச்சோ”

நீதிமன்றம், அதன் தர்மமும், சட்டமும் சரியாக விசாரித்சாரித்ததா இல்லையா என்பது தெரியாது, ஆனால் எது உண்மை என்று எதுவும் தெரியாது இவையெல்லாம், செவிவழிச் செயதியை ஒட்டி அடுக்கி கொண்டவை.அப்ப என்ன நடந்தது?

அவன் இப்போது என்னிடமிருந்து எழுந்து பிரதான சாலைக்கு சென்று, நின்றான்.சாத்தூர் பஸ் வந்தது ஏறி சென்றுவிட்டான். அவன் சென்றுவிட்டாலும் அவன் நினைவலைகள் அவனை பற்றி தெரிந்து கொள்ள தூண்டியது.

உடனடியாக, ஏதாவது செய்தாகவேண்டும் என்ன செய்ய என தத்தளித்தபோது எழுதி விடுவோமா என தோன்றியது, அதை தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்.சரி அப்படி எழுத வேண்டு மென்றால் நமக்கு அவனை பற்றி முழுமையாக என்ன தெரியும்?

ஏற்கனவே நாம் கேள்விப்பட்ட அரசல் புரசலான விஷயங்களை வைத்து சிறுகதையாகவோ, குறுங்கதையாகவோ, பெரும்கதை யாக வோ எழுதலாமே? 
எப்படிவேனாலும் வசதிப்படி எழுதிக் கொள்ளலாம் ஆனால் உண்மை இருக்குமா, ஒரு கவிஞன் சொன்னதுபோன்று, எழுத்தை கீறினால் ரத்தம் வருமா? உயிரோட்டமாய் இருக்குமா? பேசாமல் அவனை சார்ந்தவர்களிடம் விசாரிப்போமே.

விசாரித்தால் உண்மைதெரியுமா?எதில்தான்உண்மையான உண்மை  இருக்கிறது.அகிரோகுரோசோவாவின்"ராஷோமன்,"திரைப்படத்தில் நடக்கும் கொலைக்கு யார், யாரோ சாட்சி சொல்கிறார்கள் இறுதி யில் மனச்சாட்சியே தீர்ப்பாகிறது.

கொலையாளி தண்டனையிலிருந்து தப்பிக்க பல காரணங்களும், சில நியாயங்களும் வைத்திருப்பான், கொலையுண்டவனும், தன் பக்கம் பல பியாயங்களை வைத்திருப்பான், ஆனால் அவன் வந்து கூண்டிலேறி சாட்சி சொல்லமுடியுமா காவல்துறையும், நீதித்துறை யும், சரியான உண்மையான நியாயத்தை செய்கிறதா .இதில் நடந்தது நடந்ததுதான் இதில் நதிமூலம் ரிசிமூலம் பார்த்து என்ன செய்ய, செத்தவனுக்கு உயிர் போச்சி. சாகாடித்தவனுக்கு வாழ்க்கை போச்சி. . அப்புட்டுதான்.

அதனால் யாரிடமும் உண்மை இருக்காது. அவரவர் பார்வையில் ஒரு சம்பவத்தை கற்பனை செய்து வைத்திருப்பார்கள். சரி காவல் துறையில்முதல்குற்றபத்திரிக்கைபதிவுசெய்துவைத்திருப்பார்களே  அதை வாங்கி பார்க்கலாமாயென்றால நாம் யார் நமக்கு எப்படி தருவார்கள். அப்படியே தந்தாலும் அதில் காவல்துறையினர் வசதிக் கேற்பதானே பதிந்திருப்பார்கள். சரி நீதிமன்றத்திற்கு சென்று விசார ணை அதனை தொடர்ந்து வழங்கிய தீர்ப்பின் நகல் கிடைத்தால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமே,

அதுஎப்படிகிடைக்கும்ஏன்கிடைக்காதுதுணைக்குகாந்தியைவைத்துக் கொண்டால், தீர்ப்பு நகலென்ன, ராணுவரகசியத்தையே,விலைக்கு வாங்கமுடியும். 
சரி அதையெல்லாம் வாங்கி என்ன செய்ய? கதை எழுதலாமே சரி கதை எழுதிவிட்டால் என்னவாகும். ஒன்றும் ஆகப்போவதில்லை இப்படி நினைத்தால் இன்று வரலாறுகளும்,

பெரும் பெரும் காவியங்கள் எல்லாம் நமக்கு கிடைத்து இருக்குமா?

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட கூடாது. அதுவேறுஇதுவேறு .அவன்என்ன இட்லரா,முசோலினியா, அல்லது,  அலெக்சாண்டரா, நெப்போஸீயனா, அவனை பற்றி எழுத, இப்படித் தான் எல்லா எழுத்தாளர்களும், குட்டையை சமுத்திரமென்றும், கரடை கண்டங்களென்றும் தனது கற்பனா புரவியை ஓடவிட்டு மொழியாளுகையால் ஒப்பனை செய்து அதை பலபிரதிளாக்கி, அதற்கு சில எதிர்ப்புகளையும், பல பாராட்டுகளையும் பெற்று, இறுதியில் அமரத்துவம் பொருந்திய எழுத்தாளனாய் தனக்கு தானே மகுடம் சூட்டிக் கொண்டு ராவணனையும் மிஞ்சிய தலைகளுடன் வலம் வருகிறார்கள். முதலில் ராவணனுக்கே பத்துதலை கிடை யாது அது வேறு விஷயம்.

சரி நம்ம கதைக்கு வருவோம். அவன் போயிட்டான். ஆனால் அவன் பரப்பிச் சென்ற பழைய நெடி இன்னும் என்னை வருடிக் கொண்டே இருக்கிறது. யாரிடம் சொல்லித் தீர்ப்பது. எங்கே சென்று குமட்டளை வாந்தியெடுப்பது. ஒன்றும் முடியாமல் புள்ளதாச்சியை போல் அங்கமிஙகும் நகர்ந்தோ ஊர்ந்து கொண்டோ இருக்கிறேன். அதை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும் எப்படி. . . . . . . ?

28 ஏப்., 2013

கண்கலவி,,,,,,

பழைய பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகளும் ஒரு சில சிற்றுந்துகளும் உள்ளே வரவும் வெளியே செல்லவுமாக இருந்தன.
தனியார்பேருந்துகளில்பெருவிரல்ஊன்றஇடமின்றிஇருந்தும்மேலும்மனிதஉயிர்களை குப்பைக் கூளங்களைப் போல் பரத்திப்போடுவதற்கான முயற்சிகளில் இருந்தனர் நடத்துனர்கள். அதற்கு பயணிகளும் சலிப்பின்றிதத்தம்ஊர்போய்சேருவதற்கான முயற்சிகளில் இருந்தனர்.
மயங்கிய மாலை வேலையானாலும் காலையில் எப்படி பரபரப்பாக பஸ்ஸிலேறி செல்ல வேண்டிய இடங்களுக்கு இடம் பெயர்ந்தார்களோ அதே வேகம் அசுர முயற்சியோடு வீடு செல்லும் போதும் குறைவின்றி செயலாற்றினார்கள்,ஒருவரோடு ஒருவர் முண்டியடித்து ஏறிடும் போது உடல் வாடை ஒருவரொருவர் நாசியிலேறி உதிர்ந்தது.
காலையில்உடைதெளித்துக்கொண்டவாசனைதிரவியங்கள்,மாலையில்நறுமணங்கலந்த வியர் வை நெடிகலந்த மயக்க நிலையை உருவாக்கியது.பெண்களின் கூந்தலிருந்து  காய்ந்து சருகான மலரின் மணம் கிரக்கத்தைத்தந்து வீழ்த்திக்கொண்டிருந்தது.
செல்ல வேண்டிய ஊர்களுக்கான அரசுப்பேருந்துகள் நிலையத்திற்குள் வந்திருந்தது அவை களில் ஏறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் அதற்குப்பதிலாக அவர்களின் உடமைகளை ஜன்னல்வழியாகபோட்டுவிட்டுவெளியேநின்றுவேடிக்கைபார்த்தனர்இளைஞர்கள்.இவர்களுக்கு  சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என வயதானவர்களும் இளைஞிகளும்/
முறையாக பேருந்தின் படிக்கட்டு வழியாக ஏறியவர்களுக்கு பேருந்தில் அமர்வதற்கு இடமில்லை.பேருந்து நிலைய சாலையோரத்துவியாபாரிகள்கிடைத்தவரைலாபம்தான் என்ற இலக்கோடு பண்டங்கள் மீது வைத்த விலையை தளர்த்திக்கொண்டு விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
நின்று கொண்டிருக்கும் பேருந்துக்குள் தைல வியாபாரி,பழைய புத்தகங்களை மறு விலைக்கு விற்கும்பையன்,நாட்டின்வரைபடங்கள்விற்கும்முதியவர்கடலை, வெள்ளரிக் காய், தண்ணீர் பாக்கெட் அண்ணாச்சிப்பழம் விற்கும் நடுத்தர வாதிகள்தனதுபொருட் களை பயணிகளிடம் தள்ளிவிட அவரவர் பாணியில் பெருங்குரலெடுத்தும் ராகம்,லயம் மாறாத வகையிலும் இயங்கினர்.
யாரோஒருஅலுவலரிடம் வாங்கிய முத்திரையுடன்கூடியகையொப்பமிட்டசான்றிதழுக்கு பாலிதீன்  உறையிட்டு நான்கைந்துபிரதிகளைகையில்வைத்திருப்பவர்.யாரும் கேட்காத நிலையிலும் விரும்பாதவர்களாக இருந்தாலும் அவரவர் மடியில் போட்டபடி சென்று திரும்பிவந்துகொண்டிருந்தாள்பதிமூன்றுவயதுநூதனப்பெண்.ஜன்னலுக்குவெளியே  கையை தொங்கப் போட்டு இருப்பவர்களை சுரண்டி பிச்சை கேட்கும் சிறுமி. தனது இடுப்பில் மூன்றோ நான்கோ வயதுடைய பையனை வைத்துக்கொண்டு வயிற்றைத் தடவிக் காட்டும் மாய் மால வித்தைக்காரர்,ஓட்டுனர் வாகனத்தை உயிர்ப்பித்து இஞ்சி னை ஓட வைத்துக் கொண்டு முன்னும்,பின்னும் நகர்த்தி வித்தைகள் செய்தும்நடத்துனர் யாரையும் தப்பிக்க விடாமல் டிக்கெட்டுகளை கொடுத்து தக்கவைத்துக்கொல்வதுமாக இருந்தார்.
நிலைய தேனீர் கடைகளிலும் பயணிகள் நிழற்க்கூரை அடியிலும்மக்கள்கூட்டம் வழிந்த படி இருந்தனர்.நான் பேருந்து நிலைய புத்தக்கடைக்குள் அந்தமாதசிறுபத்திரிக்கை வந்திரு க்கிறதா என விசாரித்தேன்.புத்தக விற்பனையாளர் புத்தக செல்பிலிருந்த பல புத்தகங்களை புலனரிந்து விட்டு உதடு பிதுக்கினார்.
“என்னாச்சி வரலயா”?
“இன்னைக்கி வர்ரதுதான்,என்னான்னு தெரியல,நைட் வந்தாலும் வரும்.என்றார் கடைக்காரர். நான் எனது இரு சக்கர வாகனத்தை உயிரூட்டிப் புறப்பட்டேன்.
ரொம்பவும் நெருக்கியது.வீட்டிற்கும் நிலையத்திற்கும் ஏழு கிலோ மீட்டர்.அதனால் நிலையக் கழிறைக்கு சென்று திரும்பினேன்.பாரம் குறைந்தது.ஆனால் மற்றொரு பாரம் என்னை அழுத்தித்தள்ளியது.தடுமாறி நின்று கவனித்தேன்.
கழிவறை காம்பவுண்டுச்சுவரில் நாற்பதடி நீளம்,இருபதடிஉயரமுள்ள உலோக விளம்பர போர்டு சாத்தி வைக்கப்பட்டிருந்தது.அந்த இடைவெளில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தார் மொழுகிய உடல்,நான்கடி உயரம்,பழுப்பேறிய வேஷ்டி,தோள் தழுவிய சரடு படிந்த கேசம்,பலவருடங்களாய் முகமழியாத முடிக்கற்றைகள்.ஒட்டிய வயிறு.
எனக்கும் அவனுக்கும் தூரம் பத்தடி ,,,,,அவனுக்கும்அவனதுபார்வையிலிருந்து பதினை ந்தடி தொலைவில்முப்பதுவயதோஅல்லதுஅதற்கும்குறைவான தேகக் குறைவற்ற ஆறடி உயரம் அதற்க்கேற்ற சரியான அங்க வளர்ச்சியடைந்த பெண்,எலுமிச்சை நிறச்சேலை ,சேலையின் நிறத்திற்கேற்ப ஜாக்கெட் வலது தோளில் தோள்ப்பையுடன் பஸ்ஸிற்காக காத்திருக்கிறாள்.
அவனின் வலது கைக்கேற்றபடி அவனது உடலும் சேர்ந்து உச்ச நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.யாரும் யாரையும்நெருங்கவில்லை.ஆனாலும்அதுநிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.பயமோ,பதட்டமோஅவனிடம்தென்படவில்லை.மிகநிதானமாகஅந்தஅனுவனுவாய்  அந்தப்பெண்மீது பார்வையில் ஊடுருவி மேய்ந்து கொண்டிருக்கிறான். அவனைப் பார்க்கிற யாரும்பாவம்,பைத்தியம்,பிச்சைக்காரன்என்றுதான்பரிதாபம் கொள் வார்கள்.  நானென்ன யாரும் அவனை  தடுக்க முடியவில்லை.

25 ஏப்., 2013

கைத்துட்டு,,,,




எந்தப் பக்கம் கையை விட்ட போதிலும் அவரது உடம்பிலிருந்து ரூபாயை எடுத்து விடுகிறார்.
விட்டால்  எட்டு திசகளிலும் இருந்து எடுப்பார் போலிருக்கிறது.

வலது  பக்கம் கையை விடுகிறார். மடித்துக் கட்டப்பட்டிருந்த கட்டம் போட்ட லுங்கியை மீறி வெளித்தெரிந்தஅண்டர்வேர்பாக்கெட்டிலிருந்துரூபாயைஎடுக்கிறார். இடதுப்பக்கம்  கையை விடுகிறார்.மேல்ச்சட்டைப்பையிலிருந்து நோட்டுக்களாய் எடுத்துப்போடுகிறார். அது போலவே சட்டையின் உள் பை,அண்டர் வேர்பாக்கெட்டின்இடது பை,கட்டியிருந்த  லுங்கியின் சுருட் டிய மடிப்பிலிருந்து,,,,,,,என எல்லாப்பக்கமிருந்தும் எடுகிறார்.எல்லாம் மூன்றாய்,இரண்டாய் மடிக்கப்பட்டிருந்த பத்து ரூபாய்,இருபது ரூபாய்,ஐந்து ரூபாய்  நோட்டுக்கள் கசலையாய்/

நான் மற்றும் எனது சக ஊழியர் இருவருமாய் அலுவலகம் விட்டு வந்து கொண்டிருந்த நேரமது ,நேற்று இரவு கண் மூடிக்கொண்ட மின் வெட்டினால் சரியாக தூங்காத தூக்கம் இப்போது வந்து இமைகளை இழுக்க தூக்கமுன் கண்களை தழுவட்டுமேஎன அசரீரி ஒலிக்கிறது.அல்லது ஒலிப்பத்தாய் படுகிறது.

ஆகா இதெல்லாம் சரிப்படாது.இரு சக்கர வாகனத்தில் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் அது எப்படி தூக்கம் கப்ப வண்டியை ஓட்டுவது சரியாக இருக்கும்? உடலும் மனமும்,புத்தியும் ஒரு சேர  மிகவும் கவனமாக பயணிக்கா விட்டாலும் கூட ஏதோ ஓரளவு பயணித்து ஆக வேண்டுமே என்கிற உயர்ரக எண்ணத்தில் தற்சமயம் தூக்கம் விலக்க ஒரு டீசாப்பிட்டலாம் என்கிற முடிவில்தேநீர் கடை முன்பு நிற்கிறோம். வழக்கமாக டீ சாப்புடுகிற கடைதான்அது.சக்திதாசன் கடை.காலை,மாலை இரு வேளையும்  பெரும்பாலும் அங்குதான் டீ சாப்பிடுவேன் நேரமிருக்கிற தினங்களில்/

டீக்கடைகள் எப்போதும் ஏழைகளையும், அன்றாடர்களையும் தன்னுள் தக்கவைத்துக் கொண்டும் உள்ளிழுத்துக் கொள்கிறதுமான உயிர் உருவாய்த்தெரிகிறது. கோயில்களுக்கு அடையாளாய் இருக்கிற கோபுரம் போல டீக்கடைகளுக்கு அடையாளமாய் பாய்லரும், பால்ச் சட்டியும்,டிக்காக்‌ஷன் பையும் போலும்/

நாங்கள் சென்ற நேரம் சூடாக வடையும் ,பஜ்ஜியும் இருந்தது.வேறு வழியில்லை.அந்த விலைக்கு அப்படித்தான் சுட்டுத்தரமுடியும்.ஏதோஒரு மாவை பிசைந்து உள்ளே நறுக்கிய வெங்காய த் துண்டுகளையும்,மிளகாய்த் துண்டுகளையும் வைத்து சுட்டெடுத்த வடையும், பஜ்ஜியும் பார்க்க செந்நிறக் கலர் கொண்டு எண்ணெய் பூசி மாலை வெயிலில் மின்னும். இரண்டு ரூபாய்க்கு பின்எப்படித்தரமுடியும்அவர்களால்கேட்கமுடிகிற போதும் கூட இங்கு இவ்வளவுதான் விற்க முடியும்,அதற்கு மேலானால் விற்க முடியாது.வாங்கவும் மாட்டார்கள்ஸ்கூல்போகிறபிள்ளைகளுக்கும்,கூலிவேலையில்சம்பாரிக்கிறவர்களுக்கும்இதுதான் லாயக்குஇரண்டுஅல்லதுமூன்று வடை,அல்லதுபஜ்ஜிகளைபிய்த்துப் போட்டு  தண்ணீரான சட்னியும்சாம்பாரும்விட்டுச்சாப்பிட்டால்அந்நேரம்வயிறுநிறைந்த திருப்தி  என டீக்கடை உரிமையாளர் சொன்ன போது தஞ்சாவூரில் ஒரு திரீ ஸ்டார் ஹோட்டலில் ஒரு டீ 88 ரூபாய்க்கு குடித்த ஞாபகம் வருகிறது.(வேண்டாம்,வேண்டாம் எனச்சொல்ல அலுவலக மேலாளர் கொடுத்த பார்ட்டியில் நடந்த விபத்து அது.)அம்மாதிரியான கொடுமையான விபத்துக்கு இது மிகவும் தேவலாம்.

நானும் என்  உடன் வேலை பார்ப்பவருமாய் சென்றமாலைப்பொழுதுக்குடீயும் ,வடையும் ரெடியாகஇருந்தது.நான்ஒருகடி,ஒருகுடிஎன்கிறவகையில்இயங்கிக்கொண்டிருந்தபோது உடன்வந்தவர்எதுவும்வேண்டாம் எனச்சொல்லி விட்டார்.(உடம்பைப் பேணுகிறாராமாம்) குடித்த டீக்கும்,கடித்த  வடைக்குமாய் கொடுக்க காசுதேடியபோதுபையில் சில்லறைகள்  தவிர்த்துநூறுரூபாயாய்தட்டுப்பட்டது.”சில்லறைஇல்லண்ணே”,என்றவாறு முழுத் தாளாய்க்   கொடுத்த போதுஎங்களுக்குமிச்சச்சில்லறைகொடுக்கஎத்தனித்தபோதுதான்இப்படி.  

எண்ணன்னே  இப்படி என்ற போது அவர் சொல்கிறார். பலச்சரக்குக்கு, பாலுக்கு, திடீர்ன்னு சீனி வாங்க,,,,,,,,இப்பிடி எல்லாத்துக்கும் தனித்தனி சார்.ஒங்கள மாதிரி எல்லாரும் குடுக்குற போது அதத அங்கங்க வச்சிருவேன் சார் என்கிறார்.

அவரது உடம்பில்  எந்தப்பக்கம் கைவிட்ட போதிலும் பணம் வருகிறது.விட்டால் எட்டு திசையிலிருந்தும் பணம் எடுப்பாரோ?