14 ஏப்., 2015

மேடை,,,,,,,(பாகம் 1)

ஞாயிற்றுகிழமையின்இறுதிதுளிகள்,துளிர்த்திடும்,ஒலிதேவாலாயணியோசையால்உணர்த்தியது.

அம்மன் கோயில் திடல் ஆயிரமாயிர மனித தடயங்களை மொளனமாய் சுமந்தப்படிஉறைந்துக்கிடந்தது.  அன்னைபராசக்தியும்,வெயிலுகந்தம்மனும், அன்றேய தினத்தில் பக்தர்கள் வைத்துச்சென்ற கோரிக்கைக்களைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்க,வாலசுப்பிரமணியனும், சர்வேஸ்வரனும், நவீன திருவிளையாடலுக்கான,ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்க,தன்னெளியற்ற நிலாபந்து வான்திடலில்,மேற்குப்பக்க மாய்    உருண்டுக்கொண்டிருக்க,  தன் பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து இடம் பெயர்ந்துக்கொண்டிருந்தான் பாலு.
வந்தவன்நிலைக்கொள்ள,பிறந்தவன்இடம்பெயறும்கோட்பாட்டின்அடிப்படையில்சொந்த  மண்ணில் தளைத் தோங் கிய ஆல மரத்தை  அடியோடு பறித்து அப்புறப்படுத்தும் அநாகரீகம் அரங்கேற்றமாக, அடுத்த கட்டத்திற்கு ஆய்த்தமாக நகர பேருந்து நிலையத்திற்கு விரைந்தான் பாலகிருஷ்ணன் என்ற பாலு.

தனக்கு மணைவி, குழந்தைகள் என குடும்ப தலைவனாய் இருந்தாலும், சூழ் நிலையின் சூட்சுமத்தில் மாட்டிக்கொண்டதால் குழந்தையைப்போல் கத்தி அழுவதை தவிர ரொளத்திரத்தை வேறோரு வடிவத்தில் வெளிப்படுத்த இயாளாமல், கண்ணீர் மல்க அழுதான், அழுகையின் ஒலி அவனுக்கே கேட்கவில்லை, கண்ணீரருந்திய அம்மன் திடலின் புழுதிகள்  பொரிந்தது. புழுதியின் எதிர் வினை அவனுக்கு ஆறுதலாய் இருந்தது.

அரசு பணியில் இடம் மாறுதல் என்பது எழுதப்பட்ட சாசனம்தான். ஆனால் விருப்ப மாறுதல், கணவன், மனைவி, ஒரே இடத்தில் பணிசெய்வதற்க்காண இட மாற்றம்,அல்லது பணி உயர்வுக்காண பணிமாறுதல்,  இவைகளைத்தாண்டி தண்டனைக்காண பணிமாறுதல். இதனடிப்படையில்தான் பாலுவுக்கு பணிமாறுதல் கொடுக்கப்பட்டிருகிறது. எதற்கு?கையூட்டு வாங்கியதற்க்காகவா, அல்லது கையாடல் செய்தமைக்காகவா? இல்லை அரசு பொருட்களை திருடியதற்க்காகவா? இவை எதுவும் கிடையாது. பின்பு எதற்க்காக போக, போக தெரியும்.

அமிர்தராஜ் திரையரங்கில்,  நடைப்பெற்றுக்கொண்டிருக்கும், பிரபு நடித்த சின்னவாத்தியார் படத்தின் இரவுக்காட்சியின் இறுதிக்கட்ட ஒலி அரங்கத்தையும், மீறி அதிர்ந்துக்கொண்டிருந்தது. பாலு பேருந்துக்காக காத்திருந்தான். அந்த இரவில் கூட அவனை விடாத கருப்பாய் தொடரும், கடன்கார பிசாசுகள் தென்படுகிறார்களா என்று சுற்றும், முற்றும், பதட்டத்தோடு பார்த்துக்கொண்டான்.

 பேருந்து நிலையத்தில்  பஸ்கிடைக்காமல்அதிகாலை பஸ்க்காக கோடாங்கி அடித்து பார்த்துவிட்டு தோழ்வியுற்றவர்களாய் மயங்கிக்கிடந்தனர்,  ஒரு சிலர் நம்பிக்கையோடுகாத்திருந்தனர்.
                                                                                                            பேருந்தின் வடக்கு வாசளில்  தேனீர் கடை ஒன்று மங்கிய ஒளியில் நத்தையைப்போல் இயங்கிக்கொண்டிருந்தது. முத்து கணக்குப் போட்டான் தேனீரருந்த  பணம் தேறுமா? என்று  அலுவலகத்தில் பணி மாறுதலுக்கான ஆணை வழங்கியயுடன், அன்றேய தினமே மாத சம்பளமும் கிடைத்திருந்தது. ஆனால் அது அந்த மாதத்திற்க்கான வட்டி கட்டுவதற்கே சரியாகிப்போனது.  அடுத்த மாதத்தை கடத்துவதற்க்கான கேள்வியோடு இருக்கையில் பணியிட மாற்றம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டியது போக இரண்டு தினங்களுக்கு செழுமையாக செலவு செய்வதற்குதான் பணம் மிஞ்சும், பின்பு மறுபடி வட்டிக்கு பணம் பெற்று அந்த மாதத்தின் நாட்களை கடத்த வேண்டிய அபத்தம்.

இந் நிலையில்  மாத வட்டியை கட்டிவிட்டு மீண்டும் பணம் பெறுவதற்கு இயளவில்லை ஏன்னெளில் அடுத்த மாதம் வட்டிக்கட்ட இருக்க மாட்டான். அதே நேரத்தில் உண்மையைச் சொல்லி கடன் கேட்டால் சட்டையை பிடித்து உட்கார வைத்து விடுவான் கடன் காரன்.  இப்போது உடனடியாக வெளியூர் சென்று பணியேற்க்க வேண்டும், கையில் நெற்றியில் வைக்கும் காலணா காசு கூட கிடையாது. என்னசெய்வது என முழிக்கும் போது அவனை சுமந்து செல்லும் துருவேறிய மிதி வண்டி கை கொடுக்க முன் வந்தது. பணியேற்புக்கான ஆறு தினங்களில் மூன்று தினங்களை மிதி வண்டி விற்பதில்லையே கழிந்து விட்டது.

 மூன்று நாட்களில் ஆறு கடைகளில் வண்டியை காண்பித்து  ‘’ இத வித்து தாங்கண்ணே’’என்பான் கடைக்காரகளிடம். ‘’ வண்டியே நிப்பாட்டிட்டு போ யாரச்சும் கேட்டா குடுப்போம்’’ என்பார்கள். இவனும் அதன் படி மூன்று நாட்களாய் முயற்சித்தான் பலன் இல்லை. இறுதியாக  இரும்பு கடையில் நிறுப்பதற்கு உறுதியானான்.

மிதி வண்டியை தூக்கி துலாபாரத்தில் வைத்தான். முப்பது கிலோ எடைக்காட்டியது தேய்ந்துப் போன எடைக்கற்கள். கிலோ அய்ந்து ரூபாய் கணக்கிட்டு  நூற்றி ஐம்பது ரூபாய்க்கு நூறு ரூபாய் பத்து பழைய தாள்கலாகவும், ஐம்பதுக்கு சில்லரை காசுகளாகவும் கடைக்காரர் தந்தார். அதை மூன்று நாள் ஏக்கத்தோடு பெற்றுக்கொண்டு, ஒரு வாரத்திற்க்காண குறைந்த பட்ச உணவு பொருட்க்களை வாங்கி வந்து வீடு சேர்த்தான்.

உணர்வு பெருக்கிலும், இயாளாமையின்  கோர வடுவிழும் உடலதிர  தேம்பினாள் பாலுவின் மனைவி சந்திரா. யாருக்கு யார் ஆறுதல் சொல்லி தேற்றுவது  பெண் கண்ணீரால் சகலவற்றையும் கரைத்து விடுவாள், ஆனால் ஆண் மென்று முழுங்குவான் அது வோறொரு  வடிவத்தில் தலைத்தோங்கும். வலது கண்ணத்தில் வழிந்த கண்ணீரை இடது கரத்தால் துடைத்து விட்டு கேள்வியாய் அவனை பார்த்தாள். அதற்கு அவன் பதில் சொல்லுமளவுக்கு பக்குவமான மன நிலையில் இல்லை. அதனால் மெளனமாய் விட்டிலிருந்து வெளியேறியது இன்னும் ரணமாய் வழித்துக்கொண்டிருந்தது. ஆணும், பெண்ணும் ஆசையாய் இணைந்து  அன்பின் சாட்சியாய் குழந்தைகளை ஈன்றெடுத்து  அவர்கள் விரும்பமின்றியே இந்த உலகத்துக்கு அறிமுகம் செய்து வைத்து பின்பு அவர்களின் எதிர் காலம் என்ற மாய உலகத்துக்குள் பிவேசிக்க அவர்களை  நடத்தும் விதம் எவ்வளவு மன சோர்வையும், உளச்சளையும் உருவாக்குகிறது. குழந்தைகளை, தாவரங்களைப் போல், பறவைகளைப் போல் சுதந்திரமாய் வளர அனுமதிக்கிறோமா?   நம்முடைய கடந்துப் போன நிறைவேறாத ஆசை அபிலாசைகளை அவர்களின் பிஞ்சு மனங்களில் வழுக்கட்டாயமாக திணிக்க பெற்றோர்கள் படும் பாடு அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் எல்லாவற்றும் நம்மிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம், இதனால் குழந்தைகள்  சுயத்தை இழந்து சிறு நீர் கழிப்பதுக்கு கூட அனுமதிக்காக காத்திருந்து, காத்திருந்து, எல்லவற்றையும் பெற்றோர்கள், பாது காவலர்கள், ஆசியர்களை, சார்ந்தே வாழ்க்கையை துவக்க கற்றுக்கொள்வதால், அவர்கள் காலம் தோறும் மற்றவர்களை சார்ந்தே வாழ நேரிடுகிறது.

இதன்படி பாலுவின் பிள்ளைகள், முதல் பெண் தாமரை, இரண்டாவது, பெண் கனிமொழி, மூன்றாவது பையன் பாரதி, வீட்டின் நிலை என்ன என்பது தெறியாமல் உறங்கிக்கொண்டு இருக்கும் போது பாலு வெளியேறினான். 
    
சைக்கிள் விற்பனை செய்த பணத்தில் நூறு ரூபாய் வீட்டுக்குப்போக, மீதி மனைவி சந்திரா ஐம்பது ரூபாய் கொடுத்ததில் கணக்குப்போட்டான். 

 முந்திய நாள் அலுவலக நண்பர் மதுவிடம் கேட்டதை நினைத்துப்பார்த்தான். ‘’நாகர் கோவிலுக்கு துருவா போனா முப்பது ரூபா திருநெல்வேலி இறங்கிப் போனா  முப்பத்திரென்டு ரூபா’’ என சொன்னதை சிந்திக்கையில்  மீதி பனிரென்டு ரூபாய் இருப்பது தெளிவானதும் தைரியமாக தேனீர் கடைக்கு சென்றான். ‘’டீ ரெண்டு ரூபா, கோல்டு ப்ளாக் பிலேன்  ஒரு ரூபாய் பத்துக்காசு  செய்யது பீடி கட்டு ஒன்னு அம்பது  மொத்தம் நாலு அறுபது ஆகுது மீதியும் இருக்கு’’ என்ற கணத்த  நம்பிக்கையோடு  தேனீர்க்கடை உரிமையாளரிடம் சென்று பணம் செலுத்த நின்றான் அவர் கல்லாவுக்கு முன்பாக கவிழவும், பின்பு நிமிரவுமாய் இருந்தார்.

பாய்லர் முன்பாக நிற்கும் தேனீர் தாயாரிப்பவர் தூக்க போயை விரட்ட சிப்பி பீடியை கரைத்துக்கொண்டிருந்தார்.

‘’ஒரு டீ’’ என்றான் பாலு.

பீடியை இழக்க தயாராக இல்லமல் பற்களில் கடித்தப்படியை தேனீர்  போட்டுக்கொடுத்தார். வாங்கி அருத்தியவனுக்கு  இனிப்புப் பற்றாக்குறையால் துவர்ப்பாய் இருந்தது.

‘’சீனி போடுங்க’’ க்ளாஸை நீட்டினான். அரை கரண்டி போட்டார். வாங்கி அருந்தினான். சாக்ரிம் தூக்கலாய் இருந்தது,

‘’அண்ணே டிக்காசன் ஊத்துங்க’’ டீ சாரை பிளிந்து விட்டார்  இவன் தொந்தரவால் பீடி அணைந்து விட்டது. அதையே பற்ற் வைக்காமல் வாயிருந்தப்படியே தூ என துப்பிவிட்டு  அடுத்த பீடியை கடுப்போடு பற்ற வைத்தார். தேனீரருந்திய வாய்க்கு அடுத்து புகை தேவைப்பட்டதால் சிகரெட்டும் பீடி கட்டையும் வாங்கி எதை பற்றவைப்பதென்று சிந்தித்தான். எப்போதும்  பெரும் பான்மைத் தானே  வெற்றி பெறும்  அதனால் வெள்ளைகே ஒட்டு விழுந்தது சிகரெட்டை பற்ற வைத்து இழுத்து விட்டான். வெளியேறிய புகையோடு மன உளச்சலும் வெளியேறி விட்டதாக நம்பினான். அப்போது பாண்டியன் வந்தது. கோயில்பட்டி என இருந்தமையால் அவசரப்பட்டு சிகரெட்டை காலில்ப் போட்டு அணைக்க வில்லை ஒரு சிலர் ஓடிச்சென்று ஏறினார்கள்.  அதன் பின்பாக  கே, டி, சி வந்தது, தூத்துக்குடி, தூத்துக்குடி, என அந்த இரவிலும் பேருந்து ஏஜென்டு கத்தினார். அவருக்கு பின்பாக நகராட்சியின் ஊழியர் பஸ் வந்து செல்வதற்க்கான வரி பணத்துக்கு பஸின் முன்பாக நின்றார் உடனே பாலு சிகரெட்டை அனைக்கவில்லை பின் பக்கமாய் மறைத்துக்கொண்டான்.

 அவர்  அவனை கண்டு கொள்ளவில்லை அதனால் அவனுக்கு அது வருத்தமழித்தது.  அவரிடம் அவன் என்ன    பத்தமடை பாய் விரித்து சம்மந்தம் பேசியா அவர் மகளை மணம் முடித்தான். மணம் கொண்டது மாளிகை என்று அவர்களாகவே முடித்துக்கொண்டார்கள்.

சிறிது நேரமாய் எந்த பஸ்களும் வர வில்லை  புக் ஸ்டாலில் நின்று மாமனாரை கவனித்தான் அவர் வசூல் செய்த காசை கை பையில் போட்டு விட்டு  காக்கி சீருடை சட்டை பையிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து இழுத்தார். பாலுவுக்கு பொறமையாக இருந்தது. அவன் அவருக்கு மரியாதை கொடுக்கிறேன் என்று சிகரெட்டை கரைத்து விட்டான்.  பீடிக் கட்டை உடைத்தான் ஒன்றை உருவி  எடுத்துக்கொண்டு பழையப்படி தேனீர் கடைக்கு வந்து சிமிழி விளக்கில்  சிகரெட்டு அட்டை பேப்பரால் பற்ற வைத்து இழுத்து விட்டான் புகையோடு இருமலும் சேர்ந்து வந்தது. அப்போது திருவள்ளுவரும் வந்து விட்டார். முன்பை போலவே ஏஜென்டு ‘’நாகர்கோவில், நாகர்கோவில்’’ என கத்த சந்திராவின் அப்பா பஸ் முன்பாக நிற்க பாலு பஸ்க்குள் ஏறிக்கொண்டான் அவர் இப்போது நன்றாக கவனித்தார். அது அவனுக்கு போதுமானதாக உணர்ந்தான்.

‘’எங்க போனும்’’ வேண்டா வெறுப்பாக கேட்டார் நடத்துனர்.

‘’ நாகர் கோவில்’’ என்றான் அது அவருக்கு திருப்த்தியாக இருந்தது. பேருந்தின் இரு மருங்கிலும் இருக்கைகளை ஆராய்ந்தான். ஓட்டுனருக்கு பின்பு உள்ள இருக்கையும், முன் படிக்கட்டு முன்பாக உள்ள நான்கு பேர் அமரும் இரண்டு  இருக்கைகளும் காலியாக இருந்தது. பாலு வேகமாக முன் இருக்கையில் அமர முயலுகையில் நடத்துனர்  பாகிஸ்தான் எல்கையிலிருந்து இந்திய எல்கைக்குள் ஊடுறிவிய தீவிர வாதியை விரட்டு வதைப் போன்று விரட்டினார். அவனுக்கு கொபம் கொப்பளித்தது, ஆனால் அடக்கிக்கொண்டு நடத்துனர் சுட்டிக்காட்டிய பின் சக்கரத்தின் மேலுள்ள இருக்கையில் அமர வேண்டிய நிர்பந்தம். இரு இடம் காலியாக இருந்தது. சக்கரத்தின் மேலுள்ள இருக்கையில் அமர்ந்தால் சாளரத்தின் வழியாக காற்றயும், இனிதான இயற்கை எழில்களையும் தரிசித்துக்கொண்டே செல்லலாம், ஆனால் கால் முடக்கி அமர வேண்டும் கால்கள் வலிக்கும்   பக்கவாட்டில் அமர்ந்தால்,  அயரும் போது  சரிந்து விழ நேரிடும் அதனால் பின் உருளி பட்டை மீதுள்ள  இருக்கையில் அமர முடிவெடுத்து  பயண பையை  பொருள் வைக்கும் இடத்தில் இடுக்கு கிடையில் அவனுடைய பையையும் தினித்துவிட்டு ‘’ அப்பாடா’’ என இமாலய சாதனை புரிந்தவனாக சாளரத்தின் கண்ணாடி மீது தலை சாய்ந்தான்.

நடத்துனர் துலுக்கப்பட்டியை தாண்டியவுடன், பயணிகளுக்கு பயண சீட்டு கொடுக்க வந்தார் ஒவ்வொரு ஸ்டேஜ்க்கும் உள்ள கட்டணச்சீட்டை  பரிசோதித்து ஒவ்வொன்றையும் தனிதனியாக கிழித்து அதில் துளையிட்டார். பாலுவுக்கு ஒவ்வொரு சீட்களையும் கிழிக்கும் போதும் கிளியுண்டானது. எட்டி எட்டி  பார்த்து நம் பட்ஜெட்க்குள், அடங்குமா? அல்லது மீறுமா?  என பதட்டத்தில் இருந்தான்.   நடத்துனர்  மீண்டும் ஒரு முறை  சீட்டுக்களை உற்றுக்கவனித்துவ்விட்டு     கொடுத்தார்.

  பெற்றுக்கொண்டவன் இப்போது சரியாக கணக்கிட்டான்.

பதினோரு, ரூபாய்க்கு ஒரு சீட், ஒன்பது ரூபாய்க்கு ஒரு சீட், நான்கு ரூபாய்க்கு ஒரு சீட், எழுபது காசுக்கு ஒரு சீட், என இருந்தது. அதை பார்த்து மூன்று தினங்களுக்கு பின் முதன் முறையாக ஆசுவாசமடைந்தான். அலுவலக் நண்பர் போட்ட கணக்கும், அவன் போட்ட கணக்கும், நலிவடைந்தது. பாலு நிறைவாக கட்டணம் செலுத்தி பயணச் சீட்டை பெற்றுக்கொண்டு இரண்டாவது முறையாக ஆசுவாசமாய் இருப்பிட சாய்வுக்கட்டையை இழுத்துவிட்டு நன்றாக சாய்ந்துக்கொண்டு கண்களை மூடினான்.

 காற்றாற்று வெள்ள பெருக்கால்  அடித்து வரப் பெறும்  அடையாளமற்ற   பொருட்க்கள்  நீரில் மூழ்கி  சில நாட்களுக்குப்பின் அதன் தடிமத்துக்கேற்றப்படி வெளிப்படுவதைப்போல் கடந்தவைகள் வெளிப்பட்டன ஆனால்  ஒன்றன் பின் ஒன்றாக  வரிசை கிரமமாக இல்லாமல் உயரமான மலை சிகரங்களிலிருந்து கொட்டிடும் நீர் திமிலைப்போல் ஒழுங்கின்றி வழிந்து கொட்டியது. ஒவ்வொன்றாய் ஆய்ந்து சேகரிக்க நினைத்து காலி பாத்திரமாய் அவனையாக்கிட முயற்ச்சித்தாளும்  துக்கமும், ஏக்கமும், ஏமாற்றமுமாய் துரோகத்தின் படிமங்கள். நிறைந்து வழிந்து  கொண்டே இருந்தது. அதனால் அவன் எல்லவற்றிலுமிருந்து விலகி செல்ல நீர் பரப்பில் புதியதாய் நீந்திக்கடக்கும் சிறுவனாய் தத்தளித்தான்.

எதைப்பற்றியும் நினைக்காமல் ஒரு யோகியைப்போல் ஐம் புலன் களையும்  அடக்கிட முயற்சித்தான். லெகிக வாழ்வை கடந்தவன் எளிதில் தப்பித்துச்  சென்று விட முடியாது. வாழ்வின் சகல விதமான பரிணாமங்களும் பூதகரமாய் எழுந்தாடியது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்புதான் பிள்ளைகள் பயிலும் பள்ளியின் புதிய சீருடைகள், கல்வி தளவாடங்கள், என அனைத்தும்.  அலுவலகத்தில் இடைக்கால கடன் பெற்று வாங்கி தந்து விட்டு  வறுமையே  இனி பக்கம் வராதே, நான் கடந்த ஆண்டுகளைப்போல் இந்த கல்வியாண்டில் யாரிடமும் யாசகம் கேட்டு படியேற வில்லை என்னுடைய அலுவலக மாதாந்திர சேமிப்பில் கல்விக்கான தேவைகளை பூர்த்தி செய்து என் குழந்தைகளை ஆனந்த களிப்பில் ஆழ்த்தி விட்டேன். என அமைதியான அடர்ந்த வனத்தில்,  மேகம் தழுவி நிற்கும் முகட்டிலேறி உச்சஸ்தாயில்  கத்தி கூச்சலிட்டான் அதன் ஒலி கூட இன்னும் அந்த வனத்திலிருந்து மங்கிடவில்லை அதற்குள், பாவிகள் பணிமாற்றம் என்ற மாய வலையில் என்னை சிக்க வைத்து அரைகுறை அடி வாங்கிய சர்ப்பம் காற்றுக் குடிக்க  உடலில் மிச்சமிருக்கும் கொஞ்ச, நஞ்ச காற்றால் உஸ்.. உஸ்.. என சீறிக்கொண்டு  நெளிவதைப்போல் பாலுவின் நிலையுண்டானது.

பணி மாற்றம் என்ற மாய பிசாசால் புதிய ஊர், புதிய பள்ளி. அங்குள்ள பாடத்திட்டப்படி கல்வி தளவாடங்கள். வாங்க வேண்டும் இவைக்களை கடந்து  புதிய நகரத்தில் எங்கு சேர்ப்பது, யாரிடம் பொய்யாய் சிரிப்பது, அல்லது பாவமாய் பாவித்து யாசகம் கேட்பது.

தனியார் பள்ளி என்றால் அந்த பள்ளியின் கல்வி தந்தையின் சாதியை சார்ந்தவனாக இருக்க வேண்டும். இல்லயெனில் அவர் சார்ந்த மதத்தை சார்ந்தவனாகவாது இருக்க வேண்டும்.   இவை எதுவும் இல்லையென்றால் பாக்கிய லட்சிமியின் பங்காளியாகவாது இருக்க வேண்டும். இவைகளில் எது குறைந்தாலும் என்ன நிகலுமென்பது, அனுபவித்தவர்களுக்கே வெளிச்சம்.  எதுவும் இல்லையென்றாலென்ன? கடவுளின் பிள்ளைகளான விளிம்பு நிலையினர்களுக்கும், முதல் தலை முறை கல்வி பயில்கின்றவர்களுக்கும், இருக்கவே இருக்கு அரசு பள்ளி  அரசு பள்ளியென்றால்  நடுத்தர வர்கத்திற்க்கு இளக்காரமாய்தான் இருக்கும். அரசு பள்ளிகளின் நிலமையும் படு மோசமான நிலையில்தான் இயங்குகிறது.

தேர்வு விடுமுறையில்  பணியிட மாற்றம்  தந்திருந்தாலும்  அடுத்த பள்ளியில் சேர்ந்துக்கொள்வது எளிதானது.  ஆனால் கல்வி ஆண்டு முடிவடைந்து  புதிய கல்வி ஆண்டு துவங்கி  முதல் பாடத்திட்டம் சொல்லிக்கொடுக்கப்பட்டு மாதாந்திர தேர்வுக்கு செல்கின்ற நிலையில்  பணியிட மாற்றம்.

அரசு  ஊழியர்களை பழி வாங்க வேண்டுமென்றால்  அதிகாரிகள்  இப்படி நேரத்தில்தான் பழி எடுப்பார்கள். இது போன்று சிக்கள்களில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அலுவலகங்களில் பணியாற்றும் ஒரு சில கருங்காளிகள்.  அலுவலர் என்ன சொன்னாலும் மறுப்பு தெரிவிக்கமல், எதையும் செய்திட தயார் நிலையில் இருப்பார்கள். குறிப்பாக அவருக்கு அரிக்கும் நேரத்தில் சொரிந்து விடவோ, அதுவும் தாண்டி ஏற்பாடுகள், செய்து தருவதற்கும் தயங்குவதில்லை. முடியாத, அல்லது கிடைக்காத பட்சத்தில் தன் பின் புலத்தை காட்டுவதிலும், அவர் சிறு நீர் கழிப்பதற்குக்  கழிப்பறைக்கு செல்லக்கூட  விடாமல் தன் திரு வாயில்  சொறிந்துக் கொள்வதற்கு போட்டிப் போட்டு காத்திருக்கும் கருங்காளிகள் ஒரே இடத்தில் பணியாற்றிக்கொள்ளலாம்,  பதவி பெற்றாலும் அதே இடத்தில் பணி செய்துக்கொள்ளலாம், அரசு பணி வருமானம் போக வேறோரு தொழிலோ, வியாபாரமோ, செய்துக்கொண்டு, தன்னையும் தன் குடும்பத்தையும்  வளமாக வைத்துக்கொண்டு கடைசியில் ஓரே இடத்திலேயே செத்தும் போய்விடலாம்.