11 ஏப்., 2016

நெகிழ்ந்த தருணம்,,,,,,,

வெயில் நதி தகி, தகித்து பிரவாகமெடுத்து தார்ச்சாலையில் கரை புரண்டோட, வெயில் மட்டுமே குடித்து வளர்ந்த மனிதர்கள் குடி வாழும் எங்கள் நகரத்தில் நான் வெப்பத்தில் நனைவது புதிதல்ல. இருப்பினும் காலை ஏழு மணிக்கு இவ்வளவு அக்கினி திரவம் என்றும் உடல் மேவி அபிஷோகித்தது இல்லை. உலக வெப்ப மயமாதல் என்பதை கோடையின் முன் காலத்திலேயே, உணர்த் தியது.

சாரியாக பத்து மணிக்கு நெல்லை ம,தி,தா, கல்லுரியில் நான் இருக்க வேண் டும். அதன் வேகம் மனதை நெருட, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாக என்,எச்சில். காத்திருந்தேன்.

வருடத்தின் இறுதியில் கல்லூரியின் வேலை நாட்களில் வியாழக்கிழமை தோறும் நடந்தேறிக்கொண்டிருக்கும் இலக்கிய ஆய்வரங்கத்திற்கு என் கதை களம் என்ற தலைப்பில் பொழிவுரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன்.

ஏற்கனவே ஒன்பது கருத்தரங்கம் பல்வேறு ஆளுமைகளின் படைப்புகள் குறித்து ஆய்வும், அதை தொடர்ந்து படைப்பாளிகளை அழைத்து பொழிவுரை கள் நிகழுத்த வைத்துள்ளனர். நான் பத்தாவது வாரத்தின் இறுதியாக அழைக் கப் பட்டிருக்கிறேன்.

காத்திருக்கும் காலத்தில் கிடைத்த வண்டியிலேறி புறப்படுவது. நேரத்தை ஆளுமைப்படுத்தும் தந்திரம். அதன்படி கோவில்பட்டி பேருந்து வந்து நின்றது. ஏறி அமர்ந்தேன். பேருந்தின் சாளரம் வழியாக சூரியனின் புற ஊதா கதிர்கள் முகத்தில் ஊடுறிவியது.

சாளரத்தின் கண்ணாடியை கீழிறக்கிவிட்டு கண்களை மூடினேன். என் இலக் கிய பயணத்தின் கரடு முரடான பாதைகள், தமிழகத்தின் கிராம சாலைகள் போன்று சிதைந்து, சிதைந்து, சல்லிக் கற்களாய் உருண்டோடிக் கொண்டிரு ந்தது.

பள்ளி நாடகம், வீதி நாடகம், கோயில் திருவிழாக்களில் அரங்கேறிய மேடை நாடகம், பின்பு திரைப்படம், அதன் பின்பு எழுத்துக்குள் வந்தது. எப்படி? என மின்னல் கீற்று வெட்டி, மெலிதாய் குளிர் ததும்பும் காற்று கவரி வீசிட மழை துளிகள் மண்ணில் நீர் குண்டுகளாய் துளையிட, தாவரங்கள் காய்ந்த உடலில், உயிர் துளிகளை உள் வாங்கி, பச்சையமாய், மிளிர்ந்து, பல வண்ண பூக்கள் மலர்ந்து, ரம்மியமாய் காட்சியளிப்பதுப்போன்று, என் முப்பதாண்டு கால கலை இலக்கிய தேடல்கள், அதன் ரணங்கள் மலர்ந்தது.

அவ்வப்போது ம,தி,தா இந்துக் கல்லூரியின் பேராசிரியர் திரு, கண்ணா கருப்பையா, கை பேசியில் தொடர்பில் வந்துக்கொண்டே இருந்தார்.

சலவான் நாவலை இளம் முனைவர் பட்டத்திற்கு ஆய்வுக்கு எடுத்து அதை சிறப்பாக செய்திட முனைவர் செல்வி அ.பத்மாவதிக்கு ஆக்கமும், ஊக்க முமளித்து அந்த பெண் பட்டம் பெறுவதற்கும். தமிழ்க் கூறும் நல்லுலகில் நான் அடையாளபடுவதற்கும், தமிழ்த்தாயின் உண்மையான புதல்வன், கல்வி வியாபாரமயமான இந்த சூழலில் கல்வி தர்மம் என்ன என்பதை இவ்வுலகிற்கு சரியாக நிருபித்துக் காட்டிய நல்ல மனிதர், கல்வி தர்மர், தவமாய் தவமிருந்து, சரியான படைப்புக்கள், கவனிப்பாரற்று அல்லது திட்டமிட்டு ஒதுக்கப்படும் படைப்புக்களை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்திட தவம் களையும் காலம் என்ற ஆய்வு கட்டுரை தொகுப்பு தந்து அரும்பாடுபடும் அன்பு பேராசிரியர், டாக்டர் கண்ணா கருப்பைய்யா நான் எங்கு வருகிறேன் என்பதை கேட்டுக்கொண்டே இருந்து. என்னை அழைத்துச் செல்ல ஒரு நண்பரையும் ஏற்பாடு செய்தார்.

‘’அய்யா வணக்கம் நான் கருப்பையா சாரோட ஸ்டூடன்ஸ் பேசுறேன் எங்கே வாறிங்க?’’என தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசினார்.

நான் சங்கர் நகரை கடந்துக் கொண்டுயிருப்பதை பதிலுரைத்தேன்.

‘’அய்யா நீங்கள் எங்கே இறங்குவீர்கள்’’

‘’ம் ஜங்கசன்லெ’’

‘’வேண்டாம் அய்யா நான் வண்ணாரப்பேட்டையில் நிற்கிறேன், நீங்கள் அங்கே இறங்கிக்கொள்ளுங்கள்’’என்றார்.

வண்ணாரப்பேட்டை வந்ததும் மீண்டும் கைபேசி சினுங்கியது.

‘’அய்யாநான்ஸ்டாப்பில் நிற்கிறேன் ஜோல்னாபை போட்டிருப்பேன்’’என்றார்.

‘’நானும் ஜோல்னா பைதான் போட்டிருக்கிறேன்’’ என சொல்லிக்கொண்டே படிக்கட்டில் இறங்கிக் கொண்டே இருக்கும்போது சரியாக என் முன்வந்து விட்டார் ஒரு முப்பது வயது நபர்.

‘’அய்யா வணக்கம்’’ இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டோம். பின்பு சம்பிரதாயமாக அருகாமையில் உள்ள பழக்கடையில் நின்று குளுரூட்டப் பட்ட பானம் அருந்தினோம்.

அவர் தன் டூ வீலரை உயிர்பித்து அவர் வயதுக்கேற்றபடி வாகனத்தை செலுத் தினார்.

நான் அவரை தமிழ் துறையின் ஆய்வு மாணவர் என நினைத்தேன் ஆனால் அவர் அதிலிருந்து கடந்து நெல்லை தூய சேவியர் கல்லூரியின் தமிழ் பேராசிரியர், இளங்கோமணி, என சொல்லும் போது தடுமாறினேன்.

இவ்வளவு இளமையா, அப்போதுதான் உணந்தேன் தமிழ் மட்டும் இளமை கிடையாது அதை சுமப்பவர்களும் இளமையாகவை இருப்பார்கள் என்பதை.

பாரதி தமிழ் மெள்ள சாகும் என்றான். இல்லை இன்னும் உயிரோடு இருக்கி றது. என்ற கனத்த நம்பிக்கையளித்தது.

‘’கடந்த வாரம் வியாழக்கிழமை மதிதா இந்துக் கல்லூரியில் மீசை என்பது மயிர் என்ற தலைபில் குறும்படம் பற்றி பேசினேன்’’.என்றார்.

‘’அது ஆதவன் தீட்சன்யாவின் நாவல்லே’’எனக்கேட்டேன்.

‘’இல்ல அது மீசை என்பது வெறும் மயிர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீசை வளர்ப்புப் பற்றியும் தலித்துக்கள் பற்றியுமான நாவல், அதில் நான் கு வகையான மீசைகள் பற்றி கூறியிருப்பார். எஸ், ராமகிருஷ்ணன் ஐந்து வகையான மீசைகள் குறித்து எழுதியிருக்கிறார். நான் என் படத்தில் முப்பது வகை யான மீசைகள் பற்றியும் உலகில் சலூன் கடைகள் தோன்றிய காரணத் தையும்,குறுமபடத்தில் கூறியிருக்கிறேன்’’என்றார்.அப்போதுநான்டாவின்ஸி மீசை பற்றியும், ஹிட்லரின் மீசை பற்றியும். பிக்கோஷா ஒவியம் பற்றியும் உலகம்முழுவதும் மீசை வளர்ப்பவர்கள் சங்கம் வைத்திருந்தை பற்றிச் சொன் னேன். டூவீலர் டவுன் நுழைவு வாசளில் புகுந்தது.

வாசளின் வரவேற்பு வளைவு தொன்மத்தை உணர்த்தியது. விக்டோரியா மகாராணி இந்தியாவில் பம்பாய் வருகை புரிந்தமைக்கு, நாடு முழுவதும் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் மக்கள் உணவு, உடை, உறைவிடமின்றி பஞ்சம் பிழைக்க இடம் பெயர்ந்துக்கொண்டிருந்தனர். இது பதினோழாம் நூற்றாண்டில் மட்டும் நடக்கவில்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது.

ஒரு மக்கள் பிரதிநிதி தத்தம் தம் கடமையை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு செல்வதற்குக் கூட வரவேற்பு வளைவுகள், பிளக்ஸ் போர்டுகள், மக்களின் பசியை போக்கி விட்டு தானும், தன் குடும்பமும் வறுமையில் வாடி தற் கொலையில் மாண்டு போகும் லட்சோப, லட்ச விவசாயிகள் வியர்வை யில் உருவான பச்சை காய்கறிகளும், குலை தள்ளிய வாழை மரங்களும், மா, பலா, செவ்வாலை பழங்களும், பாக்கும், தேக்கு தோரணம்ங்களும், வழி நெடுகிலும், வரிசை கிரமாக நாள் தோறும் நடந்தேறிவரும் காட்சி இன்னும் விக்டோரியா மகாராணிகள், வாழ்ந்துக் கொண்டிருப்பது நிதர்சனமான உண்மை.

அதே நேரத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிடும் போது மக்கள் அக்கரைக்கும், இக்கரைக்கும் தொழில் சார்ந்தோ, வியாபாரம் செய்வதற்கோ, அல்லது, பல்வேறு காரணத்தால் இடம் பெயர்கிறபோது, ஆற்றில் அடித்து செல்லப்பட்டதை இன்னும் மறக்க முடியாது. அந்த மக்களின் நலன் கருதி விஜய நகர பேரரசின் நியமனம் பெற்று பாளையம் கோட்டையை மையமாகக்கொண்டு தண்டல் வசூல் செய்து விஜய நகர பேரரசுக்கு வரி கட்டி வந்த சுலோசனா முதலியார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட அரசிடம் கோரிக்கை வைக்க அதை அரசு நிராகரிக்க முதலியார் தன் சொந்த பணம், ஒரு லட்சம் போட்டு பாலத்தை கட்டி இன்றளவும் மக்கள் பயன் பாட்டுக்கு உதவியிருக்கும் நல்ல உள்ளங்களும் இருந்திருப்பதை உணரமுடிகிறது.

ஒரு பக்கம் மக்களின் பணம் சுரண்டப்படுகிறது, மறு பக்கம் தனி மனித முயற் சியால் நன்மை கிடைக்கிறது. இவை இரண்டுமே வரலாற்றின் தீராத பக்கங்களில் பதிவுருத்தப்பட்டிருக்கிறது.

டூவீலர் பேட்டையின் முனை பகுதியில் பரந்து விரிந்த அறிவு கோட்டை ம,தி,தா,இந்துக் கல்லூரி நுழைவு வாசளில் புகுந்தது.

இருமருங்கிலும், ஆலம், அரச, புங்கை, வேப்ப மரங்கள் அடர்த்தியான கருத்த நிழல் விரித்து வரவேற்க, மரக்கிலைகளில் அண்டிக்கிடந்த பறவைகள், அதன தன் மொழிகளில்உரைத்துக்கொண்டிருக்க,கல்லூரியின்மாணவ,மாணவிகள், உற்சாகமாய் அங்குமிங்குமாய் நின்றிருக்க, டூவீலர் தமிழ்த்துறையின் வாசலருகே நின்றது.

கரும்பலகையில் இலக்கிய ஆய்வரங்கம். நாள் 7.4.16, நேரம், 11.00, தலைமை, டாக்டர் ரத்தீர்குமார் இணை பேராசிரியர், வரவேற்புரை செல்வி கல்பணா, தமிழ் ஆய்வு மாணவி, பொழிவுரை திரு, பாண்டியக்கண்ணன்,நாவலாசிரியர் நன்றிவுரை, டாக்டர் கண்ணா கருப்பையா, இணை பேராசிரியர். என கரும் பலகையில் எழுதி வைத்திருந்தனர். வளாகம் முழுவதும் வண்ண வால் பேப்பர்களால் தோரணம் கட்டப்பட்டிருந்தது.

தமிழ்த்தாயின் மடியில் தவழ்வது போன்ற பிரமையோடு படிகட்டுகளில் ஏறி சென்றேன். அங்கு பாசாமிகு பேராசிரியர் கண்ணா கருப்பையா சம்பிரதாய மாக வரவேற்க்காமல், வாஞ்சையோடு வாரியணைத்தார். அப்போது அவரின் கண்களை உற்றுக் கவனித்தேன் எவ்வித பாசாங்கற்று ஒரு குழந்தையின் தன்மை அவரிடம் தென்பட்டது. அந் நொடியில் தீர்க்கதரிசி, தத்துவ ஞானி, ஓஷோ மெலிதாய் என்னை வருடிச்சென்றார்.

தமிழ்த்துறையின் தலைவர் டாக்டர் செல்லப்பா விடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தார். பரஸ்பரம் இருவரும் கை குலுக்கிக் கொண்டோம். இனிப்பு, காரம், காபி, வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இடையில் என்னைப்பற்றிய குறும் தகவல்களை கேட்டறிந்தார். பதிலுக்கு நான் தமிழ்த்துறையின் பொறுப்பாளர்களை கேட்டுத் தெரிந்துக்கொண்டேன். நன்றி சொல்ல.

பத்து நிமிடத்திற்குப்பின் பரந்து விரிந்த குளிரூட்டப்பட்ட கருத்தரங்க மைய த்திற்குள் அழைத்துச்செல்லப்பட்டேன். நவீன இருக்கையில் மாணவ, மாண விகள், அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்பாக அழங்கரிக்கப்பட்ட மேடையின் பின் புறம் சிகப்பு திரை சிலை, அதன் மத்தியில் புதுமை பித்தன் அரங்கம் என பதிவு. மாணவ மாணவிகள் மிக உற்சாகமாய் இருப்பது என்னை பதர வைத்தது. தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் இவர்கள் நம் பேச்சை கேட்பதற்கும், கேள்வி எழுப்ப வும் கூடி இருக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்பை நம்மால் பூர்த்திச்செய்திட முடியுமா? என்ற பதட்டம் என்னை கலங்கடித்தது.

தமிழ் ஆராய்ச்சி மாணவி கல்பணா இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட அணைவரையும் தயாராகும்படி அறிவித்தார்.

குறுந்தகடு மூலம் ‘’நீடாடும் கடலெடுத்த நிலமடந்தை’’ காற்றில் பரவியது. எல்லோரும் வாய் அசைத்தோம்.

பேராசிரியர் ரத்தீர்குமார் தலைமையுரை நிகழ்த்தி என்னைப்பற்றிய சிறு குறிப்புரையும், நிகழ்ச்சி பற்றியும் சிறப்புரையாற்றினார்.

கல்பணாதன்வரவேற்புரையில்தமிழ்த்தாயவும்,கடவுளையும்சேர்த்துஅனைவ ரையும் வரவேற்றார்.

பேராசிரியர் முத்துலஷ்மி அவர்கள் துவக்கவுரை ஆற்றினார். அதன் பின் தமிழ்த்துரையின் தலைவர் டாக்டர் செல்லப்பா எனக்கு சால்வை அணிவித்து கொளரவப்படுத்தியதும். பேச அழைத்தார் தலைவர்.

எனக்கு வழங்கப்பட்ட தலைப்பு என் கதை களம் நான் எழுதிய சலவான் மழைப்பாறை, நாவல்கள் பற்றியும், அதை எந்த சூழலில் என்னை எழுத தூண்டியது, அதை வெளிக்கொணர நான் பட்ட ரணங்கள், அதற்க்காக பட்ட அவமானங்கள், தடைகற்களை படி கற்களாக மாற்றி இரண்டு நாவல் களையும் மதிதா இந்து கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுவதற்க்கான தகுதியை அந்த நாவலில் வைக்க என் சமுகம் சார்ந்த தீண்டாமை கொடுமைகளால், புதைக்கப்பட்ட மனிதர்களையும், மறைக்கப்பட்ட வரலாறுகளையும், தாயின் கருவறையிலிருந்து ரத்தமும், பிசு,பிசுப்புமாய்பிரசவிக்கும்குழந்தைகளாகசலவான்,மழைப்பாறை,நாவல்கள் தந்தேன். அதன் விளைவு சராசரி எழுத்துகளாய் அமையாமல், எழுத்தை கீறினால் ரத்தம் வர வேண்டும் என்ற கவிபேரரசு, வைரமுத்து வரிகள். என் நாவலில் உறைந்துள்ளதை பேசும் பொருளாக எடுத்துக்கொண்டேன்.

எழுத்து இரு வைகளில் செயலாற்றுகிறது. ஒன்று உள்ளே இருந்து, மற்றொ ன்று வெளியே இருந்து, நான் உள்ளிருந்து எழுதுகிறேன். அதற்கு பயிற்சியாக அமைந்தது.

உலக இலக்கிய மேதைகள். லியோ டால்ஸ்டாய், தாஸ்தாவஸ்கி, ப்ராண் ஸ்வா காப்கா, சிங்கீஸ் ஐத் மாதவ், கார்க்கி,

இந்திய இலக்கிய மேதைகள் நீலகண்ட பறவையை தேடி, நாவலாசிரியர், வங்க எழுத்தாளர் டாகுர், மலையாள எழுத்தாழுமைகள், பஷிர், தகழி சிவ சங்கர பிள்ளை, அச்சுதானந்தன், கோட்டையம் புஸ்பநாத்,

தமிழில்கல்கி,சாண்டிலியன் கலைஞர், அகிலன், புதுமைபித்தன் ஜெயகாந்தன் சுந்தரராமசாமி ,ஜி, நாகராஜன், சுஜதா, பால குமாரன், தோப்பில் முகமது மீரான், எஸ் ராமகிருஷ்ணன், இன்னும் பட்டியல் நீளும் ஆனால் சில முக சுழிப்பை தவிர்க்கவே சுருக்கிக் கொள்கிறேன்.

இவர்களில் அணைவரும் புனைவு மேற்க்கொண்டாலும் அந்த எழுத்துக்களில் அவர்கள் யதார்த்தைத்தான் பதிவு செய்திருக்கிறார்கள். என்பதை என் களத்தி ற்கு பயிற்சியாக எடுத்துக்கொண்டதையும், எழுத்துக்கு வருவதற்க்கான சூழல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தேன்.

அது பள்ளிக்காலம் முதல் தெருக்கூத்து, மேடை நாடகம், திரைப்பட கனவு, அங்கு ஏற்ப்பட்ட ரணம், நான் சார்ந்த, சமுக மக்கள் பட்ட, அவமானங்கள், அவர்களின் உணவு, உடை, உறைவிடம் தொன்மை கால வாழ்க்கை அவர்க ளின் போராட்டம் இவைகளை எந்த மேடைகளிலோ, எந்த திரைபடத்திலும் சொல்ல முடியாது ஏன்யெனில் அது ஆண்டார்களின் களம். ஒரு விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவுருத்த அதுவும் கருப்பு பிரதியை வெளிக்கொணர நான் பட்ட ரணத்தை ரத்தமும் சதையுமாக மிக காத்திரமாக பதிவு செய்திட,இலக்கியத்தை தவிர வேறு எதுவாலும் முடியாது என கண்டறிந்து இலக்கியம் பக்கம் வந்தேன். என்பதை காத்திரமாய் பதிவு செய்தேன்.

பேராசிரியர் பெருந்தகைகளும், ஆராய்ச்சி மாணவ, மாணவிகளும் உறைந்த நிலையில் இருந்தனர். நான் அமைதியாக என் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன் அப்போதுதன் நான் பேசி முடித்துவிட்டேன் என்று தன்னிலை அடைந்து கண்களில் கண்ணீர் ததும்ப கரவொலி எழுப்பினார்கள். அப்போது தான் அதை நான் நெகிழ்ந்த தருணமாய் உணர்ந்தேன்.

எனக்குப் பின் பேராசிரியர் சுந்தரம் அனல் கற்றையாய் வார்த்தைகளை உரைத்தார். ஆய்வு மாணவன் இலக்கிய பிரதிகளை மிக கவனமாக, மிகவும் பொறுமையாக எழுத்தாளனின் உழைப்பை மதித்து அதன் உண்மையான பக்கங்களை நுண்ணறிந்து பொறுப்பாக ஆய்வுக் கட்டுரையை சமர்பிக்க வேண்டும். ஆய்வாளர்கள் எழுத்தாளரின் எழுத்துக்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்று சென்றுவிடுகிறார்கள். ஆனால் அந்த பிரதியை உருவாக்க எழுத்தாளன் படும் அவஸ்த்தை சொல்லி தீராது, அதனால் அவர்களுக்கும் பட்டம் வழங்கபடவேண்டும் என உண்மையின் பக்கமிருந்து மிக நேர்மையாக பதிவு செய்தார்.

இறுதியாக எனதருமை நண்பர் டாக்டர் கண்ணா கருப்பையா அவர்கள் கடந்த பத்து வாரமாக ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதை நடை முறைப்படுத்த அவர்பட்ட பாடுகளை குறிப்பிட்டு விட்டு, நான் தொண்ணூறு நிமிடங்கள் பேசியதை தொகுத்தும் அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கினார். அது என் வாழ்வின் நெகிழ்ந்த தர்ணம்.

கருத்துகள் இல்லை: