18 நவ., 2014

படைப்பு மனம்,,,,



                                    

நடை பயிற்சி முடிவடைந்து களைப்பார பூங்காவின் மையப்பகுதியில் உள்ள கல் இருக்கையில் கால்களை நீட்டி ஆசுவாசமடைந்தான் செந்தில்.

புளியமரஇலைகளில் படிந்த சூரிய கதிர்கள் தகதகவென மினு மினுத்து கரிசல் மண்ணில் கலந்தோடிக்கொண்டிருந்தது. அருகாமைவீட்டிலிருந்தசூலமங் கலம் சகோதிரிகளின் கந்த சஷ்ட்டி கவசம் ஒலித்துக்கொண்டிருந்தது.

‘’சஷ்ட்டியை நோக்க சரவண பவணா சிஷ்ட்டருக்கு உதவும் செந்தமிழ் வேலா, பாதம் இரண்டினில் பண்மனிச்சதங்கை கீதம் பாட கிங்கினியாட’’ என்று இளம் காற்றில் தவழ்ந்து வந்து செவி மேவி சாந்தம்மாக்க, முந்திய நாள் பெய்த மழை நீரில்காக்கைகள் சிறகு பரப்பி சோம்பல் முறிக்க, வடக்கு மூலையில் ஆண் மயில் தோகைவிரித்துசூரியகதிகளுக்கு இணையாக போட்டியிட்டு ஆடிக் கொண்டே அகவிபெண்மயிலைகவர பல விதங்களில் நடனமாடி தன் உயிர் நீரைஉமிழ்ந்தது. பெண்மயில் கெக்..கெக்..கெக்கென அகவிக் கொண்டே ஆண் மயில் உமிழ்ந்த உயிர் நீரை கொத்தி விழுங்கிவிட்டு பரந்துச்சென்றது.

செந்தில் எழுந்து நடக்காரம்பித்தான். அப்போது கைபேசி அவனுக்கு பிடித்த ராகத்தில்பாடியது.

செவியில் பொருத்தி ‘’வணக்கம் செந்தில்’’ என்றான்.

‘’வாழ்த்துக்கள் செந்தில்’’ என்றது மறுமுனை.

‘’என்ன காலையிலே வாழ்த்து சொல்றிங்க சார்?

‘’உங்க கவிதை பிரசுரம் ஆகியிருக்குல’’

‘’அப்படியா...?’’

‘’ஆமா அற்புதமான கவிதை’’

‘’நன்றி சார்’’

இருவருக்குமான உரையாடல் துண்டிப்பானது செந்திலின் மனதில் அந்த கவிதை எழுதிய சூழல் அதன் கருத்து மற்றும் அதை பிரசுரம் செய்ய எடுத்துக் கிட்ட முயற்சியைப்பற்றி அசைப்போட்டபடி நகரத்தின் மைய பகுதிக்கு வந்து பத்திரிக்கை மற்றும் இதழ்கள் விற்பனை செய்திடும் கடையில் நின்று அவன் கவிதை வந்திருக்கும் காலண்டு இதழ் வந்திருக்கா என பார்த்தான் மற்ற இதழ்கள் வரிசையாக தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால் அந்த இதழ் இல்லை மறுபடிபொறுமையாகப்பார்ததான்.இல்லைகடைக்குள்இருக்குமா,,,பார்த்தான் இல்லைஎதற்கும்கடைக்காரரிடமேகேட்போமேஎனஅவன்அறிவுக்குஇப்போது தான் தோன்றியது.

‘’அண்ணாச்சிஅந்த பொஸ்த்தகம் இருக்கா’’ ?

‘’இருக்கு ‘’என அப்போதுதான் வந்திருந்த புதிய கட்டை பிரித்து எடுத்துக் கொடுத்தார்.பெற்றுக்கொண்டுஅதன்முன்பின் அட்டைப்படங்களை பார்த்தான் அதில்உள்ளபடங்கள்தலைப்புச்செய்திகள்அவனுக்குமுக்கியமாகபடவில்லை  முதல்பக்கத்தைபுரட்டிப்பார்த்தான்.பொருளடக்கத்தில்உள்ளபெயர்பட்டியலை பார்த்தான்.முதலில் கட்டுரையின் தலைப்பும் அதை எழுதியவர்களின் பெயர்க ளும் இருந்தது. அதற்கடுத்து அயல்நாட்டு எழுத்தாளரின் நேர்காணல் பற்றிய விவரமும் இதற்கடுத்து தமிழின் மிக முக்கிய நாவல் பற்றிய மதிப்புரை அதை எழுதியவரின்பெயர்அடுத்துஇரண்டுசிறுகதைகள் தலைப்பு அதன் ஆசிரியரின் பெயர், அடுத்து பிரபல ஓவியரின் ஓவியம் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஆய் வறி ந்தவரின் பெயர், பின்பு உணவுபற்றிய பத்தி அதை பதிவுருத்திய எழுத்தாளர் பெயர், அடுத்துதான் அவன் எதிர்பார்த்த கவிதை பட்டியல்.

முதலில் மூன்று கவிதாயினிகளின் கவிதைகள். முதல் இரண்டு பெண்களின் உடலரசியல்சார்ந்தகவிதைகள்,அடுத்துகிராமத்து பண்பாட்டின் அடையாளமு ம் அதில் வாழ்ந்த மூதாதையர்கள் பற்றியஆங்கிலபேராசிரியகவிதாயினியின் கவிதையும், அதற்கடுத்து மிக முக்கிய தமிழ் கவிஞர்களின் கவிதைகள் ஒன்று அரசியல் கட்சியின் சின்னத்திற்கு பக்கத்தில் என தலைப்பிட்ட கவிதையும் மற்றொன்றுகுடும்பத்தில்இருப்பின்றிபின்னிரவில்திசையற்றுஅலைந்துதிரியும் பரிதாபத்திற்குரியகவிஞனின்இழந்தவாழ்வின்மீட்புக்குறித்தகவிதையும்,மூன்றா வது குடிக்கான நியாயம் கற்ப்பிக்கும் கவிதையும், அவர்களின் பெயர் பட்டியல் புகைபடமும் இவர்களோடு இறுதியாக செந்திலின் பெண்ணிய கவிதையும் அவனின் புகைப்படமும் இடம் பிடித்திருந்தது.

உடனே காகிதங்களை பட படவென புரட்டினான். காகிதங்கள் மின் விசிறியின் ஆழ்மையில் ஆட்ப்பட்ட மெலிதானவைகள் எப்படி படபடக்குமோ அதைப் போல் அவன் விரலிடுக்கில் படபடத்து நாற்பத்தியிராண்டாம் பக்கம் நிலை குத்தி நின்றது. கவிதை வரிகளை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் ஒளி வேகத்தில் படித்தான். பின்பு அக்கம் பக்கம் பார்த்தான் நடு சந்தை பகுதி யாக இருந்தாலும் காலை பொழுதென்பதால் மனித நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சுற்று வட்டார பகுதியில் அமைந்திருக்கும் கோயில்களியிருந்து பக்தி பாமாலைகள் ஒலி பெருக்கியின் மூலம் ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் காதலிக்கு முதன் முறையாக தட்டி தடுமாறி கொடுக்கும் முத்தத் தைப்போல் கவிதை மேனியில் பதித்தான் அச்சின் நெடி அவனை கிறங்கடித்து நிறுத்தியது.

‘’இருபது ரூபா’’ என்ற கடைகாரரின் குரல் கேட்டு திடுக்கிட்டு ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து தந்து மீதம் பெற்றுக்கொண்டு மீண்டும் பூங்காவிற்கு விரைந்துச்சென்று பழைய கல் இருக்கையில் அமர்ந்தான். அப்போது சூரியன் மேலேறிக்கொண்டிருந்தமையால் இளம் வெயில் அவன் மீது பரவியது. சுற்றும் முற்றும் பார்த்தான் வடக்கு மூலையில் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார் கள் நடுத்தர வயதுடையவர்கள்.அவனுக்கு அடுத்து கல் இருக்கையில் ஐம்பது வயதை நெருங்கும் என சொல்ல முடியாத நபர் கால் முட்டிக்களை மடக்கி அமர்ந்தப்படி ஆழ்ந்திருந்தார்.

செந்தில் கவிதையை முதலில் மனதுக்குள் படித்துப்பார்த்தான் அது அவனுக்கு திருப்தியாகதெரியவில்லை.அதனால்அவனுக்குமட்டும்கேட்குமளவுக்கு வாசித் தான். அருகில் இருப்பவர் மெள்ள கவினித்தார் உடனே உற்சாகம் கிளம்பி பலத்த குரலில் வாசித்தான். அருகாமையில் இருப்பவர் அசூசை யடை ந்தவராக திரும்பிக்கொண்டார். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ செந்திலும் புரிந்துக்கொண்டு வேறிடம் சென்று பார்த்தான்.

இரண்டு பெண்கள் தண்ணீர் குழாயில் பிளாஸ்ட்டிக் குடங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தனர்.அவர்கள்முன்புபோய்வீரதீர அசகாய செயலைப் பற்றி எடுத்துரைக்கலாம் என பார்த்தான் அவர்களில் ஒரு பெண் தன்குடும் பத் தின் நிலைப்பற்றியும் அதை நடத்தும் அவளது நிலைப்பற்றிபுலம்பிக் கொண்டி ருந்தாள்.

‘’ஏக்காஅண்ணேந்தான்நல்லாசம்பாதிக்கிதுலேகொத்தனாருக்குஇப்பஎம்புட்டு சம்பளம் பாதியே செலவு செஞ்சாலும் மிச்சம் எம்புட்டு மிஞ்சும்’’

‘’அடிபோடிஇவளேநெதம் அரநூறு சம்பளம் வாங்கிட்டு பூராத்தையும் குடிச்சி புட்டு மிச்ச மீதிக்கி கெளப்புக் கடயிலே தின்னுட்டு இருபதோ முப்பதோ சட்ட பைக்குள்ள இருக்கும் அதையும் பாவிபய குடுக்க மாட்டான் இதுல வாரத்துல ரெண்டு நா மூனு நாத்தான் வேலைக்கு போறது அதே வைச்சி வாரவட்டி கட்டு றதாவயித்தகழுவுறதா’’எனசொல்லிகண்கலங்கினாள்.

செந்தில்வடக்குமூலைக்குசென்றுநின்றான்அங்குபூப்பந்துவிளையாடிக்கொண்டிருந்தவர்கள். காட்டு கூச்சல் போட்டு விளையாடிக்கொண்டியிருந்தார்கள்.

அவர்கள் பாடுஅவர்களுக்குஇவன்பாடுஇவனுக்குபூங்காவைவிட்டு வெளியே றி அருகிலிருக்கும் தேனீர் விடுதிக்கு சென்று தேனீர் தயாரிப்பவரிடம் ‘’ஒரு டீ’’ என்றான்.

‘’சீனி கம்மியா போடாமையா?’’ என்றார்.

‘’நெறயா போடுங்க’’

அவர் அவனையும் அவன் அணிந்திருக்கும் நடை பயிற்சி உடையவும் ஆய் வறிந்துவிட்டு ‘’இவன் வாக்கீங்க் வந்தவன் இல்ல இவனுக்கு எப்படி வேணாளும் டீ போடலாமென’’எனமுடிவுசெய்துக்கொண்டு ‘’சார் ஒக்காருங்க போட்டு தாரேன் என்றுகூறினார்தேனீர்தாயாரிப்பவர்.

செந்தில்தேனீர்விடுதியின்உள்ளறையில்சென்றுஅமர்ந்தான்.புதியதாகஅமைக்கப்பட்டிருந்த விடுதியின் தரை தளம் செராமிக் டைல்சால் இழைக்கப்பட்டிருந் தது. அதன்மீது பாலிமர்இருக்கைகள்.மத்தியில் டீபாயில்அதன்மீது அலுமினிய ஆஸ்ட்ரே. ஆஸ்ட்ரே இருந்தும்அதனுள்சிகரெட் புகைப்பவர்கள் கங்குகளையோ, சிகரெட் துண்டுகளையோஇட்டதாகதெரியவில்லைஅனைத்து டுபாக்கோ துகள்களும் டைல்சீல்விரவிக்கிடந்தது.விடுதிக்காரர்வாடிக்கையாளர்களுக்காகஎல்லாவற்
றை யும் விட்டுக்கொடுத்தே விற்பணை செய்யவேண்டிய அபத்த நிலையை நினைக்கையில் பரிதாபமாக இருக்கிறது.

நம்இருப்பிடத்தில்இது போன்று செய்வோமா என்று வாடிக்கையாளர்கள் உணர்ந்தால்புதியவிடுதிஎப்போதும்புதியதாகவேஇருக்கும். செந்தில் இருக்கை க்கு எதிரே நான்கு நபர்கள் நாளிதழ் செய்தியை பிரித்து மேய்ந்துக் கொண் டிருக்க, அவர்களுக்கு அடுத்து இரண்டு நபர்கள் அறையின் வடக்கு மூலை மட்டத்தில் மேல் உள்ள அரசு இலவச காணொலி பெட்டியில் ‘’கண்டாங்கி, கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு கண்ணாலே கிருக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு’’ என ஒளி ஒலி பரப்பிக்கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டிருக்க, செந் தில் கொண்டுவந்திருக்கும் மாத இதழை டீ பாயில் மீது மற்ற நாளிதழ்களோடு சேர்த்து வைத்தான்.

படித்துக்கொண்டிருப்போர் டீ பாயிலிருக்கும் மற்ற நாளிதழ்களை எடுத்து எடுத்து படித்தார்கள். ஆனால் செந்தில் கொண்டுவந்து டீபாயிலில் வைத்த மாத இதழை யாரும் தொட்டுக்கூட பார்க்கவில்லை. அதே நேரத்தில் நாளித ழையும் யாரும் முழுமையாக படிக்கவில்லை பக்க பக்கமாய் நுணிபுல் மேய்ந் தார் கள்.

பொருமையிழந்தசெந்தில்எழுந்துச்சென்றுகாணொலியின் இயக்கத்தை துண்டி த்தான். யாரும் கவனிக்காமலா? இருப்பார்கள் சில கணங்களில் காரிய காரர்கள் முழித்திருக்க முழியை தோண்டுவது இப்படித்தான் வாடிக்கையாளர் களின் மனசு பழகிப்போனதுதான் மின் நிறுத்தம் என யூகித்துக்கொண்டனர்.

அறையில் அதிகாலை என்றாளும் வெப்பம் தேங்கி நின்று சுழன்றடித்தது. அறையின்அமைதியைசாதகமாக்கிக்கொண்டு மாதயிதழில் உள்ள கவிதை யை மெள்ள படித்தான் அப்போது எதிரே அமர்ந்திருக்கும் ஒரு நபர் எழுந்து வந்து அவனருகில் அமர்ந்தார். செந்தில் கவிதை வரிகளை விரல் வைத்து மேலும் சத்தமாக படித்தான். அருகில் இருப்பவர் பின்பகுதியில் இருக்கும் சாளரத்தின் கதவை நன்றாக திறந்து வைத்து தன் சட்டை காலரை தூக்கிவிட்டார். செந்தில் கவனித்துவிட்டு அருகில் வந்துஅமர்ந்தவர் கவிதை யின் ஈர்ப்பால் வந்தவர் இல்லையென.. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடந்து வாசித்துவிட்டு ‘’ ஆகா கவித.. கவித.. பிரமாதம், அற்புதம். என்று புகழாரம் சூட்டிக்கொண்டான். அதுஅவனுக்குகேவலமாக வோ,அதிகபட்சமா கவோ,தெரியவில்லை.எல்லோரும் அவனைகவனித்தனர். அதைபயன்படுத் திஅவன்வயதையெத்தவனிடம் ‘’அண்ணாச்சி ஒரு பிரமாதமான கவிதை வந்துருக்கு பாத்திங்களா?’’ என்றான் செந்தில்அவர்பதிலுக்கு ‘’அப்படியா?’’ எனவியப்போடுகேட்கவில்லை.தோல்வியில் துவண்டுவிடாமல் அருகில் இருப்பவரிடம் ‘’அண்ணே இது நா எழுதின கவித’’எனஇதழைதூக்கி காண்பித் தான். அவர் அதை பார்த்தார் அத்தா ட்சிக்கு அந்த இதழில் பிரசுரிக்கப்பட்ட புகை படத்தையும் காண்பித்தான். அதை பார்த்துவிட்டு ஒருவரிகூட படித்து பார்க்காமலயே‘’இது நீஎழுதியதா எவ்வளவு குடுத்தாங்க’’ எனறார். செந்தி லுக்குஏன் கேட்டோமென்றானது. உடனேஇதழை மடக்கிக்கொண்டு தேனீர் தயாரிப் பவரிடம் உரிய காசை செலுத்திவிட்டு விடுதி படியிறங்கியவன் திரும்பி வந்து மத்திய மின் யூக்கியை தூண்டி விட்டு விட்டு வெளியேறி னான்.அதைகவனித்த தேனீர் தயாரிப்பவரும், உரிமையாளரும் கையரு நிலை யில்.

பிரதானசாலைநெடுகிலும்சைக்கிள் மிதியோடு கவிதை வரிகளும், அதற்கான வெகுமதிகளும்சேர்ந்தே மிதிப்பட்டது. அப்போதுசெந்திலுக்குபழக்கமான எழுத் தாளர் சாலை ஓரத்தில் நடந்துக்கொண்டிருந்தார். அனேகமாக நடைபயிற்சி க்கு சென்று விட்டு மிகதாமதமாக வீடு திரும்பிக்கொண்டிருப்பதாக தெரிந்தது.

அவரருகில்தோளுரசிநின்றான்செந்தில்.அவர்சோடப்புட்டிகண்ணாடிவழியாக ஊடுறுவிப்பார்த்துவிட்டு படக்கென்று வேறு திசையில் திரும்பிக்கொண்டார். அதற்க்கான அர்த்தம் அவனுக்கு புரியாமல் தடுமாறினான் இருப்பினும் அவனே வழிந்து பேசத்துவங்கினான்.

‘வணக்கம்சார்’’

‘’ம்’’என தலையாட்டினார்.செந்தில் வெற்றி வேந்தனாய் மேலும் முன்னேறி னான்.

‘’சார் வாக்கிங்க் போயிட்டு வாறிங்களா?’’

‘’ஆமா’’

‘’ஒங்க கதையே படிச்சேன் சார்’’

‘’அப்படியா? எப்படி வந்துருக்கு’’ என உற்சாகமாய் கேட்டார்.

‘’பிரமாதம்சார்வயசானவங்கஎல்லாமே முடிஞ்சிப்போச்சின்னு நெனைக்குற வங்க ளுக்கு இன்னும் வாழ்க்கை மிச்சம் இருக்குன்னு சூட்சுமா சொல்லி இருங்கீங்க சார். சாகும் தருவாயில்க்கூட மண்ணைக்கிளறி ஒரு விதைய போட்டா அது விருச்சமாகி பூ பூத்து கனியாகி மரமாகி தோப்பாகும். அது உரு வாக நாம ஒரு தூண்டு கோலா இருந்தோம் என்பதை நினைக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும். அதுவும் சாகும் தருவாயில் இருக்கும் வயதா னவர் அதை செய்கின்ற போது மலர்ந்து நிற்கும் தாவரத்தில் அவரின் அடுத்த வாழ்வியல் துவங்கிவிட்டதாக உணர்கிறார். அங்க மரணம் மரணித்து விடுகிறது. வாழ்க்கை என்பது வாழும் காலத்தில் நாம் செய்யும் செயலிருந்து துவங்கி அடுத்த தலை முறைக்கும் நீடிக்கும். அது பிறர்க்கு செய்யும் நன்மை, தீமைகளைப்பொறுத்து. மனித வளர்ச்சியானலும் சரி, இயற்கைக்கு செய்யும் காரியமானலும் சரி மனித வாழ்க்கையில் வாழ்ந்தோம்,செத்தோம் என்று இருக்காமல் இந்த பிரபஞ்சத்தில் ஏதோஒன்றைஅடையாளப்படுத்தி விட்டு போகவேண்டும்அப்பத்தான்மனிதன் வாழ்க்கை முழுமையடைகிறது என்பதை காத்திரமாககதையில்சொல்லிஇருக்கிங்க சார்’’ வாழ்த்துக்கள் சார்’’என்றான் செந்தில்.

அந்த எழுத்தாளர்அவன்மீதுகோபத்தில்இருந்தாலும் ஆரத்தழுவி முத்திட்டார். ‘’ நன்றி செந்தில் நன்றி இந்த கதெ வார இதழில் வந்து ஒரு வாரமாச்சி யாரும் இதுவரபேசினதெஇல்ல ஆனா நீங்க கதையே ஆழ்ந்து உள் வாங்கி மதிப்புரை தந்துட்டிங்க நன்றி செந்தில் நன்றி’’என்று கண்கலங்கினார்.

‘’இதுக்கெல்லாம்போய்கண்கலங்கிகிட்டுஒருகலைஞன்ஒருகலையை உருவாக்கி விட்டு அந்த கலையின் தன்மைப்பற்றி மற்றவர்கள் என்ன சொல் வார்கள்,எப்படிசொல்வார்கள். எனஏங்கிக்கொண்டிருக்கும் கலைஞனின் மன நிலைஇன்னோரு கலைஞனுக்குதான் சார் தெரியும். படிச்சத பகிர்ந்து கொள் வதும் படித்ததில் உள்ளகுறைநிறைகளைவிவாதிப்பதிலும் தான்சார்கலைஞர் களின் உண்மையான முகம் இருக்கு அதெ சொல்றதுலே எனக்குஎந்த தடையு ம் கிடையாது சார். ஒங்க கதைய போன வாரம் படிச்சிட்டு போன்போட்டேன் நீங்கஎடுக்கலே ...’’என இழுத்தான்.

‘’ஏன் எடுக்கனும் போன மாநாட்டுக்கு பாத்தது இப்பத்தான் பாக்குறேன் ஆறு மாசம்ஆச்சிஒருபோன்போடனும்ன்னுதோணல இப்ப மட்டும் போட்டா எடுப்பேனா?என்னாசொல்லிமாவட்டமாநாடுக்குகூட்டிக்கிட்டுபோனிஙக’’என்றுகேள்வி யாய் அவனை பார்த்தார் எழுத்தாளர்.

செந்தில் புருவம் சுருக்கி அவர் கேள்விக்கான விடை தேடினான். விடை அவரி டமே இருந்தது. அதை கேட்டு தன் தவறை உணர்ந்தான். ஆனாலும் அது அவன் செய்த தப்பு கிடையாது ஒரு அமைப்பின் கூட்டு தப்பு இருப்பினும் விளக்க மளிக்க வேண்டியது அவனின் கடமை பூதகரமாய் உருவெடுத்தது.

‘’சார் ஒங்க கோபம் நாயம்தான் ஆனா நான் மட்டும் முடிவெடுக்குறே விசயம் கிடையாது சார்’’

‘’நீங்கதானே சொன்னது’’

‘’மண்ணிக்கனும் சார் எங்க அமைப்புலே இருக்குறவங்கதான் மாநில மாநாடுக்கு பிரதிநிதியா போக முடியும் சார்’’

‘’நான் அதே சொல்லலே செந்தில் நம்ம மாவட்ட எழுத்தாளர்கள் புகைபடமும் அவர்களைப்பற்றிய விபரமும் மாநில மாநாடு வாசளில் கண்காட்சியா வைக்க போறேம் அதுல ஓங்களைப்பற்றியும் வைக்க போகிறோம்ன்னு சொன்னிங்களே அதுஎன்னாச்சி?கடேசிவரைக்கும் போட்டா வாங்க வரலே நான் ஒங்க மாநாடு வாசலுக்கு வந்து கடேசி நேரத்துலே கூட வந்து வாங்கினாலும் வாங்கு வீங்க ன்னு காத்திருந்தேன் ஆனா நீங்களோ அல்லது ஒங்களோட வந்து டொனேசன் வாங்குனவங்களோ யாரும் வரலகண்காட் சியை போய்பார்த்துட்டுஅழுதுட்டேன் தெரியுமா’’ என சொல்லிக்கொண்டே அழுது விட்டார்.

‘’தெரிஞ்சோ தெரியாமையோ ஒங்க மன உளச்சலுக்கு ஆளாகிட்டேன் மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் நான் சக எழுத்தாளர் அமைப்புக்குள்ள வரணும் அவரைப்பற்றி இந்த நாடே அறியனும்ன்னுதான் ஒங்ககிட்ட சொன் னேன் ஆனா அமைப்போட முடிவு என்பது பல அடுக்குகளில் இருந்து முடிவு செய்யப்பட்டு அதன்படி செயல்படுவது அதனாலதான் அமைப்பை சார்ந்த வர்கள் பற்றிய விபரம் மட்டும் கண்காட்சியில் இடம் பெற்றது.

‘’அப்பஒங்கஅமைப்புக்குள்ளஇருக்கிறவங்ககிட்டமட்டும்வசூல்செய்யவேண்டி யதுதானே ஏன் எங்ககிட்ட வசூல் செய்றீங்க’’

இதற்கு அவனிடம் பதில் இல்லை இருவருக்கும் இடையில் மெளனம் நிறைந்து வளிந்தது.

மெளனஇடைவெளியில்செந்திலின் மனதுக்குள் ‘’நாம நம் கவிதைப்பற்றி பேசுவ தற்கு நல்ல நட்பு கிடைத்து விட்டதேன்னு நெனச்சி வாயகுடுத்தா பழைய பாக்கி கழுத்தை நெறிக்கிதே இதுக்குதான் எதுக்கும் முன்னாடி நிக்க கூடாது நின்றா பதில் சொல்லித்தான் ஆகனும் இது என்ன நம்முடைய தப்பா அமைப்போட தப்பு நாம் எப்படி பொறுப்பாக முடியும். சாதாரண மனிதனாக இருந்தால் பதில் சொல்லி சமாதானபடுத்தமுடியும் ஒரு சிந்தனையாளனை, எழுத்தாளனை எப்படி சமாதானபடுத்த முடியும். அவன் உணர்ச்சி பிளம்பான வன்,எதையும்விமர்சனத்துக்குஉட்படுத்தியேபழகியவன்அவனை ஏமாற்ற முடியு மா? அல்லது வெற்று சொற்களால் அலங்கரிக்க முடியுமா?’’என மனதுக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.

அப்போது எழுத்தாளரின் வீடு அருகில் பேசிக்கொண்டே வந்துவிட்டார்கள். எழுத்தாளர் செந்திலுக்கு விடைகொடுக்கும் விதமாக சிரித்தப்படி வணக்கம் வைத்தார்.

செந்தில் சூழ்நிலை கைதியாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். பெடலின் அழுத்ததில் சைக்கிள் சக்கரம் சுழல்வதைப்போன்று அவன் மனதுக்குள் ‘’சே நம்மகவிதையைபடிக்க கொடுக்கலாம் பாத்தா கதெ கந்தலாகி போனதே’’ என்று மனம் புழுங்கியபடி சைக்கிள் மிதியை வேகப்படுத்தினான் செந்தில்.

மத்திய சாலைக்கு வந்த செந்தில் நடந்தப்படி கைபேசியை உயிர்ப்பித்து இரண்டோரு நண்பர்களுக்கு வழிய பேசி உற்சாகத்தை உடலில் பூசிக்கொண்டு வீடு போய் சேர்ந்தான். வீட்டில் உள்ளவர்கள் படிக்கட்டும் என்று மைய அறையில் உள்ள மெத்தை இருக்கையில் இதழை விரித்து வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்று நீராடிவிட்டு வெளியே வந்தான். அவன் எதிர் பார்ப்புபடி அவன் மனைவி படித்துக்கொண்டிருந்தாள்.

‘’என்ன எப்படி இருக்கு’’என்றான்.

‘’இருக்கு’’என்றாள்.

‘’அய்யா தெறமே எப்படி’’

‘’ம் தெறமையே சம்பாதிக்கிறதுலே காட்டுங்க இது உப்பு மெளகுக்கு கூட ஆகாது’’என்றாள்.

அவ்வளவுதான் காலை உணவையும், நண்பகள் உணவையும் துறந்துவிட்டு வீட்டிலிருந்துவெளியேறிஅலுவலகத்துக்குதன்வாகனத்தில்பயணித்தான்.