27 மே, 2013

வெக்கை,,,,,,,,,



வழக்கமாய் தேனீரருந்தும் விடுதியிலிருந்து தேனீர் வாங்கி வந்து மூடியிருந்த கடை வாயிலமர்ந்து அருந்தினேன்.

நாற்பத்தைந்தை கடந்திருக்கும் மாடசாமி என்னருகே அமர்ந்து தேனீ ரை ஒரே இழுப்பில் காலிசெய்துக் கொண்டிருந்தான்.

பகலெல்லாம்வெக்கையைஉண்டுசெறிக்கமுடியாமல்சிறிதுசிறிதா ய்  உமிழ்ந்து கொண்டு இருந்ததது. காலை பொழுது,

என்னருகே இருந்தும், என்னைஅவனுக்குதெரியவில்லயா? அல்லது தேவையற்று போனேனா? 
வெக்கையின் தகதகிப்பில் கூட சூடான திரவத்தை எப்படி ஒரே இழுப் பில்காலிசெய்தான்என்பதுதெரியவில்லை.கூடவே செய்யது பீடியை யும் பற்றவைத்து மேலும் புடமேற்றிக் கொண்டான்.

விரல் நடுங்க புகைந்துக் கொண்டிருந்தது. பீடி, அலுமினியம் பூசிய தலைமயிர்கற்றைகள் முன் பற்களற்ற பொக்குவாய், கை கால்கள் சூம்பியநிலையில்முகம்இன்பமேகண்டிராத அல்லது அனுபவிதிராத முகமாய் மாறி போயிருந்தது.

இருபது வருடங்களுக்கு முன் மூன்று புண்ணாக்கு மூடைகளை ஒரே ஆளாய் சுமந்து சென்று அட்டில் போடுபவன், நான்கு பேர் இயக்ககூடிய எண்ணெய் வித்து இயந்திரத்தை தனியாளாக நின்று இயக்கி முதலாளிக்கு லாபம் ஈட்டி தந்தவன், இன்று எழுபது வயது கடந்து இளமையில் முதுமையடைந்தவனாய் இருந்தான்.

படிக்கும் காலத்தில் தெருவில் நடக்கு கோயில் திருவிழாவில், நாடகம் போட நண்பர்களாய் சேரும்போது, தனது வேலைபார்க்கும் ஆயில் மில்லில் உள்ள களத்தில் ஒத்திகை பார்க்க இடமளித்து, அன்றைய திட,திரவ வாயு செலவுகளை தானே ஏற்று செய்பவன் அந்த செலவை ஈடுகட்ட அட்டில் போடும் மூடைகளில் ஒன்றோ இரண்டையோ ஆட்டையை போட்டு, அடிமாட்டு விலைக்கு விற்று, நாடகத்துக்கு செலவளித்தவன்தான் இந்த மாடசாமி.


அப்படிப்பட்ட மாடசாமி என்னருகே இருந்தும் பேசவில்யோ என்ற ஏக்கம் என்னுள் பிரவாகமெடுத்து ஓடியது. அவன் பேசவில்லை யென்றால்யென்ன நாம் பேசுவோமே என நினைத்தாலும் நம் சமூகத் தால் நம் மூளையில்சலவை செய்யப்பட்ட பொதுபுத்தி தடுத்து சரா சரியாய் என்னையாக்கியது.

அவன் செய்தது என்ன என்பது அருகிலிருந்து நான் பார்க்கவில்லை வெறும் செவிவழிச் செய்திகள்தான்.

அவன்ஏஜெண்டாக வேலைபார்த்த மில்லில், மதிய உணவு கொண்டு வந்த தனது மனைவியும் அவன் பெண்பிள்ளையும், உணவுக் காக அமரும் போதும் மில்லின் முதலாளி அறுபதோ! அதை கடந்த வயதுடையவரோ வந்து மாடசாமியை வேறு வேலை சொல்லி வெளியே அனுப்பிவிட்டு அவன் மனைவியை புணருவதற்கு முயற் சித்தார். அதை ஜன்னல் வழியாக பார்த்தவன்பாணிபேரளை திறக்கும்  ராடைக் கொண்டு எறிந்து அவரை கொன்று விட்டதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

மற்றொரு தரப்பு அவர் கொலையானதும் அவர் அவளோடு இருந்த தைப் பார்த்ததும் உண்மைதான்.ஆனால் அவருக்கும் மாடசாமி மனைவி இருபது வயதுடையவளுக்கும் தொடர்பு உண்டா என்பது தெரியாது என்றது.

பிரிதொரு தரப்பு. கொலை நடந்தது உண்மை ஆனால் அவன் பார்த்த காட்சி என்னமோ உண்மை அதனால் அவன் முன் கோபம் பட்டுவிட்டான். 
நடந்தது என்ன என்பது மாடசாமியின் மனைவி கூறியது.

என் கணவர் வெளியே போன பின் முதலாளி,,,,,,ஆம் அவர் எனக்கு தந்தை போன்றவர் என்னிடமும் என் மகளிடம் பேசிக்கொண்டே புண்ணாக்கு மூடையை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது என் மகள் அட்டில் போட்ட மூடைகள் மீது ஏறி வினையாட துவங்கினாள். நானும் சத்தம்போட்டு அரற்றினேன். ஆனால் ஒரு மூடை அவள் மீது சரிய அதை நான் போய் தாங்க என் மீது அடுத்தடுத்த மூடைகள் விழுந்து என்னை அமுக்க நான் கால்களை உதறி உயிருக்கு போராடினேன்அப்போதுமுதலாளி எனக்கு மேலாக அவர் கால்களை  அகற்றி நின்று மூட்டைகளை தூக்கி அப்புறப்படுத்தினார். மூடைகள் அகற்றி விட்டு அவர் விலகுவதற்குகுள் என் கணவர் வந்துவிட்டார். அப்போது அங்கு உள்ள சூழ்நிலை அவரை சந்தேகப்பட வைத்து கொலையாளி ஆக்கியது.

மாடசாமியின் வாக்குமூலம் ஆமாங்க நான் பாக்கும் போது அந்த ஆளு என் பொஞ்சாதி மீது கால்களை அகற்றி நின்னாரு அனேகமா அது ஒன்றோ இரண்டோ முறைக்கு அப்புறம் அவரு எந்திரிக்க முயற்சிக்கும் போதும் நான் பாத்துட்டேன். என் புள்ள பக்கத்துல நின்னு அழுதுகிட்டு இருக்கு, அவெ பாவாட தொடைக்கு மேலறி கிடக்கு முகமெல்லாம் வேர்த்து ஒழுகியபடி இருந்துச்சி அந்த ஆளுக் கும் வேர்த்து இருந்தது. அதாங்க நா அவரக் கொல்ல வேண்டியதா போச்சி.

கொலையுண்டவளின் மகன் வாக்குமூலமாக: ”வணக்கம் நாங்க கௌரவமான குடும்பத்த சேர்ந்தவங்க, எங்க தாத்தா, பெரியப்ப, சித்தப்பா எல்லாம் கூட்டா சேர்ந்து பிஸ்னஸ் பண்ணுரவங்க. எங்களுக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு.எங்கப்பா அந்தபுள்ளைய காப்பாற்ற போயி அநியாயமா கொலையாகிப்போயிட்டாரு, அவர் செத்ததுகூட கவலையா தெரியலே ஆனா அவர் மேல எழுந்திரு க்கும் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரு ரொம்ப கன்னியமானவரு. வேணும்ன்னா மற்ற வேலைக் காரங்க கிட்டே கேட்டுப் பாருங்க.அவென் ஏற்கனவே எங்க மில்லு லே  நெறைய திருடி இருக்கான் நாங்க கண்டித்தாலும் எங்கப்பா அவன ஒன்னும் சொல்லமாட்டாரு.அப்படிபட்டவர கொல்ல எப்படித் தான் மனசு வந்துச்சோ”

நீதிமன்றம், அதன் தர்மமும், சட்டமும் சரியாக விசாரித்சாரித்ததா இல்லையா என்பது தெரியாது, ஆனால் எது உண்மை என்று எதுவும் தெரியாது இவையெல்லாம், செவிவழிச் செயதியை ஒட்டி அடுக்கி கொண்டவை.அப்ப என்ன நடந்தது?

அவன் இப்போது என்னிடமிருந்து எழுந்து பிரதான சாலைக்கு சென்று, நின்றான்.சாத்தூர் பஸ் வந்தது ஏறி சென்றுவிட்டான். அவன் சென்றுவிட்டாலும் அவன் நினைவலைகள் அவனை பற்றி தெரிந்து கொள்ள தூண்டியது.

உடனடியாக, ஏதாவது செய்தாகவேண்டும் என்ன செய்ய என தத்தளித்தபோது எழுதி விடுவோமா என தோன்றியது, அதை தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்.சரி அப்படி எழுத வேண்டு மென்றால் நமக்கு அவனை பற்றி முழுமையாக என்ன தெரியும்?

ஏற்கனவே நாம் கேள்விப்பட்ட அரசல் புரசலான விஷயங்களை வைத்து சிறுகதையாகவோ, குறுங்கதையாகவோ, பெரும்கதை யாக வோ எழுதலாமே? 
எப்படிவேனாலும் வசதிப்படி எழுதிக் கொள்ளலாம் ஆனால் உண்மை இருக்குமா, ஒரு கவிஞன் சொன்னதுபோன்று, எழுத்தை கீறினால் ரத்தம் வருமா? உயிரோட்டமாய் இருக்குமா? பேசாமல் அவனை சார்ந்தவர்களிடம் விசாரிப்போமே.

விசாரித்தால் உண்மைதெரியுமா?எதில்தான்உண்மையான உண்மை  இருக்கிறது.அகிரோகுரோசோவாவின்"ராஷோமன்,"திரைப்படத்தில் நடக்கும் கொலைக்கு யார், யாரோ சாட்சி சொல்கிறார்கள் இறுதி யில் மனச்சாட்சியே தீர்ப்பாகிறது.

கொலையாளி தண்டனையிலிருந்து தப்பிக்க பல காரணங்களும், சில நியாயங்களும் வைத்திருப்பான், கொலையுண்டவனும், தன் பக்கம் பல பியாயங்களை வைத்திருப்பான், ஆனால் அவன் வந்து கூண்டிலேறி சாட்சி சொல்லமுடியுமா காவல்துறையும், நீதித்துறை யும், சரியான உண்மையான நியாயத்தை செய்கிறதா .இதில் நடந்தது நடந்ததுதான் இதில் நதிமூலம் ரிசிமூலம் பார்த்து என்ன செய்ய, செத்தவனுக்கு உயிர் போச்சி. சாகாடித்தவனுக்கு வாழ்க்கை போச்சி. . அப்புட்டுதான்.

அதனால் யாரிடமும் உண்மை இருக்காது. அவரவர் பார்வையில் ஒரு சம்பவத்தை கற்பனை செய்து வைத்திருப்பார்கள். சரி காவல் துறையில்முதல்குற்றபத்திரிக்கைபதிவுசெய்துவைத்திருப்பார்களே  அதை வாங்கி பார்க்கலாமாயென்றால நாம் யார் நமக்கு எப்படி தருவார்கள். அப்படியே தந்தாலும் அதில் காவல்துறையினர் வசதிக் கேற்பதானே பதிந்திருப்பார்கள். சரி நீதிமன்றத்திற்கு சென்று விசார ணை அதனை தொடர்ந்து வழங்கிய தீர்ப்பின் நகல் கிடைத்தால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமே,

அதுஎப்படிகிடைக்கும்ஏன்கிடைக்காதுதுணைக்குகாந்தியைவைத்துக் கொண்டால், தீர்ப்பு நகலென்ன, ராணுவரகசியத்தையே,விலைக்கு வாங்கமுடியும். 
சரி அதையெல்லாம் வாங்கி என்ன செய்ய? கதை எழுதலாமே சரி கதை எழுதிவிட்டால் என்னவாகும். ஒன்றும் ஆகப்போவதில்லை இப்படி நினைத்தால் இன்று வரலாறுகளும்,

பெரும் பெரும் காவியங்கள் எல்லாம் நமக்கு கிடைத்து இருக்குமா?

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட கூடாது. அதுவேறுஇதுவேறு .அவன்என்ன இட்லரா,முசோலினியா, அல்லது,  அலெக்சாண்டரா, நெப்போஸீயனா, அவனை பற்றி எழுத, இப்படித் தான் எல்லா எழுத்தாளர்களும், குட்டையை சமுத்திரமென்றும், கரடை கண்டங்களென்றும் தனது கற்பனா புரவியை ஓடவிட்டு மொழியாளுகையால் ஒப்பனை செய்து அதை பலபிரதிளாக்கி, அதற்கு சில எதிர்ப்புகளையும், பல பாராட்டுகளையும் பெற்று, இறுதியில் அமரத்துவம் பொருந்திய எழுத்தாளனாய் தனக்கு தானே மகுடம் சூட்டிக் கொண்டு ராவணனையும் மிஞ்சிய தலைகளுடன் வலம் வருகிறார்கள். முதலில் ராவணனுக்கே பத்துதலை கிடை யாது அது வேறு விஷயம்.

சரி நம்ம கதைக்கு வருவோம். அவன் போயிட்டான். ஆனால் அவன் பரப்பிச் சென்ற பழைய நெடி இன்னும் என்னை வருடிக் கொண்டே இருக்கிறது. யாரிடம் சொல்லித் தீர்ப்பது. எங்கே சென்று குமட்டளை வாந்தியெடுப்பது. ஒன்றும் முடியாமல் புள்ளதாச்சியை போல் அங்கமிஙகும் நகர்ந்தோ ஊர்ந்து கொண்டோ இருக்கிறேன். அதை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும் எப்படி. . . . . . . ?

1 கருத்து:

vimalanperali சொன்னது…

நம் மண்ணின் உலராத அடையாளமே கதையின் தலைப்பாய்/வாழ்த்துக்கள்.