28 ஏப்., 2013

கண்கலவி,,,,,,

பழைய பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகளும் ஒரு சில சிற்றுந்துகளும் உள்ளே வரவும் வெளியே செல்லவுமாக இருந்தன.
தனியார்பேருந்துகளில்பெருவிரல்ஊன்றஇடமின்றிஇருந்தும்மேலும்மனிதஉயிர்களை குப்பைக் கூளங்களைப் போல் பரத்திப்போடுவதற்கான முயற்சிகளில் இருந்தனர் நடத்துனர்கள். அதற்கு பயணிகளும் சலிப்பின்றிதத்தம்ஊர்போய்சேருவதற்கான முயற்சிகளில் இருந்தனர்.
மயங்கிய மாலை வேலையானாலும் காலையில் எப்படி பரபரப்பாக பஸ்ஸிலேறி செல்ல வேண்டிய இடங்களுக்கு இடம் பெயர்ந்தார்களோ அதே வேகம் அசுர முயற்சியோடு வீடு செல்லும் போதும் குறைவின்றி செயலாற்றினார்கள்,ஒருவரோடு ஒருவர் முண்டியடித்து ஏறிடும் போது உடல் வாடை ஒருவரொருவர் நாசியிலேறி உதிர்ந்தது.
காலையில்உடைதெளித்துக்கொண்டவாசனைதிரவியங்கள்,மாலையில்நறுமணங்கலந்த வியர் வை நெடிகலந்த மயக்க நிலையை உருவாக்கியது.பெண்களின் கூந்தலிருந்து  காய்ந்து சருகான மலரின் மணம் கிரக்கத்தைத்தந்து வீழ்த்திக்கொண்டிருந்தது.
செல்ல வேண்டிய ஊர்களுக்கான அரசுப்பேருந்துகள் நிலையத்திற்குள் வந்திருந்தது அவை களில் ஏறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் அதற்குப்பதிலாக அவர்களின் உடமைகளை ஜன்னல்வழியாகபோட்டுவிட்டுவெளியேநின்றுவேடிக்கைபார்த்தனர்இளைஞர்கள்.இவர்களுக்கு  சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என வயதானவர்களும் இளைஞிகளும்/
முறையாக பேருந்தின் படிக்கட்டு வழியாக ஏறியவர்களுக்கு பேருந்தில் அமர்வதற்கு இடமில்லை.பேருந்து நிலைய சாலையோரத்துவியாபாரிகள்கிடைத்தவரைலாபம்தான் என்ற இலக்கோடு பண்டங்கள் மீது வைத்த விலையை தளர்த்திக்கொண்டு விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
நின்று கொண்டிருக்கும் பேருந்துக்குள் தைல வியாபாரி,பழைய புத்தகங்களை மறு விலைக்கு விற்கும்பையன்,நாட்டின்வரைபடங்கள்விற்கும்முதியவர்கடலை, வெள்ளரிக் காய், தண்ணீர் பாக்கெட் அண்ணாச்சிப்பழம் விற்கும் நடுத்தர வாதிகள்தனதுபொருட் களை பயணிகளிடம் தள்ளிவிட அவரவர் பாணியில் பெருங்குரலெடுத்தும் ராகம்,லயம் மாறாத வகையிலும் இயங்கினர்.
யாரோஒருஅலுவலரிடம் வாங்கிய முத்திரையுடன்கூடியகையொப்பமிட்டசான்றிதழுக்கு பாலிதீன்  உறையிட்டு நான்கைந்துபிரதிகளைகையில்வைத்திருப்பவர்.யாரும் கேட்காத நிலையிலும் விரும்பாதவர்களாக இருந்தாலும் அவரவர் மடியில் போட்டபடி சென்று திரும்பிவந்துகொண்டிருந்தாள்பதிமூன்றுவயதுநூதனப்பெண்.ஜன்னலுக்குவெளியே  கையை தொங்கப் போட்டு இருப்பவர்களை சுரண்டி பிச்சை கேட்கும் சிறுமி. தனது இடுப்பில் மூன்றோ நான்கோ வயதுடைய பையனை வைத்துக்கொண்டு வயிற்றைத் தடவிக் காட்டும் மாய் மால வித்தைக்காரர்,ஓட்டுனர் வாகனத்தை உயிர்ப்பித்து இஞ்சி னை ஓட வைத்துக் கொண்டு முன்னும்,பின்னும் நகர்த்தி வித்தைகள் செய்தும்நடத்துனர் யாரையும் தப்பிக்க விடாமல் டிக்கெட்டுகளை கொடுத்து தக்கவைத்துக்கொல்வதுமாக இருந்தார்.
நிலைய தேனீர் கடைகளிலும் பயணிகள் நிழற்க்கூரை அடியிலும்மக்கள்கூட்டம் வழிந்த படி இருந்தனர்.நான் பேருந்து நிலைய புத்தக்கடைக்குள் அந்தமாதசிறுபத்திரிக்கை வந்திரு க்கிறதா என விசாரித்தேன்.புத்தக விற்பனையாளர் புத்தக செல்பிலிருந்த பல புத்தகங்களை புலனரிந்து விட்டு உதடு பிதுக்கினார்.
“என்னாச்சி வரலயா”?
“இன்னைக்கி வர்ரதுதான்,என்னான்னு தெரியல,நைட் வந்தாலும் வரும்.என்றார் கடைக்காரர். நான் எனது இரு சக்கர வாகனத்தை உயிரூட்டிப் புறப்பட்டேன்.
ரொம்பவும் நெருக்கியது.வீட்டிற்கும் நிலையத்திற்கும் ஏழு கிலோ மீட்டர்.அதனால் நிலையக் கழிறைக்கு சென்று திரும்பினேன்.பாரம் குறைந்தது.ஆனால் மற்றொரு பாரம் என்னை அழுத்தித்தள்ளியது.தடுமாறி நின்று கவனித்தேன்.
கழிவறை காம்பவுண்டுச்சுவரில் நாற்பதடி நீளம்,இருபதடிஉயரமுள்ள உலோக விளம்பர போர்டு சாத்தி வைக்கப்பட்டிருந்தது.அந்த இடைவெளில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தார் மொழுகிய உடல்,நான்கடி உயரம்,பழுப்பேறிய வேஷ்டி,தோள் தழுவிய சரடு படிந்த கேசம்,பலவருடங்களாய் முகமழியாத முடிக்கற்றைகள்.ஒட்டிய வயிறு.
எனக்கும் அவனுக்கும் தூரம் பத்தடி ,,,,,அவனுக்கும்அவனதுபார்வையிலிருந்து பதினை ந்தடி தொலைவில்முப்பதுவயதோஅல்லதுஅதற்கும்குறைவான தேகக் குறைவற்ற ஆறடி உயரம் அதற்க்கேற்ற சரியான அங்க வளர்ச்சியடைந்த பெண்,எலுமிச்சை நிறச்சேலை ,சேலையின் நிறத்திற்கேற்ப ஜாக்கெட் வலது தோளில் தோள்ப்பையுடன் பஸ்ஸிற்காக காத்திருக்கிறாள்.
அவனின் வலது கைக்கேற்றபடி அவனது உடலும் சேர்ந்து உச்ச நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.யாரும் யாரையும்நெருங்கவில்லை.ஆனாலும்அதுநிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.பயமோ,பதட்டமோஅவனிடம்தென்படவில்லை.மிகநிதானமாகஅந்தஅனுவனுவாய்  அந்தப்பெண்மீது பார்வையில் ஊடுருவி மேய்ந்து கொண்டிருக்கிறான். அவனைப் பார்க்கிற யாரும்பாவம்,பைத்தியம்,பிச்சைக்காரன்என்றுதான்பரிதாபம் கொள் வார்கள்.  நானென்ன யாரும் அவனை  தடுக்க முடியவில்லை.

1 கருத்து:

vimalanperali சொன்னது…

பேருந்து நிலையங்கள் இதுபோன்ற காட்ட்சிகளை அன்றாடம் பதிவு செய்ய வே செய்கின்றன.அதிலும் இன்னும், இன்னுமான மனப்பிசைவுகளு க் குள்ளான பதிவுகளும்,வலிகளும் நிறைந்த உலகத்தை அது காட்சிப் படுத்து ம் தருணம் மிகவும் சங்கடமேற்பட்டுப் போவதாய்.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.